மூன்றரை அடி உயரம் போதும் தன்னம்பிக்கை இருந்தால்


images

 

மூன்றரை அடி உயரம் போதும் தன்னம்பிக்கை இருந்தால்

ஜோபி மேத்யூ என்னும் மாற்றுத் திறனாளியின் உயரம் மூன்றரை அடி தான். கால்கள் மற்றும் வித்தியாசமாக சிறியவை. கைகள், தோள் சாதாரணமாக இருப்பதால் அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான பல வேறு உலக அளவிலான போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். அவர் வென்றுள்ள பரிசுகளின் பட்டியல்.

2013 – USA World Dwarf Games – 5 Gold
2012 – World Arm Wresting Championship Spai – 1 gold in differently abled category, 2 Silver in normal category
2010- Paray Olympic Badminton – Israel – Silver in Singles.
2009- World Arm Wrestling Championship Egypt- 2 silver
2008-World Arm Wresting Championship Spain – 1 gold in normal category and 1 silver in differently abled category.
2005-World Arm Wrestling Championship Japan – 3 Bronze
அவர் மல்யுத்தத்தில் சாதாரணமானவருடன் போட்டியிட்டுப் பரிசு வென்றதைக் காண்கிறோம். மல்யுத்தம் தவிர ‘பேட் மிண்டன்’ போட்டியிலும் அவர் பரிசுகள் வென்றிருக்கிறார்.

ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த அவர் வறுமை காரணமாக ஒரு கருணை இல்லத்தில் சேர்க்கப் பட்டார். தினமும் நான்கு கிமீ தொலைவு கைகளால் நடந்து சிறு நீரோடைகளையும் கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு. அப்படிப் போராடிக் கல்வி கற்றதால் பின்னாளில் மிகப் பெரிய சாதனைகளை விளையாட்டுத் துறையில் நிகழ்த்த இயன்றது அவரால். BPCL என்னும் அரசு நிறுவனத்தின் உதவியுடனேயே அவர் உலகப் போட்டிகளில் பங்கேற்றார்.

விளையாட்டுத் துறைக்கான அமைச்சகத்திலிருந்து தமக்கு மற்றும் மாற்றுத்திறனாளி வீரருக்குக் கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை எனபதே இவர் மனக்குறை.

ஒரு மகனின் தந்தையான இவர் தமது உடலில் இருந்த குறைபாடு எந்த விதத்திலும் தன் கல்வி, விளையாட்டுத் திறன் அல்லது மணவாழ்க்கையைப் பாதிக்காதபடி தமது தன்னம்பிக்கையால் நிமிர்ந்து நிற்கிறார். எவரெஸ்ட் ஏறத் தேவையான பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள். அவரது எவரெஸ்ட் கனவு வெல்லட்டும்.

(News Cortesy: The week, Image Courtesy: Face Book)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s