விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை


download

விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை

ஊர் உறவு ஆகியோரால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிருந்தாவன விதவைகள். பலவேறு வயதில் இவர்கள் தண்ணீர் பந்தல் போல வழிப்போக்கர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவர்கள் தரும் பணத்தை வைத்து மற்றும் பஜனைப் பாடல்களைக் கோவில்களில் பாடி பிரசாதம் வாங்கி உண்டு இப்படித் தான் உயிர் வாழ்கிறார்கள்.

இவர்களின் அவல் நிலை பற்றி குட்டி ரேவதியின் கட்டுரை தீராநதி டிசம்பர் 2013 இதழில் வந்துள்ளது. தற்செயலாக டிசம்பர் 2013 இனிய உதயம் இதழில் வந்துள்ள “அவளின் சுயசரிதை” என்னும் மலையாள சிறுகதை ஒரு (பால்ய) விதவையின் கதை. பி.கேசவதேவ் என்னும் மலையாள எழுத்தாளரின் இந்தக் கதை வெளியான காலம் தெரியவில்லை. கதை நகரும் காலம் 1930கள் 40கள் என்று கொள்ளலாம்.

ஒரு பிராமண சிறுமி பால்ய விதவையாகி அதன் பின் தான் பூப்பெய்துகிறாள். அவர்கள் குடும்ப வருமானம் அப்பளம் செய்து விற்பதில் இருந்தே வருகிறது. அப்படி விற்கும் போது பிராமணர் வீடென்றால் உள்ளே போய் அப்பளம் கொடுத்துப் பணம் வாங்கி வருவாள். மற்றவர் வீடென்றால் வாசலோடேயே நின்று விடுவாள். இப்படி ஒரு பிராமணரல்லாதவர் அக்கம் பக்கத்தவர் வீடு ஒன்றில் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுகிறது. கர்ப்பம் தரிக்கும் வரை போய் விடுகிறது. தாய் தந்தையர் ஊர் உறவு ஜாதி யார் கேட்டாலும் அவள் அந்த ஆளின் விவரங்களைச் சொல்ல மறுத்து விடுகிறாள். ஒரே மகளான அவளை விட்டு விடாமல் பெற்றோர் அவளோடே இருக்கின்றனர். குடும்பத்தையே பிராமணர்கள் அனைவரும் தள்ளி வைக்கின்றனர். இந்தப் பெண்ணுக்குக் காலப் போக்கில் தன் காதலனால் இன்னொரு குழந்தையும் பிறக்கிறது. அதன் பின்னர் ஒரு நாள் காதலர் ஊரறிய அவளைத் தன்னுடன் அழைத்து செல்கிறார்.

இந்தக் கதை இன்று கூட மிகவும் புரட்சிகரமானது. சமுதாயத்தில் இரண்டு மாற்றங்களை இந்த எழுத்து முன் வைக்கிறது . ஒன்று விதவைக்கு விடிவு காலம். இரண்டாவது கலப்புத் திருமணம்.

விதவை மறுமணம் என்பது இன்று வரை இஸ்லாமியர் தவிர பிற மதத்தவரால் முக்கியத்துவம் பெறாத ஒன்று. இதைக் கண்டிப்பாக எல்லா ஜாதிக்காரர்களும் கவனிக்க வேண்டும். ஜாதி வெறியைத் தூண்டி நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றும் வேலையால் நாட்டுக்குக் கேடு விளைவது தான் மிச்சம். விதவைகள் பொருளாதாரத் தன்னிறைவை முன் வைத்து அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு. அவர்கள் வயதை உத்தேசித்து மறுமணம். இவ்வாறான உருப்படியான பணிகளை மிருகம் போல ஜாதி வெறியைத் தூண்டுவதற்கு மாற்றாகக் கொள்ளலாம்.

கேசவதேவ்வின் கதை பிரசாரக் கதை இல்லை. அதே சமயம் சமுதாயச் சிந்தனையில் முற்றிலுமாக ஒரு மாற்றத்தைக் கனவு காணும் படைப்பு.

(image cpirtesy google /wsws.org)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை

  1. விதவை திருமணம் இன்று எல்லா சாதி சமயங்களிலும் சாதாரணமான நிகழ்வாக ஆகிவிட்டது நண்பரே! கேசவதேவ் கதையை நினைவூட்டியதற்கு நன்றி!

  2. wintvindia says:

    Nice Post wish you All the best – See more at: http://wintvindia.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s