விலைமகளிரே, உங்களுக்கு ஒரு ஆலயம் -சிறுகதை


images
விலைமகளிரே, உங்களுக்கு ஒரு ஆலயம் -சிறுகதை

இனிய உதயம் செப்டம்பர் 2013 இதழில் சுரா மொழிபெயர்த்துள்ள மற்றொரு மலையாள சிறுகதை “விலைமகளிரே, உங்களுக்கு ஒரு ஆலயம்”. கதை என்று ஒன்றுமே இல்லாத ஒரு வடிவம். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இப்படி ஒரு வடிவத்தில் ஒரு கதை எழுதுவது இலக்கியத்தின் நவீன வடிவத்துக்கு வாசகனுடன் எழுத்தாளர் பயணிக்கும் முன்னேற்றம். எம்.முகுந்தனின் சிறுகதை இது.

டெல்லியில் ஒரு திருமணமாகாத இளைஞன். தன் வருமானம் முழுவதையும் விலைமாதருடன் செலவிடுகிறான். அவன் அவர்களை புண்ணியவதிகளாகக் காண்கிறான். தேவதைகளாகக் காண்கிறான். கதையின் இந்தப் பகுதியை அப்படியே தருகிறேன். ஹரித்வாரில் மானஸ்தேவி மந்திர் என்னும் கோயில் ஒரு சிறிய மலையின் மீது உள்ளது. அங்கே அவன் அம்மனின் முன் கொள்ளும் மன ஓட்டம் இது:

“தேவி நான் உனக்காக மலர்கள் கொண்டு வரவில்லை. என்னிடம் வாசனைப் பொருட்களும் இல்லை. மலர்களுக்கும் வாசனைப் பொருட்களுக்கும் பதிலாக நான் அவை எல்லாவற்றையும் விட மிகவும் புனிதமான விலைமகளை அழைத்து வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்”.

மற்றொரு பத்தியில் தான் ஏன் ஒரு விலைமாதுவின் மகனாகப் பிறக்கவில்லை என்று அவன் வருந்துகிறான். உலகத் தலைவர்கள், இறை தூதர்கள் பெயரையெல்லாம் கூறி அவர்களுக்கும் ஏன் அது நடக்காமல் போனது – அது எத்தகைய துயரம் என்று யோசிக்கிறான். இப்படியெல்லாம் யோசித்து விட்டு அவன் ஹரித்வாருக்கு ஒரு விலைமாதுவுடன் சென்று வழிபட்ட பின் இருவரும் கங்கையில் நீராடும் போது கங்கையோடு கலந்து வங்காள விரிகுடா நோக்கிப் போகிறார்கள் என்று கதை முடிகிறது.

ஜெயகாந்தன், பிரபஞ்சன், தி.ஜானகிராமன் இவர்கள் கதையில் எல்லாம் வரும் விலைமாதர் அனைவரும் அறிவு ஜீவிகளாக இருப்பார்கள். அவர்கள் அப்படி ஆதரவாகவும் அறிவு ஜீவியாகவும் இருப்பது இதமாக இருக்கும். சற்றே குரூரமான அணுகு முறை இது.

உண்மை முற்றிலும் வேறு. வலுக்கட்டாயமாகப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டு ஒரு மாபியா அல்லது தாதா போன்ற பலமுள்ள மட்டமான ஒரு ஆளின் அல்லது குழுவின் கையில் மாட்டிக் கொண்டு விடுபடவே முடியாமல் இது தான் விதி என்று வாழ்பவர்கள் பரிதாபத்துக்குரிய விலைமாதர்கள். இவர்கள் அறிவுஜீவியாக ஒளி வீச வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ கற்பனையில் வரிந்து கட்டுவதோ ஆணாதிக்க சிந்தனையே.

முகுந்தனின் கதையில் அவர்கள் தேவதைகளாகவே திரிகிறார்கள். அபத்தத்தின் உச்சகட்டம் இது.

எழுத்தாளரோ அல்லது சாதாரணமானவரோ ஒவ்வொரு ஆணுக்கும் தோழியாக ஒரு பெண் தேவைப்படுகிறாள். அவள் மனைவியாக இருக்க வாய்ப்பில்லை. உறவுக்குள்ளும் இருக்க வாய்ப்பில்லை. அந்தத் தோழி அறிவு ஜீவியாகவும், உடலுக்கும் உபயோகமானவளாகவும் இருந்தால் நல்லது. முகுந்தனுக்கு அவள் தேவதையாகவும் இருக்க வேண்டும்.

குடும்பம் என்னும் அமைப்பில் உள்ள எல்லா நிலைகளுமே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானவை. அவர்கள் சமூகத்தில் மரியாதையாக நடத்தப்படுவதும் குடும்ப அமைப்பின் உட்பட்டே. இதை திருமணமாகும் வரை ஒரு பெண் மிகப் பெரிய கனவாக மனதில் சுமக்கிறாள். விலைமாதருக்கு இந்தக் கனவே மறுக்கப் படுகிறது.

ஆணாதிக்க மனப்பான்மையில் எழுத்தாளர்கள் விதிவிலக்கா என்ன? விலைமகள் திருமணம் செய்து கொண்டாள் என்று வந்த கதை ஒன்று என்றால் அவள் அவ்வாறே இருந்தாள் – நான் அவ்வப்போது சென்று ஆறுதல் அடைந்தேன் என்பதே மீதி 99 கதையும். ஆண்களின் சிந்தனை மாற இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ.

(image courtesy: stockfreeimages.com
)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s