நெல்சன் மண்டேலா


heads4-1

நெல்சன் மண்டேலா

நவீன உலகின் மகாத்மா காந்தி எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அவரது முக்கிய உரையின் ஒரு பகுதியை வாசிப்போம். நிறவெறிக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து 1994ல் தென்னாப்பிரிக்காவில் கருப்பு மக்களும் வாக்களித்த தேர்தலில் African National Congress வெற்றி பெற்றது. நெல்சன் மண்டேலா அதிபரானார். 1995ல் அவர் அளித்த Long Walk to Freedom என்னும் தலைப்பிலான உரையிலிருந்து ஒரு பகுதி:

“(சிறையிலிருந்த) நீண்ட, தனிமையான வருடங்களில் தான் எனது மக்களின் சுதந்திரம் என்று இருந்த என் பசி எல்லா மக்களுக்கும் சுதந்திரம் அதாவது கருப்பர் வெள்ளையர் அனைவருக்கும் சுதந்திரம் என்பதாகப் பரிணமித்தது. ஒடுக்கப் பட்டவருக்கு இணையாகக் கொடுங்கோலரும் விடுதலை பெற வேண்டும். ஒரு மனிதனின் உரிமையைப் பறிக்கும் மற்றொருவன் வெறுப்பு என்னும் சிறையில் அடைபட்ட கைதி ஆவான். அவன் குறுகிய மனம் மற்றும் கெடுதல் எண்ணும் நோக்கு என்னும் கதவுகளுக்குப்பின் அடை பட்டுள்ளான். என்னுடைய சுதந்திரத்தை மற்றவன் பறிக்கும் போதும் மற்றவரது சுதந்திரத்தை நான் பறிக்கும் போது, இரண்டு நிலைகளிலுமே இருவருமே கைதிகளாக அடைபட்டுப் போகிறோம். உரிமையைப் பறித்தவர் பறிகொடுத்தவர் இருவருமே மனித நேயத்தைப் பறிகொடுத்தவர் ஆகின்றனர்.

நான் சிறையில் இருந்து வெளி வந்த போது ஆக்கிரமிப்பவன், அடிமைப்பட்டவன் என இருவரையுமே விடுதலை செய்வதே என் லட்சியமானது. நாம் அதை அடைந்து விட்டோம் என்று பலர் கருதுகிறார்கள். நான் அதை ஏற்கவில்லை. நாம் இன்னும் விடுதலை அடையவில்லை என்பதே உண்மை. நாம் ஒடுக்கப் படாமலிருப்பதற்கான உரிமையையும் சுதந்திரமாக இருபதற்கான உரிமையையும் அடைந்துள்ளோம். அவ்வளவே. நாம் நம் பயணத்தின் இறுதி அடியை எடுத்து வைக்கவில்லை. மிகவும் கடினமான மற்றும் இன்னும் நீண்ட ஒரு சாலையில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம். சங்கிலி அறுபடுவது மட்டும் விடுதலை ஆகாது. ஒவ்வொருவரும் மற்றவரது உரிமையை மதிக்கும் ஆரோக்கியமான சூழலில் வாழ இயலுவதே விடுதலை. இத்தகைய சுதந்திரத்தின் மீது நமக்குள்ள உண்மையான ஈடுபாடு இப்போது சோதனக்குள்ளாகி இருக்கிறது.

சுதந்திரத்துக்கான மிக நெடிய பாதையை நான் கடந்து வந்திருக்கிறேன். தடுமாறாமல் இருக்க நான் மிகவும் முயன்றேன். தவறான சில அடிகளை நான் இந்தப் பயணத்தில் எடுத்து வைத்திருக்கவும் கூடும். ஒரு மலையின் சிகரத்தை எட்டியவுடன் வெல்ல வேண்டிய சிகரங்கள் இன்னும் பல இருக்கின்றன, ஏற வேண்டிய மலைகள் ஏகப் பட்டவை இருக்கின்றன என்பதே நான் உணர்ந்த ரகசியம். நான் ஒரு சில கணங்கள் இந்த சிகரத்தில் நின்று அதில் இருந்து நாம் காணும் அழகிய காட்சிகளை ரசிக்கிறேன். ஒரு சில கணங்கள் மட்டுமே. ஏனெனில் சுதந்திரத்துடன் பொறுப்புகளும் வந்து சேரும். நான் நடக்க வேண்டிய நீண்ட தொலைவுக்கு இப்போதைக்கு முடிவேயில்லை.

உன் எதிரியுடன் நீ அமைதியாக இருக்க விரும்பினால் நீ அவருடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும். அப்போது அவர் உனது முயற்சியில் பங்காளியாக ஆகிவிடுகிறார். ”

heads5-12

நெல்சன் மண்டேலா அநீதி இழைத்தவர், அநீதிக்கு ஆளானவர், உரிமை பறித்தவர், உரிமைகளைப் பறிகொடுத்தவர் இவர்கள் யாவருமே மனித நேயத்துடன் ஒன்றாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே கனவு கண்டார். ஆதிக்கமும் சுரண்டலும் ஆட்டுவிக்கும் மனங்களுக்கு அவற்றில் இருந்தும் அடிமைப் படுத்தப் பட்டோருக்கு அந்த அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை கிடைக்க வேண்டும் என விரும்பினார். உயர்ந்த கனவுகளே மகத்தானவரையும் ஏனையரையும் வேறுபடுத்துகின்றன. இந்தக் கனவே அவரை ஆயுதப் போரிலிருந்து அரசியல் ரீதியான நீண்ட போராட்டத்துக்கு மாற்றியது.

மனித குலம் மேலான நிலைக்கு மாற முன்னுதாரணங்கள் இல்லாமலில்லை. நம் கனவுகள் அதிக உயரம் பறப்பதேயில்லை.

heads6-1

 

(Images courtesy:http://www.nelsonmandela.org/)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

1 Response to நெல்சன் மண்டேலா

  1. Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s