விக்னேஷ்வரன் அளித்துள்ள பேட்டி


10772234266_0d8be142e7_m

தி ஹிந்து நாளேட்டில் விக்னேஷ்வரன் அளித்துள்ள பேட்டி இலங்கைத் தமிழர்களைப் பற்றி நம் அரசியல்வாதிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாகக் கொந்தளிக்கும் நிலையிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாக உள்ளது. எடுத்துக் காட்டாக, தமிழ் ஈழம், தமிழ் நாட்டு மீனவர் பற்றிய கருத்துக்களைப் பார்ப்போம்:

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தனித் தமிழீழம் குறித்து உணர்ச்சிபொங்கப் பேசி வருகின்றனர். இது உங்களுக்கு என்னவிதமான தாக்கத்தை உருவாக்குகிறது?

* உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமாக இதை எண்ணத் தோன்றுகிறது. உணர்வு, சுதந்திரத் தென்னிந்தியாவிலிருந்து கொந்தளிக்கிறது. அறிவோ, யதார்த்தத்தின் நிலையறிந்து நிதானமாக இலங்கையில் பயணிக்கிறது.

தமிழக மீனவர்கள் இலங்கையிலும் இலங்கை மீனவர்கள் தமிழகத்திலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மொத்தத்தில் இரு தரப்பிலும் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள்தான். இதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?

* உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே நான் செய்யக்கூடியது. நீங்கள் தமிழர்கள். பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுவது இந்திய – இலங்கை கடற்பரப்பில் வாழும் கடல் இனங்களே. எதற்காக இந்திய மீனவர்கள் தங்கள் கடல் எல்லை தாண்டி இரவு 1 மணியளவில் நன்றாக நாங்கள் பார்க்கக்கூடிய தூரத்திலேயே பயணித்து மீன் பிடிக்கிறார்கள்? பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். காரணம், இந்திய கடல் பிராந்தியத்தில் இழுவலைப் படகுகள் மூலம் கடல் வளங்களாகிய மீன்களை வாரி இழுத்து காலி செய்துவிட்டார்கள். பணத்தாசையால் பெரும் படகு முதலாளிகள் தங்கள் நாட்டுக்கும் கடல் வளத்துக்கும் செய்துள்ள துரோகம் இது. உங்கள் பகுதியில் மீன் கிடைக்காததால், இலங்கைக் கடல் பகுதியில் மீன் வாருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை கடல் பிராந்தியத்திலும் கடல் இனங்கள் அற்று ஒன்றுமில்லாமல் போய்விடும். எங்கள் நாட்டில் இழு படகுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. இழு படகுகளால் மீன் வளங்கள் மட்டுமல்ல; பவளப்பாறைகள்கூட இழுத்துவரப்படுகின்றன. இழு படகு உபயோகத்தை இந்தியா தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சட்டம் வருமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இழு படகை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை மீனவர்கள் உபயோகித்தால் மீன் இனம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள். இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் இழு படகுகளுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்களே. சிறு மீனவர்கள் அல்லர்.

அடுத்ததாக, போருக்குப் பின் இருப்பிடமின்றி வாடும் ஏழைத் தமிழ் மக்களுக்கு இந்தியாவிலிருந்து அவரது எதிர்பார்ப்பு இது:

இந்திய உதவியுடன் வீடு கட்டித் தரும் திட்டம் எந்த அளவில் உள்ளது? அதை விரைவுபடுத்த நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி என்ன?”

* குறிப்பிட்ட தொகையே வீடுகட்ட ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ஆண்டுகள் சில கடந்த நிலையில், பொருள்களின் விலையேற்றத்தால் வீடுகளை கட்டி முடிக்க இயலாமல் பலர் திண்டாடுகின்றனர். இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதருடன் பேசிக்கொண்டிருக்கிறோம். குறைந்த வட்டியுடன் கடன் வசதி செய்து தரும்படி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இலங்கைத் தமிழர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்து வீடு கட்ட உதவுவதே இன்னும் பேச்சு வார்த்தையில் தான் இருக்கிறது. நாம் இங்கே உணர்ச்சிக் கொந்தளிப்பானவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

மேலும் இந்த பேட்டியில் விக்னேஷ்வரனின் ஆன்மீக ஈடுபாட்டையும், அவர்களது வாரிசுகளில் ஒருவர் சிங்களவரைத் திருமணம் செய்த செய்தியையும் தெரிந்து கொள்கிறோம். இந்தியாவின் தமிழர் வாழும் பகுதிகளில் வெறுப்பை விதைக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. 18.11..2013 அன்று ஹிந்து தமிழ் நாளிதழில் இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழ் ஈழத்தைப் பொருத்த வரை விக்னேஷ்வரனின் கருத்துக்களே இவரது கருத்துக்களாக இருப்பதைக் காண்கிறோம்.

இலங்கைத் தமிழரின் நீண்டகால நலம், வளர்ச்சி, மற்றும் பாதுகாப்பு குறித்த எந்த விதமான திட்டங்களையும் மையப்படுத்தி விவாதங்களோ அல்லது ஊடகங்களில் பதிவுகளையோ நாம் காண்பதில்லை. உண்மையிலேயே அவர்கள் மீது நமக்குப் பற்றும் பாசமும் இருந்தால் இன்று உடனடித் தேவை அவர்களுக்கு என்னவோ அதில் நம் கவனம் இருக்க வேண்டும்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to விக்னேஷ்வரன் அளித்துள்ள பேட்டி

  1. வேகநரி says:

    //இந்தியாவின் தமிழர் வாழும் பகுதிகளில் வெறுப்பை விதைக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன.//
    உண்மை தாங்க. காட்டு தீயாக வேலைசெய்கிறாங்க.
    பேட்டி பற்றிய தகவலுக்கு நன்றி.இலங்கையின் தமிழ்மாகாண முதல்வர் நேர்மையானவாராக இருக்கிறார். தமிழக மீனவர்கள் எல்லை மீறுவது பற்றி தெரிந்த இலங்கையர்களிடமிருந்து ஏற்கெனவே நான் அறிந்தபடியா இது ஆச்சரியம் தரவில்லை.

  2. Srinivasan K says:

    “* உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமாக இதை எண்ணத் தோன்றுகிறது. உணர்வு, சுதந்திரத் தென்னிந்தியாவிலிருந்து கொந்தளிக்கிறது. அறிவோ, யதார்த்தத்தின் நிலையறிந்து நிதானமாக இலங்கையில் பயணிக்கிறது”

    .நல்லதே நடக்கும் . நம்பிக்கை வைப்போம்

    ஸ்ரீநிவாசன்,பாண்டிச்சேரி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s