ஐந்து பெண் கவிஞர்கள்


download
ஐந்து பெண் கவிஞர்கள்

காலச்சுவடு அக்டோபர் 2013 இதழில் ஐந்து பெண் கவிஞர்களின் கவிதைகளைக் காண இயன்றது. இதை ஒரு சாதனை என்றே காலச்சுவடு இதழைப் பாராட்டலாம். தொடர்ந்து இயங்கும் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அதிலும் கவிஞர்கள் அனேகமாக யாருமே இல்லை எனலாம். ஐவரும் புதிய கவிஞர்களாகவே இவர்கள் காணப் படுகிறார்கள்.

பெண்ணின் உலகமும் ஆணின் உலகமும் வெவ்வேறானவை. இதில் என்ன அதிசயம் என்று கேட்கலாம். பெண்ணின் உலகுக்கும் ஆணின் உலகுக்குமான இடைவெளி இருவராலும் எப்போதுமே கடக்க முடியாதவை. தேவையின் அடிப்படையில் ஒரு இணைப்புப் புள்ளி தற்காலிகமாகக் கிடைக்கலாம். அவ்வளவே. அது தற்காலிகமானது மட்டுமல்ல. நகர்ந்து கொண்டே இருப்பது. நகர்ந்து நகர்ந்து ஒரு நிலையில் மறைந்து விடுவது.

பெண்ணைப் பற்றியும் ஆணைப் பற்றியும் வானின் கீழுள்ள எல்லா விஷயங்கள் பற்றியும் நானே எழுதுவேன் என்னும் இறுமாப்பிலும் சகிப்புத்தன்மை இன்மை மற்றும் ஆணாதிக்க மனப்பான்மையிலும் ஆண் எழுத்தாளர்கள் பெண் எழுத்தாளர்களைக் காலம் காலமாக ஓரங்கட்டி விட்டார்கள். இத்தனையையும் மீறி வெளிவந்துள்ள ஐந்து பெண் கவிஞர்களை அவர்களது கவிதைகளின் வழி அறிமுகம் செய்து கொள்வோம்.

அனார்

நீலத்தேன், மாபெரும் உணவு மேசை, சந்திர கிரஹணத்தின் சர்ப்பம் என்னும் மூன்று கவிதைகளில் மாபெரும் உணவு மேசை யாராலுமே எளிதாக அணுகக் கூடியது. பெண்ணின் பல உடல் உறுப்புகள் உணவுத் தட்டுகளில் பரிமாறப் படுகின்றன.

நீலத்தேன் என்னும் கவிதை ஆழ்ந்த பொருளுள்ளது. நீலம் என்னும் நிறம் விஷத்துடன் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள வேண்டியது. தேனிக்கள் சுறுசுறுப்பானவை. ஆணின் குறியீடாக தேனீக்கள் இந்தக் கவிதையில் வருகின்றன. அவைகளின் சுறுசுறுப்பும் அதன் பயனான தேனும் அவைகளுக்கு எப்போதும் முக்கியத்துவத்தைத் தந்து விடும். மகரந்தச் சேர்க்கை, மலர்வது, வாடி உதிர்வது, காயாகிக் கனியாவது இவை அனைத்துமே வலி மிகுந்தவை. பெண்ணின் வெவ்வேறு நிலைகளை இந்த வரிகள் சுட்டும்:

கண்ணீர்த் துளிகளே தூக்கிப் பறக்கின்ற
மகரந்தக் கூடைக்குள்
மெழுகுவதைகளை உருக்கவல்ல
வெம்மையான நினைவுகள் இருக்கக் கூடும்

சந்திர கிரஹணத்தின் சர்ப்பம் பெண்ணின் மிகவும் நுட்பமான நாசூக்கு உணர்வுகள் தொடர்புடையது. பெண்கள் சொற்களை எதிர் கொள்ளும் விதம் மிகவும் நுட்பமானது.

மூளையின் முடுக்களில்
ஊர்ந்து கொத்தும்
உன் வார்த்தைக்குள்ளிருந்த சர்ப்பம்

(தொடர்ந்து வாசிப்போம்)

ஐந்து பெண் கவிஞர்கள் -2

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , . Bookmark the permalink.

1 Response to ஐந்து பெண் கவிஞர்கள்

  1. வணக்கம்
    ஐயா
    தொகுப்பு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s