ஆருஷி கொலையில் ஊடகங்களின் கேவலமான கொண்டாட்டம்


stock-photo-media-laptop-phone-and-tablet-pc-electronic-devices-d-119049481

ஆருஷி கொலையில் ஊடகங்களின் கேவலமான கொண்டாட்டம்

ஆருஷி என்னும் பதின் வயது சிறுமி படுகொலை செய்யப் பட்ட போது ஊடகங்கள் மிகவும் கேவலமாக, தினமும் தானே ஒரு தீர்ப்பு என்னும அடிப்படையில் கட்டுக் கதைகளை வெளியிட்டு மிகவும் கேவலமாக நடந்து கொண்டன என்று சாடுகிறார் ப்ரேமா ரேவதி, தமிழ் ஹிந்து தினசரிக் கட்டுரையில். அவர் முத்தாய்ப்பாய்க் கூறும் கருத்து :

“மன வக்கிரங்களைத் தூண்டிவிட்டு, அதில் பணம் கொழிப்பது நாம் வாழும் இந்தச் சமூகத்தில் நடக்காத ஒன்றல்ல. ஆனால், இப்படிச் செய்பவர்களுக்கு ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ என்ற கௌரவம் பொருத்தமானதுதானா என்பதுதான் கேள்வி.”

கொலை நடந்த முதல் நாள் அந்த வீட்டு வேலைக்காரன் தான் கொலை செய்தான் என்றும், அடுத்த நாள் அவன் பிணம் கிடைத்ததும் அவனுக்கும் அந்த சிறுமிக்கும் தகாத உறவு இருந்தது என்றும் ஊடகங்கள் கட்டுக் கதைகளை மனம் போன படியெல்லாம் அடுக்கி தினமும் இவர் தான் குற்றவாளி என்று மாற்றி தீர்ப்பு எழுதியது மட்டுமல்ல அந்த சிறுமியின் ஒழுக்கம் பற்றிய பல கேள்விகளை எழுப்பி இறந்தவர் மீதும் இரக்கம் காட்டாத அடாவடித் தனத்தை வெளிப்படுத்தி உள்ளன.

இறுதியில் தீர்ப்பு வரும் போது இப்போது பெற்றோரே குற்றவாளி என்று வந்துள்ளது. நடந்தது என்ன என்பது முழுமையாக வெளி வந்தாலும் வராவிட்டாலும் அது சமூகத்துக்கு எந்த அளவு அவசியம் என்பதே நம் முன் உள்ள கேள்வி.

ப்ரேமா ரேவதியின் ஆவேசம் மிகவும் பாராட்டுக்குரியது. ஊடகங்கள் ஒரு குற்றம் அல்லது பயங்கரம் நிகழ்ந்த போது சமூக அக்கறையுடன் அவற்றைத் தடுக்க அரசோ அல்லது மக்களோ என்னென்ன செய்யலாம் என்று சமூக அக்கறையுடன் எழுதினால் அது வரவேற்புக்குரியது. எப்படி அந்தக் குற்றம் நடந்தது என்று விவரமாக வர்ணித்து எழுதுவதும் அதை மட்டமான ரசனையுடன் வாசிப்பதும் ஆரோக்கியமானதே அல்ல. அது தொலைக்காட்சியில் காணொளியுடன் கூடிய வர்ணனை ஆகும் போது இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படும். பல குற்றவாளிகள் இத்தகைய ஊடகக் கொண்டாட்டங்களின் மூலம் தானும் ஒரு குற்றம் இழைக்கத் தூண்டப் படுகிறார்கள்.

ப்ரேமா ரேவதி இந்தக் கட்டுரையை எழுதியதற்கான பின்னணி கிட்டத்தட்ட ஏழாண்டுகள் இந்தக் கொலைச் சம்பவத்தை மையப்படுத்தி ஊடகங்கள் செய்து வந்திருக்கும் வணிக ரீதியான மன வக்கிரமான கொண்டாட்டமே.

அரசின் சட்டவிதிகளைக் கண்டால் அதிக பட்சம் ஒரு ஊடகத்துக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப் படுவாத இருக்கிறது. பெரிய நடவடிக்கை எதற்கும் இப்போதைய சட்டங்கள் போதுமானவையாக இல்லை. அவதூறு வழக்கு என்னும் அடிப்படையில் பலரும் நிதிமன்றம் போவதற்குக் காரணமும் இதுவே.

ஒரு பத்திரிக்கை ஆசிரியர் இப்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும். அது வரை பொறுக்காமல் அவர்தான் குற்றவாளி என்று எழுதும் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் உண்டு. இப்போதாவது ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இயங்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். (image courtesy:shutterstock.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s