தாலிபானின் முகமும் நம் முகமூடியும்


stock-vector-set-of-theatrical-masks-120702187
தாலிபானின் முகமும் நம் முகமூடியும்

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளுள் ஒன்றும் சில ஊடகங்களும் சச்சினை வாழ்த்தியும் புகழ்ந்தும் எழுதியதை எதிர்த்து தாலிபான் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. தாலிபான் “தியாகி”களைப் போற்றாமல் சச்சினைப் போற்றும் போது அவரை விளையாட்டு வீரர் என்னும் அடிப்படையில் அணுகும் போது மதத்தின் மீது கொண்ட அர்ப்பணிப்பு என்னும் அடிப்படையில் தாலிபான் உறுப்பினர்களை ஏன் காணவில்லை என்பதே அவர்களது கேள்வி.

தாலிபான் முழுக்க முழுக்க மதச் சகிப்புத்தன்மை என்பது கூடாது என்பதை எந்த வித முகமூடியும் இன்றித் தனது செய்திகளிலும் கொலைகளிலும் வெளிப்படுத்தியே வருகிறது. பாகிஸ்தானில் தமக்கு ஆதரவு பொது மக்களிடம் இல்லாத போதும் மதத் தலைவர்களில் ஒரு பகுதியினரின் ஆதரவோடும் ஆயுத பலத்தோடும் அது இயங்கி வருகிறது.

தாலிபான்களின் தரப்பை எதிர்த்த பல எதிர்வினைகளையும் நாம் காண்கிறோம். நம் நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மதச் சகிப்புத்தன்மை, எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாமே நமக்கு உண்டு. ஆனால் விமர்சன அடிப்படையில் வெளியான பல நூல்களை நாம் தடை செய்திருக்கிறோம். சகிப்புத்தன்மை இல்லாத சாதி மதக் குழுக்கள் அனேகமாக இந்து முஸ்லிம் இரண்டு பிரிவிலேயும் உண்டு. காவிரிப் பிரச்சனை உச்சகட்டமானால் தமிழ்ப் படங்கள், தமிழ் நாட்டுக்குப் பேருந்துகள் தடையாகும். தமிழ் நாட்டைப் பொருத்த அளவில் நாம் விளையாட்டு வீரர்களை சிங்களவர், தமிழர் என்று பிரித்து திருப்பி அனுப்பியதும் உண்டு. ஆந்திராவில் ஒரே மொழி பேசுவோர் தெலுங்கானா சிமந்திரா என்று ஜன்ம விரோதம் காட்டி அடக்குமுறையான வேலைகள் ஏகமாய்ச் செய்கின்றனர். எம் எஃப் ஹுஸைனின் கலை கூட மத அடிப்படையில் அணுகப் பட்டு அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இந்துத்துவ வாதிகளால் வந்தது. ஒரு மத வெறியரின் மரணத்தை ஊரே கொண்டாடிய போது அதற்கு மறுப்பான சமூக வலை தளப் பதிவுக்கு அடக்குமுறைகள் வந்தன. இல்லையா? தஸ்லிமா நச்ரீனுக்கு நம்மால் அடைக்கலம் தர இயலவில்லை.

ஓட்டு அரசியல் அடிப்படையில் எல்லாமே அணுகப் படுவதால் சகிப்புத்தன்மையில்லாத தாலிபான்தனமான பல வேலைகள் சிறு குழுக்களால், கும்பல்களால் எளிதாக நிறைவேற்றப் படுகின்றன.
சுதந்திரம், ஜனநாயகம் இவை நம் முக மூடிகள். தாலிபான்களிடம் அது கிடையாது.

(image courtesy:shutterstock.co.in)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to தாலிபானின் முகமும் நம் முகமூடியும்

  1. வேகநரி says:

    தஸ்லிமா நச்ரீனுக்கு நம்மால் சரியான அடைக்கலம் தர முடியவில்லை என்பது நாம் மிகவும் வெட்கபட வேண்டிய துயரம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s