ஒரு வேளை இதுவே வாழ்நாளுக்குமான வழிகாட்டுதல்


large

ஒரு வேளை இதுவே வாழ்நாளுக்குமான வழிகாட்டுதல்

All human wisdom is contained in these two words–“Wait and Hope.”
― Alexandre Dumas, The Count of Monte Cristo

பொதுவாக Wisdom என்னும் வார்த்தைக்கு ஞானம் என்னும் சொல்லே தமிழில் ஈடான வார்த்தையாகப் பயன்படுத்தப் படுகிறது. உண்மையில் அது சரியான வார்த்தை கிடையாது. மனமுதிர்ச்சியுடன் கூடிய அறிவு என்று சுற்றி வளைத்து வேண்டுமானால் சொல்லலாம்.

இரண்டே இரண்டு வார்த்தைகளின் மனிதனின் மெய்யறிவு அடங்கி விடுகிறது என்கிறார் அலெக்ஸாண்டர் ட்யூமாஸ். காத்திருத்தலும் நம்பிக்கையும்.

நாம் எப்போது காத்திருக்க ஒப்புகிறோம். இரண்டு விதமான சூழ்நிலைகளில் – ஒன்று வேறு வழியே இல்லா விட்டால். மற்றொன்று (வேறு வழி இருந்தாலும்) நமது அடங்காத ஆசையால்.

என் ஆசை நிறைவேற நான் காத்திருக்க வேண்டுமென்றால் காத்திருப்பேன். உண்மையில் இந்த இரண்டு தருணங்கள் இல்லாமல் காத்திருக்கும் இதை விட மேம்பட்ட தருணத்தைப் பார்ப்போம். புத்தர், ரமணர் இருவருக்குமே உடனே ஞானம் சித்திக்கவில்லை. இருவருமே நம்பிக்கை இழக்காமல் காத்திருந்தனர். காந்தியடிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று தெரியும். ஆனால் அது கத்தியின்றி ரத்தமின்றித்தான் வர வேண்டும் வரும் என்னும் தீர்மானமும் நம்பிக்கையும் அவரிடம் இருந்தது. அவர் காத்திருந்தார். (அரசியல் ரீதியாக வேறு சில நடந்தன. நாம் அவரது மன உறுதி மற்றும் லட்சியத்தின் மீதிருந்த அசைக்க முடியாத பிடிமானம் இவற்றை மற்றும் இங்கே எடுத்துக் கொள்வோம்).

கட்டாயமில்லை. அதே சமயம் நாம் நினைத்தது ஈடேறுமா என்று தெரியவில்லை. எனவே அப்போது நம் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் நம்பிக்கையில் உறுதியாகவும் காத்திருப்பதில் மன வருத்தமோ பதட்டமோ இன்றி இருப்போம்.

எப்போது அந்த நம்பிக்கை வரும்? இன்னொரு மனிதன் எனக்கு இது செய்து தருவான் என்று அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க முடியுமா? கண்டிப்பாக இல்லை. எல்லா மனிதருமே நம்மைப் போலவே நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்பவரே.

சரி. பரம்பொருள் நான் நினைத்ததையெல்லாம் நடத்தித் தருவார் என்று கூற முடியுமா? முடியாது. அவர் எப்போது பாடம் கற்பிக்கிறார் எப்போது தட்டிக் கொடுக்கிறார் என்பதே பெரிய புதிர். அவர் மனதை அறிந்து கொள்ளும் அளவு அகந்தை இல்லாத மனமும் நமக்குக் கிடையாது.

அசாத்தியமான பொறுமையுடன் காத்திருக்கும் நம்பிக்கை எப்போது தான் வரும்?

நான் எடுத்த பணி இந்த சமுதாயத்துக்கே நலம் பயப்பது. ஒருக்காலும் என் பணியில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். நல்ல லட்சியத்துக்கான உதவி எங்கிருந்தாவது கிடைக்கும். எப்படியும் இந்தப் பணி நிறைவேறும் என்னும் தார்மீக மனோபலம் வரும் போதே அது சாத்தியம். அறத்தின் அடிப்படையிலான நம்பிக்கையும் பொறுமையும் மலையை விட உயர்ந்தும் உறுதியாகவும் இருக்கும்.

தன்னலமும் பேராசையும் மிகும் போது பொறுமை போய் பதட்டமும் நம்பிக்கை போய் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடைப்பட்ட ஊசலாட்டமுமே மிஞ்சுகின்றன. பொறுமையும் காத்திருத்தலும் எந்த ஒரு சிறு அழுக்கும் அதனால் ஆன அவசரமும் இருந்தாலும் அவற்றை மனதிலிருந்து நீக்கி விடுகின்றன. நம்பிக்கை எப்போதுமே உள்ளிருந்து ஆழ்ந்து வேர் விட்டு உறுதியாக வருவது. அதற்கு வெளியுலகத்தின் உத்தரவாதமும் தருக்கரீதியான அடிப்படைகளும் தேவையே இல்லை.

பண்பட்ட ஒரு மனம் தன் நல்ல லட்சியம் நிறைவேற நம்பிக்கையுடன் காத்திருப்பதையே மிகப் பெரிய இன்ப அனுபவமாகக் காணும்.

என் மகள் இந்தப் பொன் மொழியை மின்னஞ்சலில் அனுப்பிய போது பதில் அனுப்பினேன்: “excellent and this can be the guiding principle for a life time”

(image courtesy: weheartit.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s