அமெரிக்கா குறித்த சர்ச்சையின் மறுபக்கம்


panasonic-telephone-instruments-250x250

அமெரிக்கா குறித்த சர்ச்சையின் மறுபக்கம்

அமெரிக்கா பல உலக நாட்டுத் தலைவர்கள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டிருக்கிறது என்பது ஊர்ஜிதம் ஆகி விட்டது. 35 உலகத் தலைவர்களின் 200 தொலை பேசிகள் உளவு பார்க்கப் பட்டிருக்கின்றன. இவர்களில் பல ஐரோப்பிய மற்றும் தென்னமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளே. இது குறித்து அமெரிக்காவுக்கு எந்த வருத்தமுமில்லை. வெட்கமுமில்லை. பெரிய எதிர்ப்பும் எதுவும் இல்லை. ஏன் என்றால் அமெரிக்கா உயர்ந்த பாரம்பரியமான உலக அரசியலுக்குப் பெயர் போனதல்ல. அது அடாவடியான நடவடிக்கைகளுக்கு அஞ்சாத ஒரு ஆதிக்க சக்தி என்பதால் உலகம் அஞ்சிப் பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை.

உலக நாடுகளிடம் பெரிய எதிர்ப்பு இப்போது இல்லை என்பது மட்டுமல்ல. இனிமேலும் இருக்காது என்பதே உண்மை. ஏன் இதை லேசாக எடுத்துக் கொள்கிறார்கள்?

வளர்ந்த நாடுகளில் அமெரிக்க நேச நாடுகளைப் பொருத்த அளவில் அவர்களுக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கலாம். அவர்களில் சிலர் இதில் பங்காளிகளாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும்.

வளரும் நாடுகளுக்கு ஏற்கனவே திருவள்ளுவர் “அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என்?” என்று போதனை கூறி விட்டார்.

இதைத் தவிரவும் வேறு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் தலையானது ஊழல். பல நாடுகளின் தலைமை ஊழலில் ஊறி இருக்கிறது. சுவிஸ் வங்கியை அணுகி கருப்புப் பணத்தைப் பெரிய அளவில் எந்த நாடுமே கொண்டு வரவில்லை. இன்று அமெரிக்காவை எந்த நாட்டுத் தலைவனாவது எதிர்த்தால் பதிலுக்கு அவன் தொலைபேசி வழியே செய்த தேச விரோத காரியங்களை அமெரிக்காவே வெளிப்படுத்தும் ஆபத்து அதிகம். அமெரிக்காவின் ஆயுத பலமும், ஐநாவில் அதன் செல்வாக்கும் மற்றொரு காரணம். ஆயுத பலத்தைத் தவிரப் பன்னாட்டு நிறுவனங்கள் அதாவது வணிக மற்றும் நிதி நிறுவனங்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டவை. அவை உலக நாடுகள் அனைத்துக்கும் குறிப்பாக அவற்றின் அதிகார மையங்களுக்குப் பல வகையிலும் உதவி வருபவை.

இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஒரே காரணம். உலக அளவில் வெவ்வேறு நாடுகளை இணைக்கும் மனித நேய அடிப்படையிலான இலட்சியம் எதுவும் இல்லை. பங்களாதேஷோ, நேபாளமோ, இலங்கையோ எப்படி நாசமாகப் போனாலும் இந்தியக் குடிமகனுக்கோ அவனது அரசுக்கோ அக்கறை கிடையாது. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் கொசுப் பண்ணை போல தீவிரவாதிகளின் பண்ணையை வைத்திருப்பதில் பெருமை. ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகள் சிறிய பெரிய அளவில் இனவெறி கொண்டவை. எல்லா நாடுகளிலுமே பழங்குடியினரை நசுக்கும் போக்கு உண்டு. கம்யூனிச நாடுகளில் கம்யூனிசமே அழிந்தாலும் பரவாயில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கவே கூடாது.

மனித உரிமைகள், குழந்தைகள் நலம், பழங்குடியினருக்குத் தம் பண்பாட்டைக் காத்துக் கொள்ளும் உரிமை, குழந்தைகள் பெண்கள் கல்வி மற்றும் உரிமைகள் இவற்றில் உலக நாடுகள் எதற்குமே அக்கறை கிடையாது. மனித இனம் உருப்பட ஒன்று படும் எண்ணம் பெரும்பாலான சிறிய பெரிய நாடுகளுக்கு இல்லை.

இதனால் தான் அமெரிக்காவின் அட்டகாசத்தைக் கேட்க நாதி இல்லை.

உலகின் மனசாட்சியாக என்றுமே செயற்படுவது நல்ல எழுத்தாளர்களும் கலைஞர்களுமே. அவர்கள் குரல் சாதக பாதகங்களை எதிர்பாராமல் எப்போதும் ஒலிக்கும். அது ஆயுதங்களை விட பலமானது. மனித இனம் தன் செவிகளை அதற்குத் தரும் போது அராஜக நாடுகள் திருந்தும்.

(image courtesy: indiamart.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அமெரிக்கா குறித்த சர்ச்சையின் மறுபக்கம்

  1. tamil says:

    good article

  2. anbeshivam says:

    இனி எப்போதும் மனித சமூகம் திருந்தும் என்ற எண்ணமே நமக்கு வேண்டாம். நாம் அழிவின் விளிம்பில் இருக்கிறோம்… அழிந்து விடுவதே நல்லது..

    • பெரிய அறை இருண்டு கிடந்தாலும் ஒரு சிறு விளக்குச் சுடர் அந்த இருட்டு முழுவதையும் விரட்டி விடுவது போல சமூக நலம் விரும்பிகள் எண்ணிக்கையில் குறைவாயிருந்தாலும் அவர்களே நன்னம்பிக்கையுடன் உலகம் முன் செல்லக் காரணம். உலகம் திருந்தும். தாமதமாயிருந்தாலும் தவறாமல் திருந்தும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s