பல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில்


220px-Poo_Poster

பல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில்

கலைஞர் தொலைக் காட்சியில் 21.12.2013 சனிக்கிழமை அன்று மதியம் 1.30 (இந்திய நேரம்) மணிக்கு இந்தப் படம் ஒளிபரப்பாகிறது.

2008ம் ஆண்டு வெளி வந்த படம் பூ. இயக்குனர் சசி. கதை “வெயிலோடு போய்” – தமிழ் செல்வன் எழுதிய நாவலின் அடிப்படையிலானது. அஹமதாபாதில் நடந்த திரை விழாவில் சிறந்த படத்துக்கும் சிறந்த இயக்குனருக்குமான விருதை 2008ல் பெற்றது. அதே வருடம் தமிழக அரசின் விருதுகளில் 2008ல் சிறந்த திரைப்படத்துக்கான சிறப்பு விருது, சிறந்த திரைகதைக்கான விருது மற்றும் பெண்களை நல்ல முறையில் காட்சிப்படுத்தியதற்கான விருது இவை யாவற்றையும் வென்றது. தவிர பிலிம் பேர் மற்றும் பல தொலைக்காட்சிகளின் விருதையும் பாராட்டையும் பெற்றது.

சினிமாவை நான் திரையரங்குகளில் பார்க்கும் வயதில் இருந்த போது அன்னக்கிளி திரைப்படம் வெளியானது. ஆண்டாள் போல நாயகி சித்திரப்படுத்தப் பட்டது மற்றும் அவள் திருமணமே செய்து கொள்ளாமல் காதலன் திருமணமாகிப் பெற்ற குழந்தைகயைக் காப்பாற்றத் தன் உயிரைக் கொடுப்பது போன்ற நாடகமயமாக்கலின் மிகைகளைத் தவிர்த்தும் அந்தப் பெண்ணின் கிராமத்து வெகுளித்தனம் நம் மனதைத் தொடும். இளையராஜா நாட்டுப்புற இசையை திரை உலகில் பதித்ததும் அந்தப் படம் தொடங்கியே.

பூ திரைப்படம் மிகவும் எளிய கதை கொண்டது. பார்க்கப் போகிறவர்களை மனதில் வைத்து கதையைச் சொல்லாமல் விடுகிறேன். 2011ம் வருடம் நான் தற்செயலாக இதன் தொடக்கத்தை ஒரு தொலைக்காட்சியில் பார்த்து படத்துடன் ஒன்றி விட்டேன். அப்போது திருச்சியில் இருந்தேன். கடுமையான மின்வெட்டு. நல்ல வேளை ஒரு சிறிய பகுதி தவிர முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது.

காதல் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? காலப் போக்கில் காதல் கொண்ட பெண் மனதில் அது என்னவாக நிலைக்கும்? இந்தக் கேள்விகளை ஒட்டி நிறையவே படைப்புகள் வந்துள்ளன.

காதலைக் கொண்டாடுவது இனிப்பு ஒன்றே தின்பண்டங்களில் சிறந்தது என்று சொல்லி அதையே பிரசாரம் செய்வது போல. மனித உறவுகளின் புதிர் என்றும் இருப்பது. இலக்கியங்கள் இந்தப் புதிரின் எண்ணில் அடங்காத பரிமாணங்களைத் தொட்டு விரிபவை.

பூ இந்தக் கேள்விகளுக்குத் தெள்ளத் தெளிவாக ஒரு விடையைக் கொடுக்கிறது. அந்த விடை நம்மை நெகிழ வைக்கும். உண்மையில் இந்த விடை நிஜ வாழ்வில் கிடைக்காமல் போனாலும் ஆழ்ந்த அசலான அன்பு எது என்பதை ஒரு கதாபாத்திரம் நம் முன்னே வாழ்ந்து காட்டுகிறது.

திரைப்படம் தன் முழு வடிவை நோக்கி ஒவ்வொரு காட்சியாக நகர்ந்து முத்தாய்ப்பாக உச்சகட்டத்தில் நம்மை அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்கிறது. இந்த இயக்குனர் அதற்குப் பிறகு என்ன செய்தார் என்று அறியுமளவு திரைப்படங்கள் மேல் எனக்கு ஈர்ப்பு இல்லை. ஆனால் அவர் நிறைய சாதிக்கும் நுட்பமும் திறமையும் உள்ளவர். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

(image courtesy:wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s