பெரியார் -அன்னா ஹஸாரே ஒரு முக்கிய ஒற்றுமை


periyar1
Anna-Hazare

பெரியார் -அன்னா ஹஸாரே ஒரு முக்கிய ஒற்றுமை

அன்னா ஹஸாரே அவர்கள் “ஆம் ஆத்மி” என்னும் கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தமது பெயரை டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன் படுத்தக் கூடாது என்று தடை விதித்து தாம் அரசியலுக்கு அப்பாற் பட்டவர் என்று மீண்டும் நிலைநாட்டியுள்ளார். இது எனக்கு பெரியாரையே நினைவு படுத்தியது.

தமிழ் நாட்டின் மிக முக்கியமான சமுதாயப் பணி பெரியாரால் தான் நிகழ்ந்தது. ஒரு கலகம் என்னும் அளவில் அதிரடியாகப் பல போராட்டங்களை அல்லது உடைப்புகளை அவர் செய்தது “மத உணர்வுகளை”ப் புண் படுத்திய பாதகச் செயல் என்று பல தலைமுறைகளாகப் புலம்புவோர் உண்டு. இன்று கூட 2013ல் கூட மக்களின் நம்பிக்கையைக் காசாக்கும் வேலை நடப்பதைக் கண்டு கொள்வதே இல்லை. சத்கதி என்று ஒரு திரைப்படம். சத்யஜித் ரேயின் இயக்கத்தில் வந்தது. ஒரு விறகு வெட்டியின் மகன் துர்மரணத்தில் இறந்து விட அவன் நற்கதி அடைய வேண்டும் என்று இந்த ஆள் ஒரு அந்தணரை அழைத்து வருவார். அவரும் சில ஈமைக்கடன் முறைகளை நடத்தி வைத்து வயிறார உண்பார். அவர் கேட்கும் தட்சிணையை உடனடியாக விறகு வேட்டியால் தர முடியாமற் போய் விடும். உடனே அந்த அந்தணர் தம் வீட்டில் உள்ள ஒரு பெரிய (மிகப் பெரிய ) மரத்தை வெட்டி விறகாக்கும் படி கூறுவார். இவரும் வெட்டத் துவங்குவார். மாலைக்கு மேலும் உழைத்தும் வேலை முடியாது. திடீரென மயங்கி விழுந்து இறந்தே போய் விடுவார்.

சரி. மறுபடியும் பெரியாருக்கு வருவோம். தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவில் எங்குமே சமுதாயம் மாற வேண்டும் என்று பாடுபட்டோர் மிக மிகக் குறைவு. அந்தக் கனவே யாருக்கும் வராது. ராஜா ராம் மோகன் ராய் தனது அண்ணி அண்ணன் பிணத்தோடு உடன் கட்டை ஏறாமல் காத்த முதல் புரட்சியாளர். பின்னர் அம்பேத்கர், ஒரு விதத்தில் காந்தியடிகள், பெரியார் இவர்களே சமுதாயம் முற்றிலும் மாற வேண்டும் என்று கனவு கண்டவர்கள். பெரியார் ஒருவர் மட்டுமே இது தான் நோய் என்று இனம் காட்டியவர். மத நம்பிக்கைகளை ஏற்றத் தாழ்வுக்கும் பணம் பண்ணுவதற்கும் பயன் படுத்தாதே என்று எச்சரிக்கை விடுத்தவர் அவரே.

பெரியாருக்கு இன்றும் மக்கள் மனதில் ஒரு அழியா இடமும் கற்றவர் இடையே ஒரு நன்றி கலந்த மதிப்பும் ஏன் இருக்கிறது? அவர் அரசியலுக்கு வரவே இல்லை.

அதாவது அதிகார பீடத்தில் அமர அரசியல் செய்யும் வேலையை அவர் எடுத்துக் கொள்ளவே இல்லை. அவர் சமுதாயத்தின் சிந்தனையை, விழிப்பைத் தட்டி எழுப்பினார். அவர் காலத்துக்குப் பின் அவரது வாரிசுகள் ஏன் மதிப்பைப் பெறவில்லை என்பதற்கு அவர்கள் அரசியலுக்கு வந்து அவரது கொள்கைகளைக் காற்றில் விட்டுவிட்டு ஓட்டுவங்கி அரசியலுக்குள் நுழைந்ததே காரணம்.

இந்திய அரசியல் அமைப்பில் பிரதமர் முதல் கடைநிலை ஊழியரான பியூன் வரை லோக்பால் என்னும் அமைப்பில் விசாரணைக்கு உட்படுத்த முயன்றார் அன்னா ஹசாரே. அவர் இந்த மாபெரும் மாற்றம் நிகழ விரும்பினாரே ஒழிய அரசியலில் கால் பதிக்கவோ பதவிகளை ஏற்று அதிகாரமும் பணமும் தேடவோ விரும்பவே இல்லை.

மதத்தின் பெயரால் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்ட பெரியாரும் ஊழலை ஒழிக்க முயலும் ஹஸாரேவும் இந்தியத் தாயின் தவப் புதல்வர்கள்.

(image courtesy:www.uni-giessen.de & yourstory.in

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s