ஓரினச் சேர்க்கை – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – எதிர்வினைகள்


220px-Rainbow_flag_breeze
ஓரினச் சேர்க்கை – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – எதிர்வினைகள்- கேள்விகள்

பிரிட்டிஷ் காலம் தொட்டே Indian Penal Code Section 377 என்னும் குற்றவியல் சட்டப்படி ஒரினச் சேர்க்கை “கிரிமினல்” குற்றம். பல ஆண்டுகள் சிறை செல்ல வேண்டி வரும். 2009ம் ஆண்டு NAZ என்னும் தன்னார்வ அமைப்பு “இந்த சட்டப் பிரிவே மனித உரிமைகளுக்கு எதிரானது எனவே இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர அதை ஏற்று இந்த சட்டம் செல்லாது என உயர் நீதி மன்றம் அறிவித்தது. இதை எதிர்த்த மத அமைப்புகளின் வழக்குகள் அனைத்தையும் விசாரித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதி மன்றம் “ஓரினச் சேர்க்கை குற்றவியல் சட்டம் பிரிவு 377ன் படி குற்றமே ” என்று அறிவித்து விட்டது.

மனித உரிமைகள் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதான எதிர்வினைகள் கண்டனங்கள் ஊடகங்களில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.

இந்த இடத்தில் முதலாக நாம் சுப்ரீம் கோர்ட் எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்று பார்ப்போம். இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் முடிவால் மட்டுமே திருத்தப் படக் கூடியது. இரண்டாவது இதில் உரிமை பறிபோவதான எதுவுமே இல்லை. எப்படி? ஓரினச் சேர்க்கைக்கான உரிமை இந்திய சட்டதிட்டங்களின் படி யாருக்கும் இன்னும் வழங்கப் படவே இல்லை. இதுவே உண்மை. எனவே இதை நாடாளுமன்றத்தின் முடிவுக்கும் பரிசீலனைக்கும் உச்ச நீதி மன்றம் விட்டு விட்டது.

இரண்டாவது நாம் மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதையும் இப்போது பார்க்க வேண்டும். எந்த ஒரு மதத்தினரின் மனமும் புண்படாமல் காக்க வேண்டியது அரசின் கடமை. அந்த நிலையை உறுதி செய்வது மட்டுமே மதச் சார்பின்மை என்பதாகும்.

இப்போது இஸ்லாம், இந்து, கிறித்துவ அமைப்புகள் மத அடிப்படையில் எதிர்க்கும் போது அரசின் கடமை அவர்கள் மீது இதைத் திணிக்காமல் இருப்பதே. அதாவது “ஓரினச் சேர்க்கைக்கு மத ரீதியான எதிர்ப்பை ஏற்க இயலாது” என்று கூறாமல் ஒரு மதத்தின் அடிப்படையிலான பண்பாடு பாதிக்கப்படக் கூடுமெனில் அத்தகைய ஒரு உரிமையை எந்த ஒருவருக்கும் தராமல் இருப்பதே சரி.

அறிவு ஜீவிகள் இந்தியாவில் நடைமுறையில் உள்ள மதச் சார்பின்மை போதாது. சில அமைப்புகள் அதைக் குலைக்கின்றன என்னும் அளவு பேசுகிறவர்கள். அவர்களே இந்தத் தீர்ப்பைக் கண்டிப்பது வினோதமானது.

இந்த இடத்தில் ஊடகங்கள் (அனாவசியமாக) வெளிச்சமிட்ட ஒரு பிரபல் சினிமா இயக்குனரின் மகளின் காதல் விவகாரம் நினைவுக்கு வருகிறது. ஒரு பிரபல இயக்குனர், தனது சினிமாவில் காதலைக் கொண்டாடியர் தனது குடும்பம் என்று வந்த போது தமது மகள் தேர்ந்தெடுத்த இளைஞன் சரியில்லை என்றதும் நீதிமன்றம் வரை சென்று போராடி வென்றாரா இல்லையா? ஏன் அப்படிச் செய்தார்? தனது மகளைக் காப்பாற்ற அவர் எந்த முயற்சியையும் விட்டு விட ,மாட்டார் இல்லையா?

இன்றும் சமூகத்தில் ஓரளவாது நேர்மை நாணயம் இருக்கிறது என்றால் அது கடவுள் தண்டிப்பார் என்னும் பயமே. மத அடிப்படையிலான மன உறுத்தல்க:ளே பலரைக் குற்றம் செய்யாமல் தடுக்கின்றன. அதாவது சமூகக் கட்டுப்பாடு ஒழுங்குக்கு மதம் உதவித்தான் வருகிறது. அப்படி இருக்கும் போது திடீரென மதம் மனித உரிமையில் தலையிடக் கூடாது – அதுவும் ஓரினச் சேர்க்கையில் மட்டும் தலையிடக் கூடாது என்றால் எப்படி? கீழை நாடுகள் மதக் கட்டுப்பாடுகளைத் தாண்டிய அடையாளம் அற்றவை. நாம் மக்களின் உணர்வுகளை அதாவது மத நம்பிக்கை உணர்வுகளையும் சேர்த்து மதிக்கப் பழக வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்கள் போராட ஜனநாயக உரிமை உண்டு. அதே சமயம் மத உணர்வுகளைக் காயப் படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. (image courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s