உலகின் மிகப்பெரிய சூரிய எரி சக்தி உற்பத்தி அமைப்பு இந்தியாவில்


PS10_solar_power_tower

BHEL நிறுவனம் உலகிலேயே பெரிய சூரிய ஒளி மின்சார மையத்தை உருவாக்கப் போகிறது என்னும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தருவது செய்தி. ஜெய்பூர் நகரிலிரிந்து சுமார் 75 கிமி தூரத்தில் 23000 ஏக்கர் பரப்பளவில் இது உருவாக இருக்கிறது. 4000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இதன் முதல் கட்ட முடிவில் 2016ல் 1000 மெகாவாட் உற்பத்தி துவங்கி விடும். ஆண்டுக்கு 600 கோடி மின்சார யூனிட் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2022ல் சூரிய ஒளி மின்சக்தி 20000 மெகாவாட் திறனுக்கு உயரும் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்பது மற்றொரு இனிய செய்தி.

அனல் மின்சாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரிப்புகை வளி மண்டலத்தில் ஓசோனை பாதித்து உலக வெப்பமயமாதலைத் துரிதப் படுத்துகிறது என்னும் ஒரு குற்றச் சாட்டு உலக அளவில் உள்ளது. அணு மின்சாரம் ஆபத்தானதே. வேறுவழியே இல்லை என்றால் மட்டுமே நாடப் பட வேண்டியது.

இந்தியத் தட்பவெப்பம் சூரிய மின்சாரத்துக்கு மிகவும் உகந்தது. வருடத்தில் 9 மாதம் மிதமிஞ்சிய வெய்யில். அதைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் சற்றே செலவு பிடித்தாலும் நமக்கு ஏற்றது. மக்கள் அதிக உபயோகம் செய்யும் பட்சத்தில் அதிக விலை கொடுத்தே மின்சாரத்தைப் பயன்படுத்தட்டும். பெரிய தொழில் நிறுவனங்கள், வணிக வளாக அமைப்புகள், மருத்துவமனைகள், உணவகங்கள் ஆகியோர் தமது தேவைக்கு ஏற்ற சூரிய மின்சாதனத்தைப் பொருத்தி தன்னிறைவு காணலாம்.

பசுமை வழியில் இது முக்கியமான துறை. இதில் பணிபுரிய பட்டப் படிப்பு, பயிற்சிக்கான ஏற்பாடு இவற்றை அரசாங்கம் உறுதி செய்தால் பராமரிப்பில் பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் ஆகியவையே நமக்கு நிரந்தரமான மின்சக்தி ஆதாரங்கள்.

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரிய அரசின் நல்ல முயற்சி இது.

(image courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s