ஒரு முத்தத்தின் ஞாபகம்


250px-Mouth

ஒரு முத்தத்தின் ஞாபகம்

தலித்துகளைப் பற்றிய பதிவுகள் – தலித் படைப்பாளிகளின் பதிவுகள் எவ்வளவு அபூர்வமானவையோ அவற்றை விடவும் அபூர்வமானவை மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொடிய நோய்க்குள்ளானோரின் வாழ்க்கை பற்றியவை. தீராத நோயினால் பாதிக்கப் பட்ட ஒருவருக்கும் கனவுகளும் நுட்பமான விழைவுகளும் இருக்க முடியும் இல்லையா? அவர்களின் ஆசை அபிலாஷைகள் கனவுகள் மற்றும் மென்மையான செய்திகள் சமூகத்தினால் முற்றாகப் புறக்கணிக்கப் படுகின்றன. “கருணையினால் அல்ல” என்னும் ஜெயகாந்தனின் நாவல் பின்னாளில் “கருணை உள்ளம்” என்னும் திரைப்படமாக வெளி வந்தது. அந்த நாவலின் கதாநாயகன் வலிப்பு நோயால் பீடிக்கப் பட்ட நடுத்தர வயதுள்ளவர். அவரை ஒரு பெண் மணக்க முன் வரும் போது “கருணையினால் நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்” என்பதே அவரது வேண்டுகோள். “கருணையினால் அல்ல- அன்பினாலேயே உங்களை மணக்க விரும்புகிறேன்” என்னும் கதாநாயகியின் பாத்திரப் படைப்பு மிகவும் நம்மை நெகிழ வைக்கும்.

இனிய உதயம் டிசம்பர் 2013 இதழில் வெளியான பாறப்புறத்துவின் மலையாளச் சிறுகதை ” ஒரு முத்தத்தின் ஞாபகம்” . என்னும் கதை ஒரு கவிதை போன்றது. கதை சொல்லித் (தன் மனைவியைப்) பெண் பார்க்கப் போகும் போது அவரது தூரத்து உறவினளாக பொன்னமாள் என்னும் இளம் பெண்ணைப் பார்க்கிறான். அந்தப் பெண் வீட்டில் இருக்கும் போது அவனிடம் பேசுவது இல்லை. தோட்டத்தில் பூப் பறிக்கும் போது மட்டுமே அவனால் அவளைக் காண இயல்கிறது. அவனால் அவள் கவரப் பட்ட போதும் அதை மிகவும் நாசுக்காகவே தெரிவிக்கிறாள். நாளை கிளம்புகிறேன் என்கிறவனை இரண்டு நாட்கள் கழித்துக் கிளம்பும்படி வேண்டுகிறாள். அடுத்த நாள் விடியற்காலையில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவன் நெற்றியில் அவள் முத்தமிட அவன் கண் விழிக்கிறான். அவள் ஓடி மறைகிறாள். நுட்பமான ஒரு காதலை அவள் வெளிப்படுத்துகிறாள். அந்த முத்தத்துக்குப் பிறகு பொன்னம்மளைப் பார்க்க அவனுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. அவளைப் பாதுகாக்கும் உறவுகள் அவளை மனித நேயமின்றி 18 – 19 மணி நேரம் என ஒரு புறம் வேலை வாங்க மறு புறம் அவள் நோய் முற்ற ஒரு நாள் இவனை மறுபடி காணாமலேயே அவள் உயிரை விட்டு விடுகிறாள்.

வாழ்க்கையின் நாம் சந்திக்கும் மாற்றுத் திறனாளியோ அல்லது நோய்வாய்ப் பட்டவரோ அவர்கள் யாருமே தாம் மற்றவருக்கு இணையாக நடத்தப்படக் காரணமான நபர்களை நடத்தப்பட்ட நொடிகளையும் என்றும் நினைவில் இறுத்திக் கொள்கிறார்கள். பாறப்புறத்துவின் கதை நம் மனதைத் தொடும்.

(image courtesy :wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s