ஒரு முதலமைச்சரின் தாய் ரேஷன் வாங்கி சாப்பிட்டார்


220px-K._Kamaraj

ஒரு முதலமைச்சரின் தாய் ரேஷன் வாங்கி சாப்பிட்டார்

எஸ். ராமகிருஷ்ணன் இணைய தளத்தில் 1961ல் சாவி காமராஜரின் தாயாரை எடுத்த பேட்டி வெளியாகி உள்ளது. அம்மா பேட்டியில் குறிப்பிடுவதில் இருந்து விருது நகரில் அவர் இருக்கும் வீட்டை காமராஜர் பிறக்கும் முன்பே அவரது அப்பா வாங்கி விட்டார். அதன் பிறகு காமராஜர் காலத்தில் எந்த விதமான வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. தம் சம்பளத்தில் இருந்து 120 ரூபாயை மட்டுமே தாயாருக்கு அவர் தந்தார். அதில் கணவனை இழந்த தம் மகள் மற்றும் அவரது குடும்பத்தையும் பெரியம்மாள் அவர்கள் காப்பாற்றி வந்தார். கம்பு, கேழ்விரகு சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. ரேஷனில் அதை வாங்கிச் சாப்பிட சிரமப்பட்டவர் அரிசிக்கு ஏற்பாடு செய்யும் படி மகனைக் கேட்டதற்கு அவர் மற்றவருக்கு எதுவோ அதுவே நமக்கும் என்று கூறி விட்டார். ஆறுமாதத்துக்கு ஒருமுறை தான் அவர் தாயாரைப் பார்க்க இயன்றது. தமது நேரம் முழுவதையும் அவர் தமிழ் நாட்டுக்காகவே செலவிட்டார். மகள் வயிற்றுப் பேரனுக்கு ஒரு வேலை வாங்கித் தரவில்லை என்றும் தாயார் மனக்குறை அடைந்துள்ளார்.

எட்டு வகுப்புக்குப் பின் சுதந்திரப் போரில் ஈடுபட்ட காமராஜர் அவர்கள் பொது வாழ்வில் எந்த ஒரு மாநிலத்துக்கும் ஆகச் சிறந்த முன்னுதாரணமாக அமைகிறார். தமிழ், தமிழன் என்று நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றிக் கொள்ளாமல் பெருமைப்பட மிகக் குறைவானவர்களே கிடைப்பார்கள். அதில் காமராஜர் முதலானவர். மதிய உணவுடன் கல்வி என்னும் அவரது திட்டம் பின்னாளில் விஸ்தரிக்கப் பட்டது. அவர் எந்த அளவு பொது மக்களை அடித்தட்டு மக்களை அவர்களது பிரச்சனைகளைப் புரிந்து வைத்திருந்தார் என்பதை நாம் காண வேண்டும்.

இன்று நடுநிலை பிறழாதவர், தன்னலமற்றவர், ஊழலற்றவர் என்று ஒருவரை எந்தத் துறையில் தேடினாலும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் கூடத் தேறுவதில்லை. இந்த நிலைக்கு குறுகிய நோக்குள்ளவர்கள் பொது வாழ்வில் மக்களை பிரித்தாளும் போக்குகளில் தலைமையை அடையும் பாரம்பரியம் வளர்ந்ததே காரணம். காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் பற்றிய அறிவு இளைய தலைமுறைக்கு இருக்க வேண்டும். அதற்கு பாடத்திட்டத்திலும் ,ஊடகங்களிலும் இத்தகைய அப்பழுக்கற்ற தலைவர்களின் தூய வாழ்க்கை மையப் படுத்தப் பட வேண்டும்.

காமராஜர் போன்ற அரிய தலைவர்கள் மொழி, இன, ஜாதி அடிப்படையில் அணுகப்படவே முடியாதவர்கள். நாம் குறுகிய நோக்கில் அவர்களுக்கு உரிய இடத்தைத் தர மறுக்கிறோம். நஷ்டம் நமக்குத்தான்.

(image courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to ஒரு முதலமைச்சரின் தாய் ரேஷன் வாங்கி சாப்பிட்டார்

  1. Mohd Safi says:

    தலைப்பை படித்தவுடன் அது காமராஜர் அய்யாவாக தான் இருக்கும் என நினைத்தேன் சரியாக ஆகி விட்டது அவரை போல இன்னொரு தலைவன் மீண்டும் வர போவது இல்லை

  2. Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s