2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்


rangaswamy_elango

2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்

THE WEEK இந்தியாவின் தலை சிறந்த ஆங்கில வாரப் பத்திரிக்கைகளுள் ஒன்று. தமிழ் நாட்டைச் சேர்ந்த இளங்கோ 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் (Man of the year 2013) என்னும் பாராட்டை அந்தப் பத்திரிக்கையின் ( 15.12.2013 இதழில்)அட்டைப் படத்துடன் பெற்றுள்ளார்.

ரசாயனப் படிப்பில் பொறியியல் பட்டதாரியான இளங்கோ ஒரிஸ்ஸாவில் எண்ணை நிறுவனத்தில் தம் பணியைத் தொடங்கி சென்னையில் CSIR என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும் பணி புரிந்தார். 90களில் சென்னையில் பணி புரியும் போது அவருக்குத் தம் ஊரான கூத்தம்பாக்கம் (சென்னையை அடுத்த திருவள்ளூரை ஒட்டியது) மிகவும் பின் தங்கி இருப்பதும் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் போன்ற சமூக விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதும் வருத்தமளித்தன. இவற்றை மாற்றும் முடிவுடன் அவர் தம் பணியைத் தொடங்கினார். கள்ளச்சாராய எதிர்ப்பில் அவருக்கு மிரட்டல்கள் நிறைய வந்தன. ஒரு முறை அவரைத் தாக்கினர். அப்படித் தாக்கியவர்களுள் ஒருவர் பின்னாளில் அவரது உதவியாளரானார். 1994ல் தம் வேலையை விட்டு கூத்தம்பாக்கத்தில் தங்கித் தன் பணியைத் தொடங்கிய இவர் 1996ல் பஞ்சாயத்துத் தேர்தலில் வென்று பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கிராமத்தின் தன்னிறைவு என்பதையே இவரது மிகப் பெரிய சாதனை மற்றும் தொலைநோக்குக்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது கூத்தம்பாக்கம் . தலித் ஆன இவர் தலித் மற்றும் தலித் அல்லாதோர் என்று பிரிந்தும் சண்டையிட்டும் இருந்த மக்களை ஒன்று படுத்தினார். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அவரது துணைவியார் பணிபுரிந்து குடும்பத்தின் பொறுப்பு மற்றும் பொருளாதாரத்தை கவனிக்கிறார். இவர் தம்மை இந்தக் கிராமத்தின் பணிக்கெனவே அர்ப்பணித்துள்ளார். தமது வெற்றி அதாவது இந்த கிராமத்தின் வெற்றி திட்டமிட்ட ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சாதனை. இதைக் கற்றுத் தேற உலக அளவிலும் இந்திய அளவிலும் இவரை அணுகும் போது இவர் அவர்களுக்கு வழிகாட்டுவதிலிருந்து பின் வாங்குவதில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கங்கள் மற்றும் பயிலரங்கங்களில் இவர் உரையாற்றி இருக்கிறார்.

சுய உதவிக் குழுக்கள் முறையாக ஒழுங்கு செய்யப் பட்டு தன்னிறைவுக்கு முக்கியக் காரணமாகின்றனர். உலகத் தரம் வாய்ந்த சாலைகளைத் தம் கிராமத்தில் அமைத்திருக்கிறார். இவரது அணுகு முறை கிராமத் தன்னிறைவு என்பதே.

வீக் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் “ஊரக வளர்ச்சியில்” தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் கிராமப்புற வளர்ச்சியில் மட்டுமே மக்கள் பொருளாதாரம் முன்னேறும் என்றும் கூறுகிறார். அதாவது ஒவ்வொரு கிராமத்தில் உள்ள எல்லாப் பணிகளுக்கும் கிராமத்தில் இருந்தே தீர்வு. இதன் விளைவாக கிராமப் பொருளாதாரம் முன்னேறும்.

இதை ஒரு உதாரணத்துடன் நாம் குறிப்பிடலாம். கிராமத்தில் சாக்கடை அமைக்கும் பணியில் மலிவான ஆனால் தரமான பொருட்களை கிராமத்தில் இருந்தே பயன் படுத்தி முடித்தார். இதையே சந்தையில் இருந்து வாங்கி இருக்க வேண்டும் என்று கூறி முறைகேடு என்னும் அடிப்படையில் 1999ல் அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். ஆனால் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அது கைவிடப் பட்டது. ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற அந்தக் கிராமத்தின் அனைத்து மக்களும் இணைந்து பாடுபட வேண்டும். இளங்கோ கூத்தம்பாக்கத்தில் உள்ள எல்லா குடும்பங்களின் விவரங்களை வைத்துக் கொண்டு அவர்களின் கல்வி, வருமானம் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொள்கிறார்.

இவரைப் போலவே பலரும் சமூகப் பணி ஆற்றும் போது இவருக்கு ஏன் இத்தனை பாராட்டு? இவரது அர்ப்பணிப்பும் திட்டமிட்ட பணியும் கூத்தம்பாக்கத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் 40000 மாத வருமானத்துக்கு வழி செய்துள்ளது.

இளங்கோவுக்கு நம் வணக்கமும் வாழ்த்துக்களும்.

(image courtesy: realheros.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s