செங்கல்பட்டு ஏரி


2013-10-29 11.21.09

2013-10-29 11.21.17

2013-10-29 11.21.25

2013-10-29 11.23.40

செங்கல்பட்டு ஏரி

அனேகமாக பயணத்தில் செங்கல்பட்டை இரவில் அதுவும் நல்ல தூக்கத்தில் கடப்பதே அமையும். பகலில் பயணம் செய்வது மிகவும் அபூர்வம். அப்போதும் செங்கல்பட்டு ஏரி கண்ணில் பட்டு ரசிக்க ஆரம்பிக்கும் முன் கடந்து போய் விடும்.

இன்று மின்சார ரயிலில் சென்றது மட்டும் காரணம் அல்ல. எதிரில் வந்த பல்லவனுக்காக அது கொஞ்ச நேரம் ஏரி முன் நின்றது. அருமையான காட்சி. ஹைதராபாத்தின் ஹுஸைன் சாகருக்கு நிகரானது என்றே கூறலாம். அவ்வளவு விஸ்தீரணம். இந்த ஏரியைச் சுற்றித் தான் விளை நிலங்கள் கான்கிரீட் காடுகளாகி வருகின்றன.

என் பள்ளித் தோழனும் நானும் ஒன்றாக இருக்கும் நேரம் வெகு அபூர்வம். அவரவர் வழியில் எப்போதும் பறந்து கொண்டே இருக்கும் கொடுமை. அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வேலை முடிந்ததும் அவரும் என்னுடன் மின்சார ரயிலில் பயணித்தார். நடை மேடையில் ஒருவர் சற்றே மன நலம் சரியில்லாதவர் “அண்ணே காபி வாங்கிக் கொடு” என்றார். நான் நகர்ந்தேன். நண்பர் நின்று விட்டார். அவருக்குப் பத்து ரூபாய் கொடுத்தார். அவர் “காபியைக் கொடுக்கச் சொல்லு” என்றார். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. “பணத்தை வாங்கிக்கங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். மின்சார ரயிலில் இரண்டாவது விசிலும் முடிந்து விட்டது. அப்போது தான் காபிக்காரர் என் கண்ணில் பட்டார். பிறகு நண்பர் காபிக்காரரிடம் பணம் கொடுக்க அந்த ஆள் ஊற்றிய காபி போதாது என்று நடைமேடைக்காரர் இன்னுங்கொஞ்சம் காபி வாங்கிக் கொடுத்தார். என்னிடம் இரக்கம் வற்றி விட்டது என்றே நீங்கள் வைத்துக் கொள்ளலாம். சென்னை அண்ணா சாலையில் தேவி தியேட்டர் அருகே சாரதாஸ் எதிரே ஒரு பெண் பிச்சை எடுக்கிறார். எனக்குத் தெரிந்து 25 வருடங்களுக்கு மேலாக அவர் அதே இடத்தில் தான் பிச்சை எடுக்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் எப்படியாவது என் ஈரமற்ற குணத்தை நியாயப்படுத்துகிறேன்.

மறுபடி ஏரிக்கு வருவோம். தொடர்ந்து தொலை பேசி அழைப்புக்களிடையே என் நண்பர் ஏரியைப் பார்த்து மகிழ்ந்தார். அப்போது நான் வேடந்தாங்கல் எங்கே வரும் என்று கேட்டேன். அவர் மதுராந்தகத்துக்கு முன்பு வலது பக்கம் வரும் என்றார். “நீ போயிருக்கியா?” என்றால் இல்லை என்கிறார். அது சற்றே வருத்தமான செய்திதான். அவரும் நானும் 30 வருடமாகச் சென்னையில் தான் இருக்கிறோம். என்ன பயன்?

பறவைகளைப் பற்றிப் பேச்சு வந்தது. அவர் நீலாங்கரையில் தனி வீட்டில் இருப்பதால் செடி கொடிகள் உண்டு. அங்கேயும் கிளிகள் வருகின்றன என்றார் உடனே ஒரு பெரியவர் திருவல்லிக்கேணியில் நூற்றுக்கணக்கான கிளிகளுக்கு தினமும் தீனி கொடுப்பதாகக் கூறினார். நான் அவர் அளவு ஊடகங்களைத் தொடரவில்லையோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. புறாக்கள் பற்றிக் குறிப்பிட்டேன். ஆந்திராவில் இருந்தே புறாவுக்கு ஊர் நடுவே தானியம் இரைப்பது பழக்கம் என்றேன். சினிமாவில் மும்பையைக் காட்டினாலே புறாக்களுக்கு யாராவது கோதுமையை இறைப்பதைக் காட்டுவார்கள் என்றார். சென்னையில் பள்ளிக் கரணை மற்றும் அடையார் முகத்துவார சதுப்பு நிலங்களிலும் பட்டினப்பாக்க சதுப்பு நிலத்திலும் பல பறவைகள் உண்டு. நான் இப்போது குடியிருக்கும் வளாகத்தில் நிறைய புறாக்கள் கட்டிட இடைவெளிகளில் வசிக்கின்றன. இரவில் நம்முடன் நம் வளாகத்தில் பறவைகளும் உறங்குகின்றன என்பதை நினைக்கவே மனதுக்கு இதமாக இருக்கின்றது.

மறுபடியும் ஏரிக்கு வருவோம். ஏரிகள் குளங்கள் மற்றும் பசுமை இவை இப்போதும் கூட மீட்டெடுக்கக் கூடியவையே. நமக்குத் தான் கொடுப்பினை வேண்டும்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s