திண்ணையின் இலக்கியத் தடம்-14


திண்ணையின் இலக்கியத் தடம்-14
சத்யானந்தன்
நவம்பர் 4 2001 இதழ்:பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்வுக்கான முன்னுரை- ராஜன் குறை (நிறப்பிரிகை 1993)- பெரியார் சாதிகளை ஒழிப்பதற்கான முனைப்பில் தீர்மானமாக இருந்தார். மதம் மற்றும் வருணாசிரமப் பாரம்பரியம் மூலம் நால் வருணத்தைக் கட்டிக் காப்பவர்களை கடுமையாக எதிர்த்தார். இறுதி நாட்களில் அவர் ” கருவறை நுழைவுப் போராட்டம், அனைவரும் அர்ச்சகராகுதல்” ஆகியவற்றை வலியுறுத்தும் போது சாதி ஒழிப்புப் போராளியாகவே தெரிகிறார். நாத்திக வாதத்தை ஒப்பிட சாதி ஒழிப்பே அவரது கனவாக இருந்தது. காலப் போக்கில் அவரது சாதி ஒழிப்புக் கொள்கையைப் பின்னுக்குத் தள்ளி அவரை நாத்திகர் என்பவராகவே சித்தரித்து விட்டனர்.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20111041&edition_id=20011104&format=html )

இந்த வாரம் இப்படி- முஷாரஃபும் வளைக்கரங்களும், பயங்கரவாத தடுப்புச் சட்டம், முட்டை, மின்னஞ்சல் மிரட்டல், மூன்றாவது அணி, பௌத்தம் , கிருத்துவம்
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20111042&edition_id=20011104&format=html )

பாவண்ணனின் சிறுகதைகள் வடிவமும் ஆக்கமும்- க.நாகராசன்- பாவண்ணனின் சிறுகதைகளை முன் வைத்து அவரது படைப்புலகைப் பற்றிய ஒரு விமர்சனம்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60111041&edition_id=20011104&format=html )

London’s first documentary and short film festival will be held from October 26 to 1st of November 2001.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60111042&edition_id=20011104&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும் – மனத்தின் வைரஸ்கள்- ரிச்சர்ட் டாக்கின்ஸ்,

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்-தோத்தப்பல்- (TOTFL- Test of Tamil As a Foreign Language)

சகீனாவின் வளையல்கள்- சாகிரா சையது, அத்தனை ஔவையும் பாட்டிதான்- இன்குலாப்

கவிதைகள்: நலமா- சேவியர், ஞானச் சுடரே நீ எங்கே போயொளிந்தாயோ?- வ.ந.கிரிதரன், இப்படியாய் கழியும் பொழுதுகள்- தி.கோபால கிருஷ்ணன், மண் தின்னும் மண்- கோகுல கிருஷ்ணன், உந்தன் பின்னால் -கு.முனியசாமி, எனக்கொரு வரம் – அனந்த் அனந்த நாராயணன்

சமையற் குறிப்பு: ஒரிஸ்ஸா- தோஹி மச்சா (தயிர் மீன் குழம்பு), ஒரிஸ்ஸா- மச்சா தர்காரி ( காய்கறி மீன் குழம்பு)

நவம்பர் 11 2001 இதழ்:
100-3-97 என்னும் கணக்கை ராஜன் குறை இந்தப் பகுதியில் முன் வைக்கிறார். அதாவது 100ல் 3 விழுக்காடான பிராமணர்கள் 97 விழுக்காடு மக்களை விடவும் கல்வியும், அரசு அதிகார அமைப்பிலும் முக்கியத்துவம் பெற்றது. இதை மையப் படுத்தாமல் பெரியார் கண்டிப்பாக சாதி ஏற்றத் தாழ்வை நீக்கும் கலகத்தைத் துவக்கி இருக்கவே முடியாது. அதே சமயம் அவர் பிராமண எதிர்ப்பு என்னும் குறுகிய நோக்கத்துக்காக வாழ்நாள் முழுதும் பாடுபடவில்லை.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20111111&edition_id=20011111&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- உலக வர்த்தக நிறுவனம், மஜாரில் சுதந்திரக் காற்று, போனஸ், பின் லாடன்
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20111112&edition_id=20011111&format=html )

உலக வர்த்தக நிறுவனம் -World Trade Organization -டோஹா- பிரச்சனைகளும் இதில் முக்கியமானவர்களும்

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20111113&edition_id=20011111&format=html )

பூமணிக்கு ‘விளக்கு’ இலக்கிய விருது- விளக்கு தமிழிலக்கிய நிறுவனம்- பூமணி அவர்களின் வாழ்நாள் இலக்கியப் பணிக்கான விருது

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60111111&edition_id=20011111&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்

பிரபஞ்சத்து மாயங்கள்- கரும் ஈர்ப்பு மையங்கள்- வ.ந.கிரிதரன், மூலக்கூறு விவசாயம் (பயிர்கள் மூலம் மருந்து உற்பத்தி செய்தல்)- ஏன் இதற்கு எதிர்ப்பு, மனத்தின் வைரஸ்கள்-2-தொத்து நோய் தாக்கிய மனம்- ரிச்சர்ட் டாக்கின்ஸ்

கவிதைகள்- லெக்ஸஸ் தூங்கி- சித்திர லேகா, கல்லும் முள்ளும்- விக்னேஷ், இலையுதிர் காலம் – பசுபதி, இன்னும் கொஞ்சம்- அனந்த், சாசுவதம்- தி.கோபாலகிருஷ்ணன், திசை தொலைத்த நாட்களின் நினைவாக- கார்த்திக் வேலு, மாயக் குயவன் மண் பானைகள்- சி.ஜெயபாரதன், எரிச்சலின் புதல்வன்- சேவியர்

கதைகள்: அவரவர் வாழ்க்கை- லாவண்யா, அத்தனை ஔவையும் பாட்டி தான்-2 -இன் குலாப், எதிர்கொண்டு- பூமணி

சமையற் குறிப்பு- பிரான்ஸ் இனிப்பு-நவ்கட், காய்கறி பார்லி சூப்

நவம்பர் 18,2001 இதழ்:

வளர்ந்த அமெரிக்கா – வளரும் இந்தியா- சின்னக் கருப்பன்- ஆப்கானில் தாலிபான் களுக்கு எதிரான சுதந்திர் வேட்கைக் குரல்கள் கேட்கத் துவங்கி விட்டன. பர்மாவிலும், திபெத்திலும் ஜனநாயத்துக்கான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறது. அது மதிக்கப் பட வேண்டும்.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=201111815&edition_id=20011118&format=html )

பெரியாரியம்- தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள்-3- ராஜன் குறை- தமிழ் தேசியம் இந்திய தேதியம் என்பவற்றில் ஜின்னாவுக்கு ஒப்பான பிடிமானம் பெரியாரிடம் இல்லை. தனித் தமிழ் நாடு என்று அவர் குரல் எழுப்பியது பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவே.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=201111814&edition_id=20011118&format=html )

இந்த வாரம் இப்படி- 1.உலக வர்த்தக நிறுவனப் பேச்சுகளில் மருந்துக் காப்பீட்டில் உரிமை பெற்றார் முரசொலி மாறன். 2.ஆப்கானில் இனி என்ன?3. ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம். 4.அரசு போக்குவரத்து ஊழியர் போராட்டம் தனியார் மயமாக்கத்துக்கு வழி வகுக்குமா?

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=201111812&edition_id=20011118&format=html )

பூக்கும் கருவேலம் பூமணியின் படைப்புலகம்- ஜெயமோகன்- “பிறகு” நாவல் பூமணி இயல்புவாதத்தை மேலெடுத்துச் சென்ற படைப்பாளி என்பதற்கான சான்று. அவர் புறக் குரல்கள் அதாவது அரசியல் அம்சங்களுக்கு இடங்கொடுக்காமல் ஒரு தலித்தின் கலைப் படைப்பாகத் தம் எழுத்துக்களை முன் வைக்கிறார். இது இந்திய சூழலில் வேறு தலித் இலக்கியகர்த்தாக்களிடம் இல்லாத சிறப்பு அம்சம்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60111181&edition_id=20011118&format=html )

பிறவழிப் பாதைகள்- கோபால் ராஜாராம்- சுஜாதா நைபாலுக்கு நோபல் பரிசு கிடைத்ததைக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். கவிக்கோ திராவிட இயக்கம் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கவே இலக்கியம் படைத்தது என்கிறார். சுஜாதா இன்குலாப் இருவருக்கும் ராஜாராமின் எதிர்வினை. சொல் புதிது காலச்சுவடு இதழ்கள் பற்றிய விமர்சனம்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60111182&edition_id=20011118&format=html )

பர்ப்பிள் வாம்பாட்- தமிழில் வைஷாலி- ஓடும் படகில் நிற்கக் கூடாது என்று சொல்லும் நீதிக் கதை.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=601111811&edition_id=20011118&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- மனத்தின் வைரஸ்கள்-3- விஞ்ஞானமும் ஒரு வைரஸா? , கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

கவிதைகள்: மனித சங்கிலி- ஸ்ரீனி, அழிவின் தீரா நடனங்கள்- இளங்கோ, கிழிந்து கிடக்கும் வானம் அல்ல நீ- ருத்ரா, பூலோகத் திருப்பள்ளி எழுச்சி -அரிகிரிஷ்ணன், ரவி சுப்ரமணியனின் கவிதை, இன்னும் கொஞ்சம் – பசுபதி, விக்னேஷ் கவிதைகள்- 5, தேடல்- கவியோகி வேதம், ஒதுங்கி இரு- விக்கிரமாதித்தன், சிப்பி- நகுலன்

கதைகள்- ஜன்னல்- வ.ந.கிரிதரன், அத்தனை ஔவையும் பாட்டி தான் – இன் குலா

நவம்பர் 23 2001 இதழ்: பூமணி-வெளி ரங்கராஜன்- நாடகம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் அவல நிலை பற்றிய குறும்படம் ஆகியவற்றில் பூமணியின் பங்களிப்பை நினைவு கூர்ந்து நவீன இலக்கியத்தில் அவரின் ஆளுமையை விமர்சிக்கிறார் ரங்கராஜன்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60111231&edition_id=20011123&format=html )

மாறுதலான சினிமாவும் மாறி வரும் சினிமாப் பார்வையும்- அம்ஷன் குமார்
இந்திய சினிமாவில் சத்யஜித் ராய், ரித்விக் கட்டக், மிருணாள் சென் ஆகியோரின் பங்களிப்பு குறித்த கட்டுரை
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60111232&edition_id=20011123&format=html )

நவம்பர் 25,2001:

நமக்கு காசே குறி- கட்டுரை தளத்தில் இல்லை.

அமெரிக்காவில் இந்தியர்- ஜவஹர சைதுல்லா- இந்தியாவை பாம்புகளும் பழமைவாதமும் நிறைந்த நாடாக அமெரிக்கர்கள் காண்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியர் தம்மை இந்தியாவில் வாழ்வோரை விட முன்னேறியவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். இந்தியா வளர்ந்து வருகிறது. மாறி வருகிறது. குறை நிறைகள் எங்கே தான் இல்லை?
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=201112513&edition_id=20011125&format=html )

பெரியாரியம்- தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள்-4- ராஜன் குறை-

பெரியார் மக்களின் சிந்தனையில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் கலகக்காரராகவே இயங்கினார். அவர் கவனம் அதில் இருந்த போது தாழ்த்தப் பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றாமற் போனார் என்று கூற முடியாது. அவரது பின்னணியைத் தாண்டிய மாற்றத்துக்கான சிந்தனை அவரிடம் இருந்தது. அது மிகவும் கவனத்துக்குரியது.

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- போக்குவரத்து ஊழியர், பான் மசாலா, கிர்ஷ்ணசாமி, ஆப்கானிஸ்தான், நோம் சோப்ம்ஸ்கி
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=201112515&edition_id=20011125&format=html )

அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்- டாக்டர் முக்தேதார் கான்- அமெரிக்க முஸ்லிம்களான நம்மிடம் மிகவும் போலித்தனம் உள்ளது. இஸ்ரேலையும் அமெரிக்க யூதர்களையும் கண்டிப்பதில் நம் கவனம் உள்ளது. இஸ்லாமிய நாட்டு ஆட்சியாளர்கள் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் எதேச்சதிகாரத்தையும், வன்முறையையும் அடக்கு முறையையும் நாம் ஏன் கண்டிப்பதே இல்லை? இஸ்லாம் அமைதிக்கும் சமாதானத்துக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஆனது என்பதை நாம் உணர்ந்து அவ்வழியில் உழைக்க வேண்டும்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=201112516&edition_id=20011125&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- அறிவியல் செய்திகள், மீன் பிடிக்க வாறீயளா- குறுகு வெண்மீங்கள் -இ.பரமசிவன்

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்- சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விதிக்கப் பட்ட தடைகளை நகைச்சுவையாகக் கண்டிக்க ஒரு முயற்சி- ஸ்ரீனி

கவிதைகள்- களு(மு)த்துறை, பெரிய பெரிய ஆசைகள்- வ.ந.கிரிதரன், என் தேசம் விழித்தெழுக- ரவீந்த்ர நாத் தாகூர் (தமிழாக்கம் -சி.ஜெயபாரதன்), திறந்த வெளி, முதுமை- சேவியர், ஏன் அதை மட்டும்- கு.முனியசாமி, சாவாத நட்பு-திலகபாமா, இந்த மண் பயனுற வேண்டும்- பசுபதி

கதைகள்: திருப்தி-விந்தன், தண்ணீர்-கந்தர்வன், அத்தனை ஔவையும் பாட்டிதான் -இன்குலாப்

டிசம்பர் 2 2001 இதழ்:

போடோவை முழுவதும் நிராகரிகயுங்கள் பிரஃபுல் பித்வாய் – பயங்கரவாதத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தடா என்பது எந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்யப் பட்டது என்பதிலிருந்து அரசாங்ககம் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. போடோ என்னும் இந்தச் சட்டம் அரசாங்கத்தை ஒருவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதில இருந்து பல அடக்குமுறைகளைக் கையாளவும் அப்பாவிகளைக் கைது செய்யவும் அனுமதிக்கிறது. அனைவரும் இந்த சட்டத்தை எதிர்த்தாக வேண்டும்.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112023&edition_id=20011202&format=html )

காபூல் நாட்குறிப்பு- வாழ்க்கையே ஒரு திரைப்படம்- பெ பெ எஸ்கோபார்- ஏசியா டைம்ஸ் நிருபர் தாம் காபூலில் கண்ட மக்களின் நிலை பற்றி விவரிக்கும் கட்டுரை.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112021&edition_id=20011202&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- மலிவு சாராயம், பேனசீர், விலைவாசி, ஆப்கானிஸ்தான்
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112022&edition_id=20011202&format=html )

மௌனியின் சிறுகதைகள்- மரணமும் மகத்துவமும் – பாவண்ணன்- மௌனியின் படைப்புலகம் பற்றிய ஆழ்ந்த பார்வை பாவண்ணனுடையது. இந்தக் கட்டுரையை சுருக்குவது இயலாது. ஒரு பகுதி கீழே:
“மௌனி இதே போன்ற ஒரு இடத்துக்குத்தான் வருகிறார். சில காட்சிகளைத் தற்செயலாகக் காண்கிறார் அவர். அவற்றின் விளைவாகத் தொடர்ந்து மரணத்தைக் காண்கிறார். எதன் மூலமும் மரணத்தைக் காண முடியும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்திருக்கிறது. தன் பிரக்ஞையின் அனுபவமாகவே மரணத்தை மாற்றிக் கொண்ட பிறகு எங்கும் மரணமே அவருக்குத் தெரிகிறது. வாழ்வு என்பது மரணத்தை எதிர் கொள்வதும் மரணம் என்பது வாழ்வை எதிர்கொள்வதும் ஒரு விளையாட்டு போல மாறி விடுகிறது”
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60112021&edition_id=20011202&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- அதிவேகத்தில் அணுகுண்டு சோதனைகள் – கணினி மூலம், தென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது.

கவிதைகள்: கிராஃபிக்ஸ்-ருத்ரா, ஒரு பானைக் கள்ளு -விக்னேஷ், மொழி பெயர்த்த மௌனம்-கே.கே., கூட்டம்- கு.முனியசாமி, கண்ணீர் முத்துக்கள்- புஹாரி- கனடா, என்ன செய்யலாம் சக புலவரே- மாம்பலம் கவிராயர், பொழுது சாயும் வேளை- பவளமணி பிரகாசம், உதிர்ந்த இசை மலர்- பசுபதி.

கதைகள்: ஆச்சியின் வீடு- அலர்மேல் மங்கை, நினைவலைகள்- ஸ்ரீனி, .வை-6- இன்குலாப், இதுவும் சாத்தியம் தான்- கோபி கிருஷ்ணன்,

சமையற் குறிப்பு- சிக்கன் பிரைட் ரைஸ், இறால் பஜ்ஜி.

டிசம்பர் 10 2001 இதழ்:
காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் சமூகப் பின்னணி- முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு- பண்டிதா- மத்திய அரசு காஷ்மீர் வளர்ச்சிக்காக வாரி வழங்கிய நிதி உதவி எல்லாம் சில பணக்காரர்களின் கைக்கே போய்ச் சேர்ந்தது. ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும், முதலில் பொருளாதார அடிப்படையில் ஒன்று தேர்த்த மதவாத அமைப்புகள் பின்னர் அவர்களை மத அடிப்படையில் தூண்டி விட்டு பயங்கரவாதத்துக்கு வழி வகுத்தன.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112103&edition_id=20011210&format=html )

வேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவைத் திட்டும் விளையாட்டு- நீரா குக்ரேஜா சஹோனி- முன்பு கம்யூனிசத்துக்கு ஆதரவாகப் பேசிய அறிவு ஜீவிகள் இப்போது இஸ்லாமுக்கு வால் பிடித்து பயங்கரவாதத்தை நியாயப் படுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112103&edition_id=20011210&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன் -கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112101&edition_id=20011210&format=html )

தீர்ப்புகள் இங்கே? தீர்வுகள் எங்கே?- டான்ஸி நில அபகரிப்பு வழக்கு மற்றும் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுவிக்கப் பட்டுள்ளார். ஆனால் அரசியல்வாதிகளை விசாரிக்க (பழி வாங்குதல் இல்லாமல் விசாரிக்க) தனி அமைப்பு வேண்டும்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112102&edition_id=20011210&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்:
மரபணு மாற்றப் பட்ட பருத்தியை விற்க இந்தியா அனுமதி, மின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம், மாறி வரும் செவ்வாய் கிரகம், நகலாக்கம்

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்: நாணல் போல வளைந்து சிகரம் போல உயர- கோமதி நடராஜன்

கவிதைகள்:
வையகத் தமிழ் வாழ்த்து- சி.ஜெயபாரதன், கல்யாண்ஜி கவிதைகள்-4, இருப்பதினால் ஆய பயன் என்-கே.கே.,குரல் வளம் – பசுபதி, பயமறியாப் பாசம்- புகழேந்தி.
கதைகள்:
ஔவை- பகுதிகள் 7,8 – இன்குலாப், கசப்பான ஒரு வாசனை- வண்ணதாசன், ஊமைப் பட்டாசு – விந்தன்

சமையற் குறிப்பு:சோயா கட்லட், பருப்பு கபாப்.

டிசம்பர் 22,2001 இதழ்: அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி- ஜெயமோகன்- ஜெயமோகன் பொதுவாக அங்கதமும் ஆழ்ந்த பொருளும் உள்ள கட்டுரைகள் எழுதுவார். அவர் ஆவேசத்துடன் எழுதியுள்ள சில கட்டுரைகளுள் இது ஒன்று. ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவுவது தொடங்கி அமெரிக்காவில் ஒருவர் கலைஞரின் நல்லாசியுடன் தமிழ் மையம் ஒன்றை நிறுவுவதைத் தொட்டுப் போகிறது க்ட்டுரை. நல்ல இலக்கியவாதிகளும் தம் நூல்களைத் தாமே வெளியிடும் அவலத்தையும் -தனது அகம்பாவத்தைக் காட்ட ஆடம்பரமாக இவர்கள் எழுப்பும் சிலைகளையும் கட்டிடங்களையும்- ஒப்பிட்டு எழுதி இருக்கிறார். தமிழில் இலக்கியவாதி நல்ல இலக்கியம் இரண்டுக்கும் தரப்படும் இடம் மிகவும் கேவலமானது தான். ஜெயமோகனின் ஆவேசம் கண்டிப்பாக ஆழத்திலிருந்து வரும் அசலான வருத்தம். இது போன்ற கட்டுரைகளே பழைய திண்ணை இதழ்களை நாம் தோண்டி வாசிப்பதன் காரணம்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112221&edition_id=20011222&format=html )

கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம் பெண்ணும்- ஞாநி- கண்ணகி சிலை அகற்றப் பட்டதற்குத் தமிழ் நாட்டின் சான்றோர்கள் எல்லாம் வரிந்து கொண்டு களத்தில் இறங்கி எத்ரிப்புத் தெரிவித்த காலத்தில் ஞாநி பயணித்த திருவனந்தபுரம் இரயிலில் நள்ளிரவில் ஒரு ராணுவ வீரர் ஒரு சக பயணியான இளம்பெண்ணைத் தொட்டுச் சீண்ட அவர் புகார் கொடுத்துப் போராடுகிறார். “அவர் கேரளப் பெண். நம் பெண்கள் வாயை மூடிக் கொண்டு இருந்திருப்பார்கள்” என் கிறார் ஒரு பயணி. வாயை மூடிக் கொண்டு கோவலன் போன வழியில் அவனை விட்டதற்காகத் தான் கண்ணகிக்குத் தமிழ்ச் சான்றோர்கள்(!) இத்தனை பாராட்டுத் தருகின்றனர்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112222&edition_id=20011222&format=html )

நம்புபவர்களும் நம்பாதவர்களும்- சார்லஸ் டபள்யூ வெப்.எம்.டி- யூதர்களை, முஸ்லீம்களைக் கொன்ற கிறித்துவ மத வெறியர்கள் மற்றும் ஹிட்லர் இவர்கள் இவற்றைக் கடவுளின் பெயரால் தான் செய்தார்கள். தம் மிருக வெறியை விமர்சிப்பவர்களை நாத்திகர் என்று முத்திரை குத்துவார்கள்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112223&edition_id=20011222&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- கண்ணகி சிலையை அகற்றி இருப்பது அடாவடித்தனம்.2. ஜெயலலிதாவுக்கு எதிரான வேட்பாளர் யார்? 3. பாராளுமன்றத் தாக்கியவர்களை பாகிஸ்தான் பாதுக்காக்கும் போது நாம் ஏன் இவ்வளவு நாசூக்காக பாகிஸ்தானை அணுக வேண்டும்?
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112224&edition_id=20011222&format=html )

சீர் குலைந்த செர்நோபிள் அணுவுலை- சி.ஜெயபாரதன் – கனடா- இந்தக் கட்டுரையின் மூலம் நாம் ஜெயபாரதன் 40 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய மற்றும் கனடா அணுவுலைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்று அறிகிறோம். அவர் செர்நோபிள் அணு உலையில் புறக்கணிக்கப் பட்ட பாதுகாப்பு அம்சங்களை நமக்குப் புரிய வைக்கிறார். கட்டுரையை அவர் அணு உலை வேண்டாம் என்று முடிக்கவில்லை. இந்திய – அமெரிக்க அணு உலைகள் பாதுகாப்பானவை. உலகெங்கும் நல்ல பயிற்சி கொடுத்து உலைகளை இயக்க வேண்டும் என்று முடிக்கிறார்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112225&format=print&edition_id=20011222 )

அறிவியலும் தொழில் நுட்பமும்
கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பாக இருக்கும் எத்தனால் கார்கள், டிஎன் ஏ கணினிகள், சிவப்பு ஒயின் ஏன் உடலுக்கு நல்லது? இந்திய விவசாயத்தின் பிரச்சனைகள்

கவிதைகள்
நீயும் நானும்- பவளமணி பிரகாசம், காலம் விழுங்கிய காலன்-ஜெயானந்தன், சுழியங்களின் இடமாற்றம்-மனஹரன், சொப்பன வாழ்வில் மயங்கி- வ.ந.கிரிதரன், மகப்பேறு -ருத்ரா, மதுரபாரதி- சின்னக் கண்ணன்

கதைகள்:மௌன ஒலி- ராம்ஜி, ஔவை-11,12,13-இன்குலாப்

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் – வீட்டில் கேட்ட கடி ஜோக்குகள், திண்ணை அட்டவணை

சமையற் குறிப்பு- முட்டை சாட் மசாலா, முட்டை சீஸ் பரோட்டா, ரிப்பன் பக்கோடா

டிசம்பர் 29,2001 இதழ்:
இந்தியாவில் மக்கட் தொகைக் கணக்கெடுப்பும் மதவாதம் உருவான விதமும்- ஆர்.பி.பகத்- தமிழில் கல்பனா சோழன்- 18ம் நூற்றாண்டில் இந்தியாவில் மக்கட் தொகைக் கணக்கெடுப்பு த் துவங்கப் பட்ட போதே பிரிட்டிஷார் மத அடிப்படையில் எண்ணிக்கை இருப்பிடம் ஆகிய விவரங்களைச் சேகரித்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளப் பிரிவினையை மத அடிப்படையில் நடத்தினர். இதன் பின்னரே மதக் கலவரங்கள் இந்தியாவில் வரத்துவங்கின.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112291&edition_id=20011229&format=html )

இந்த வாரம் இப்படி-மஞ்சுளா நவநீதன்- ஒரு கண்ணகி சிலைக்கு பதில் நூறு கண்ணகி சிலைகள், இந்தியா பாகிஸ்தான் போர் மூளும் அபாயம், ஜெ இன்னொரு வழக்கிலும் விடுதலை
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112292&edition_id=20011229&format=html )

அர்ஜென்டைனாவின் பிரச்சனைகள்- வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி இவற்றால் மக்கள் கடைகளை சூறையாடும் அளவு மோசமான நிலை. அமெரிக்கா ஒன்றே காப்பாற்ற வாய்ப்பு.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112293&edition_id=20011229&format=html )

கண்ணகி சிலை, திருவள்ளுவர் சிலை, சங்கராச்சாரியார் சிலை, தமிழன்னை சிலை- தமிழன்னை சிலை எனபது தமிழ் மதம் எனபதன் அடித்தளம் போல. வங்காள மொழி பேசுவோரின் மொழிப்பற்று தமிழரின் பற்றை விடவும் தீவிரமானதே. அங்கே இந்தி எதிர்ப்பும் கிடையாது. வங்காள அன்னை சிலையும் கிடையாது. அவர்களது தன்னம்பிக்கை அவ்வளவு வலுவானது.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112294&edition_id=20011229&format=html )

ஒரு ராத்திரி- ஒரு பயணம்- ஒரு மணி நேரம்- நாலு கோவில்- இரா. முருகன் – அவரது கும்பகோணப் பயணக் கட்டுரை.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112295&edition_id=20011229&format=html )

பாவண்ணனின் ஏழு லட்சம் வரிகள்- காலத்தின் இருப்பும் இயக்கமும்- திருஞான சம்பந்தம்- பாவண்ணனின் சிறுகதைத் தொகுப்பான ஏழு லட்சம் வரிகளுக்கான நூல் மதிப்புரை.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60112291&edition_id=20011229&format=html )

சினுவா அச்சேபே எழுதிய ‘விஷயங்கள் உதிர்ந்து விழும் போது’ நாவல்- இக்போ பழங்குடியினரின் பண்பாட்டை மையமாகக் கொண்ட இந்த நாவலில் ஐரோப்பியர் ஆப்பிரிக்கர்கள் காட்டுமிராண்டிகள் போல சித்தரித்து எழுதியவற்றிற்கு பதிலாக ஆப்பிரிக்க மக்களின் தொன்மையான பண்பாடும் நம்பிக்கைகளும் சித்தரிக்கப் பட்டுள்ளன.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60112292&edition_id=20011229&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- ஐஸ்லாந்து எரிபொருள் புரட்சியை ஆரம்பிக்கிறது.

கவிதைகள்:
விடியல், ஆளவந்தான்-பவளமணி பிரகாசம், தேவன் அவதாரம் -பசுபதி, அன்பை விதை, வன்முறை புதை- கவிமாமணி யோகியார் வேதம், காலை-கே.ஆர்-விஜய், பிக்காஸோ அசைவற்ற வாழ்வும் அணிலும்- அல் பேர்டி- தமிழில் வ.ந.கிரிதரன், புதிய பலம்- அனந்த், சும்மா ஒரு ஞாயிற்றுகிழமை காலைப் பாட்டு

கதைகள்: சாவித்திரி- ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை, இடைவெளி-கோகுலக் கண்ணன்.

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் -SAMANE- An Appeal

சமையற் குறிப்பு- ஜீரகத் தண்ணீர்

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in திண்ணை and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s