WWE பார்க்கும் விடலைகளை விட மட்டமான ரசனை கொண்ட அப்பன்கள்


randy-orton-taking-down-the-wwe-champion-john-cena_l

WWE பார்க்கும் விடலைகளை விட மட்டமான ரசனை கொண்ட அப்பன்கள்

பல சமயங்களில் WWE என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஆள் இன்னொரு ஆளை அடி அடி என்று அடிப்பதை ரசிக்கும் விடலைகளைக் கண்டு வியப்பும் வேதனையும் அடைந்திருக்கிறேன். அமெரிக்காவில் இப்படி ஒரு ரசனை இருப்பதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவில் இதற்கு வரவேற்பு இருப்பது விபரீதமே.

ஆனால் இதை விட ஒரு மட்டமான வம்புக்கு அலையும் அப்பன்களைப் பார்த்திருக்கிறேன். வதந்திகளையும் யூகங்களையும் வெளியிடும் மட்டமான அரசியல் பத்திரிக்கைகள் புற்றீசல் போல வந்து விட்டன. ஒரு பிரபல வாரப் பத்திரிக்கையே இப்படி வரும் காசுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவது மகா கேவலம். அதன் போட்டிப் பத்திரிக்கை பற்றிக் கேட்கவே வேண்டாம். அது எது வரை வேண்டுமானாலும் போகத் தயாரானது.

சரி விஷயத்துக்கு வருவோம். அப்படி என்ன இந்த வம்புக்கு அலைவதில் கேவலமான ருசி இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். பல சமயங்களில் எழுத்துச் சுதந்திரம் அல்லது கருத்துச் சுதந்திரம் எந்த அளவு துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது – இவர்களைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்று கூடத் தோன்றும்.

ஒரு குடும்பத்துக்குள் இல்லாத அதிகாரப் போட்டியா? பேரங்களா? ஒரு குடியிருப்பு அல்லது தெருவில் பொது இடத்தை ஆக்கிரமிக்க எத்தனை போட்டிகள்? அதிகாரப் போட்டி அரசியல் கட்சிகளுக்குள்ளோ அல்லது ஆளும் அரசின் பல்வேறு முக்கிய புள்ளிகளுக்கு நடுவேயோ இருக்காமலா போய் விடும்? அப்படி இருப்பது ஆரோக்கியமானதா இல்லையா என்பது ஒரு பக்கம். இதில் என்ன இத்தனை ஆர்வம் என்பதே நம் கேள்வி.

இந்த ஆர்வம் மட்டமான மனிதர்கள் தான் எல்லோரும் என்று நிறுவும் ஆர்வம். ஏன் அப்படி நிறுவ வேண்டும்? அரசியல்வாதிகள் பற்றி வாய் ஓயாமல் வம்பு பேசி மட்டமாகப் பேசி அப்படிப் பேச சரக்கு வேண்டும் என்று 10 ரூபாய் 20 ரூபாய் கொடுத்து வதந்திப் பத்திரிக்கைகளை வாங்கி நேரத்தை வீணடித்துப் படித்து அலசுகிறார்கள். அனேகமாக இவர்கள் அனைவருமே நடுத்தர வர்க்கத்து ஆண்கள் அதே வர்க்கத்தின் வயதான பெண்கள். (இளம் பெண்களுக்கு வேறு வம்புகள் அடிக்க வாய்ப்புண்டு). எழுத்து, கலை, பிறர் நலன் பேணல் என்னும் வழிகளில் வித்தியாசமாகப் போகிறவர்கள் இல்லாமல் இல்லை. வருத்தத்துக்குரியது அவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.

ஒரு பக்கம் அரசியல்வாதி மட்டமானவன் என்று பேசுவார்கள். மறுபக்கம் அந்தக் கட்சியில் இந்தப் பிரச்சனை. நாளை இப்படி எல்லாம் கூட்டணி வரப் போகிறது என்று ஆர்வம் காட்டுவார்கள். மட்டம் என்று இவர்கள் கூறும் அரசியல்வாதியை ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் கட்டாயம் போய்ப் பார்ப்பார்கள்.

எங்கே இருந்து வந்தார் இந்த அரசியல்வாதி ? வானத்தில் இருந்தா? செவ்வாய் கிரகத்திலிருந்தா? இல்லை. நம்மிடையே இருந்து தான்.

எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் கஷ்டப்பட்டால் மனதுக்குள் மத்தாப்பு. அவ்வளவு ஏன்? சொந்த சகோதரன் நொந்து போனாலும் கண்டு கொள்ளவே மாட்டேன். லஞ்சமோ, ஊழலோ அல்லது என்ன வேண்டுமானாலும் செய்து எனக்கு ஆதாயம் கிடைத்தால் சரி.

ஆனால் என் ஓட்டு விழுந்த அரசியல்வாதி மட்டும் அப்பழுக்கற்றவனாக புடம் போட்ட தங்கமாக இருக்க வேண்டும். எப்படி அது சாத்தியம்?

அவனுடைய கட்சிக்குள்ளோ குடும்பத்துக்குள்ளோ என்ன நடந்தால் எனக்கென்ன? ஏன் இந்த ஆர்வம்? உறவினர், விருந்தினர், ரயிலில் உடன் பயணிப்பவர் யாரிடமும் அந்த வதந்தி தெடும் வியாதியை வெளிப்படுத்துவது வெட்கமின்றி நிர்வாணமாக நிற்பது போல. யாரைப் பார்த்தாலும் அரசியல் வம்படிக்க வேண்டும். ஒரே அரிப்பு. மக்கள் நலனைப் பேண அரசியல்வாதியே ஒரே வழி என்னும் பிரமை இதன் மற்றொரு பலவீனம்.

மக்கள் நலன் பேணப்பட ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

நல்ல பிரதமர்? நியாயமான மந்திரிகள்? கட்டாயம் இல்லை.

என்னதான் அந்த வழி ? அந்த ஒரே வழி மக்களின் விழிப்புணர்வே. மக்களின் பொறுப்புணர்வே. அதைப் பிரதிபலிக்கும் ஊடங்கங்களே. மக்கள் விழிப்புணர்வு உச்சமாக இருந்தால் ஆட்சியில் அமர்பவர் ஒவ்வொரு நாளும் கத்தி மீது நடப்பது போல இயங்குவார்.

இன்று மலிவான ரசனையுடன் வதந்திகளைத் தேடும் கூட்டம் பொறுப்பற்ற அரசியல்வாதிகளை உற்பத்தி செய்கிறது. யதா பிரஜா ததா ராஜா என்பதே சரியான பழமொழி.

(image courtesy:foter.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s