எங்கள் ஊரின் பெருமாள் மலை


2013-09-28 08.33.12

2013-09-28 08.29.59

2013-09-28 09.01.46
எங்கள் ஊரின் பெருமாள் மலை

நான் வளர்ந்த ஊர் துறையூர். (திருச்சி பெரம்பலூர் இரண்டுக்குமே 40 கிமி தள்ளி) கடுமையான தண்ணீர் பஞ்சமும் உள்ளூருக்குள் போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தோம் நாங்கள் அனைவரும். ரெட்டியார் துறையூர் என்று குறிப்பிடும் அளவு அந்த ஜாதிக்காரர்கள் அதிகம். அதே சமயம் எல்லா ஜாதியைச் சேர்தவர்களும் ஒன்றாகப் புரட்டாசி மாதத்தில் 4 அல்லது 5 சனிக்கிழமைகள் பெருமாள் மலையில் ஏறி மலை மேலு:ள்ள பிரசன்ன வெங்கடாஜலபதியை வழிபடுவது பல தலைமுறைகளாகத் தொடர்கிறது.

மலையில் ஏறி இறங்கி கிரிவலமும் செய்திருக்கிறோம் சிறுவயதில். அப்போது மலையில் படிகளில் ஏறி மட்டுமே செல்ல முடியும் 1500 படிகள். படிகள் பாதி மலைக்குப் பிறகு செங்குத்தாக இருக்கும். இப்போது மலைக்கு மேலே செல்ல வாகன வசதி சாலை வசதி உண்டு. இப்போதும் படி ஏறி மலைக்குச் செல்லும் மக்கள் கூட்டம் கணிசமாக இருக்கும். ஒரு முறை என் பெற்றோர் கும்பலில் எங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் ஒரு மணி நேரம் இடைவெளி வந்து விட்டது. சிறிய ஊர் என்பதால் விரைவில் நாங்கள் கண்டுபிடிக்கப் பட்டோம். அப்போது கடவுளுக்கு படைத்த மாவிளக்கு மாவு என்னும் பிரசாதத்தையும் தேங்காய்த் துண்டுகளையும் தன் குழந்தைகளுடன் சேர்த்து எனக்கும் என் சகோதரனுக்கும் தந்தார் ஒரு தாய். அவர் என்ன ஜாதி என்பதோ நான் என்ன ஜாதி என்பதோ பொருட்டாகவில்லை. ஆண்களின் தோள் மீது சிறிய குழந்தையும் பெண்களின் தலை மீது துணியால் மூடி சுற்றி வைக்கப் பட்ட வெண்கலத் தட்டில் மாவிளக்குக்குத் தேவையான படையல் பொருட்களும் இருக்கும். ‘கோவிந்தா, கோவிந்தா” என்று அவர்கள் குரல் கொடுத்தபடி மலை ஏறுவதைக் காணும் போது கிராமப்புறத்தின் கடவுள் மீதான பூரணமான நம்பிக்கை வெளிப்படும். அவர்களின் இடைப்பட்டு அவர்களில் ஒருவனாக வெவ்வேறு கால கட்டத்தில் அங்கே வழி பட்டிருக்கிறேன். உருவ வழிபாடு தேவையா? எல்லாம் வல்லவர் மதம் என்னும் சிறிய வட்டதுக்குள் அடைபடுவாரா என்னும் சிந்தனைகள் வந்து தேடல் தொடர்கிறது. ஆனால் பெருமாள் மலையில் காலை வைத்தாலே குழந்தைப் பருவத்தில் (என் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்த போது) ஊரோடு சேர்ந்து அங்கே வழிபட்ட) அந்த நம்பிக்கையின் ஒளி என்னுள் எழுகிறது. மலையில் ஏறும் தெம்பு இந்த வயதிலும் எனக்கு இருப்பது ஒருவேளை நம்பிக்கையின் காரணமாக இருக்கலாம். குழந்தைப் பருவத்தைத் தாண்டி நம் மனோவலிமை புதிதாக உருவாக வேண்டும் என்று எழுதி இருக்கிறேன். அதுவே இப்போதும் என் கருத்து. ஆனால் அடிப்படையில் நாம் எந்த மண்ணில் இருந்து வந்தோமோ அதன் நற்பண்புகளையும் மாண்புகளையும் ஒரு நாளும் மறக்கக் கூடாது.

கல்லூரி நாட்களின் பின்னர் சென்னைக்கு வந்ததால் வருடா வருடம் மலைக்கு போவது என்பது பெரிய சவாலானது. நான் எப்போது ஊருக்குக் கிளம்பினாலும் குழந்தைகளும் வருவேன் என்பார்கள். சில சமயம் புரட்டாசி மாதத்தில் அவர்களது காலாண்டுத் தேர்வு நாட்களாயிருக்கும். அவர்களுக்கு உடல் நலம் ஒத்து வராது இப்படிப் பல காரணங்கள். கடந்த சில வருடங்களாகவே நான் மலைக்குச் செல்லத் துவங்கினேன். அலுவலகத்தில் கடமையை மறந்து சக ஊழியருடன் சதா பிரச்சனைகள் செய்து நிர்வாகத்துக்கோ அல்லது மக்களுக்கோ உண்மையாயில்லாமல் “சரஸ்வதி பூஜை” மட்டும் உற்சாகமாகக் கொண்டாடுவோரின் நடுவே எப்போதும் நான் மிகவும் மனவருத்தத்துடன் கடனே என்று நிற்பேன். துறையூர் மக்களுடன் பெருமாள் மலையில் ஏறும் போது என்மனம் அப்பழுக்கற்ற நம்பிக்கையை எனக்குள் மீட்டெடுக்கிறது.

(இந்த அனுமான் விக்கிரகம் புராதனமானது அல்ல. மலை அடிவாரத்தில் புதிதாக வந்துள்ளது)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in பயணக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s