தாய் தந்தையரை கவனிக்காதவன் வில்லனா?


தாய் தந்தையரை கவனிக்காதவன் வில்லனா?
stock-photo-closeup-of-the-hands-of-a-man-with-handcuffs-on-a-white-background-122688160

90 வயதுக்கும் மேலே முதியவரான தந்தையைக் கைவிட்ட மகன் கைது என்னும் செய்தியைப் படித்தேன். இது முதல் தடவை அல்ல. பல முறை பல வழக்குகளில் மகன்கள் கைதாகி உள்ளனர். இது அரசாங்கம் முதியவர்களின் மீது காட்டும் பரிவைக் கண்டிப்பாக உணர்த்துகிறது. மக்களின் பேராதரவு இதற்கு உண்டு என்பதிலும் ஐயமில்லை.

இந்த இடத்தில் நாம் சட்டம் கணவன் மனைவி விவாகரத்துக்காக மனுச் செய்யும் போது வேறு விதமான ஒரு அணுகுமுறையைக் காட்டுவதைப் பார்க்கிறோம். குறிப்பாக இருவரில் ஒருவர் மனுச் செய்யும் போது நீண்ட நாட்கள் பல முறை அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டு அவர்கள் ஒன்றாயிருப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. அதே சமயம் பரஸ்பர ஒப்புதலில் விண்ணப்பிக்கும் போது அது (சமீபகாலமாக) ஓரளவு விரைவாகப் பரிசீலிக்கப் படுகிறது.

முதியோர்- அவர்களது மகன் விஷயத்திலும் நாம் இதே போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்பாவின் பெயரால் மகன் கைதாகி மறுபடியும் அவனிடம் அவர் ஒப்படைக்கப் படும் போது அவர்கள் உறவில் பெரிதாக என்ன முன்னேற்றம் அல்லது அந்த மகனிடம் மனமாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது? உண்மையில் மகன் வேண்டா வெறுப்பாக மட்டுமே அவரை ஏற்கப் போகிறான். நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் அவன் மனம் மேலும் கடுமையாகவே மாறப் போகிறது.

மகன் இல்லாத போது மகளுக்கு இந்தக் கட்டாயமில்லை. இருந்தாலும் சகோதர சகோதரிகள் இணைந்து தம் பெற்றோரைப் பேண முயல வேண்டும் அதுவே முறையானது.

கடுமையான சட்டம் போட்டிருக்கும் போது ஒரே மாற்றமே தேவை. தந்தை- தாய் – மற்றும் மகன் விவகாரத்தை குடும்ப நீதிமன்றங்கள் விசாரித்து சுமூகமான தீர்வுக்கே வழி வகுக்க வேண்டும்.

தாய் தந்தையை மகன் காப்பாற்றுவதைக் கண்டிப்பாக நகரம் கிராமம் என்று இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும்.

நகரத்தில் முக்கியமான தடை 1. இடவசதிக் குறைவு. 2. அதிக விலைவாசி, 3. வருமானக் குறைவு 4. பாகப் பிரிவினையில் மனத்தாங்கல். ஆனால் கிராமத்தில் 4வது காரணம் மட்டுமே இருக்க முடியும்.

குடும்ப நல நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட மகன் அவனது சகோதர சகோதரி இவர்கள் அனைவருடன் இணைந்து ஒரு நல்ல தீர்வை எட்ட முயல வேண்டும். இதைத் தவிர வருமானம் குறைவு என்பதால் தந்தை தாயைப் பார்த்துக் கொள்ள முடியாதவர்களுக்கு அரசாங்கம் சில சலுகைகளைத் தரலாம்:

1/அரசாங்க ஒப்பந்தங்களில் இவர்களுக்கு (மற்ற ஷரத்துக்களில் மாற்றமின்றி) முன்னுரிமை

2.குடும்பத்தில் ஒருவர் தொழில் துவங்க சிறு நிதி உதவி (கூடுமான வரை கடனாக)

3.குடும்பமே (நெருங்கிய உறவோடு இணைந்து) தொழில் துவங்க முன் வரும் பட்சத்தில் அவர்கள் 75% (தவணைகளில்) – அரசாங்கம் 25% ஏற்றவிதத்தில்- என்று தொழில் துவங்க வாய்ப்பு.

4. மகனால் பராமரிக்கப் பட முடியாத அவருக்கு இலவச மருத்துவம் மற்றும் மாத பென்ஷன் ..

தந்தை தாயைப் பேணுவதில் வருமானத்தால் சிக்கல் உள்ளவருக்கு அரசாங்கம் உதவும் என்னும் பிம்பம் இருக்க வேண்டும். குடும்ப நீதி மன்றங்கல் சுமூகமாகத் தீர்க்க வேண்டியது இது. இப்படி குற்றவாளிகளுக்குத் தரும் தண்டனையை இவர்களுக்குத் தருவது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ((image courtesy:www.shutterstock.co.in)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

1 Response to தாய் தந்தையரை கவனிக்காதவன் வில்லனா?

  1. வேகநரி says:

    சரியான கருத்து.
    வருமானம் குறைந்தவர்களின் பெற்றோர்களை அரசே பொறுப்பெடுத்து கவனிக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s