மற்றுமொரு புத்தாண்டு 2014


highflyingge
மற்றுமொரு புத்தாண்டு 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மற்ற எந்தக் கொண்டாட்டத்தையும் போலவே மகிழ்ச்சியான ஒரு பொழுதுக்கு மற்றொரு வாய்ப்பு.

நம்பிக்கைகள் புத்துயிர் பெற, புதிய மைல்கல்களை நோக்கி நகர முனைப்புள்ளவருக்குக் காலம் காத்திருக்காது என்னும் ஒரு நினைவூட்டல் ஒரு ஆண்டு உதயமாகும் நேரம்.

சமீபத்தில் ‘டிஸ்கவரி’ தொலைக்காட்சியில் உயரப் பறக்கும் வாத்துக் கூட்டம் பற்றிப் பார்த்தேன். சில வாத்துகள் கூட்டம் கூட்டமாக இமயமலைச் சிகரங்களைக் கடந்து இன்னொரு கண்டத்துக்குப் பறந்து செல்லுகின்றன. வல்லூறுகள் குறுக்கே புகுந்து ஓரிரு வாத்துக்களைத் தனிமைப் படுத்திக் கவ்வியும் செல்லுகின்றன.

நாம் கையில் தூக்கிவிடும் அளவுள்ள ஒரு பறவைக்குள்ளே எத்தகைய ஆற்றல்! எனக்கு இது நமக்குள் நாம் உணராமல் விட்டிருக்கும் ஆற்றலையே நினைவு படுத்தியது. நாம் ஏதோ ஒரு காரணத்தில் பல கனவுகளை விட்டு விடுகிறோம் அல்லது தள்ளிப் போடுகிறோம். நமக்குள் உள்ள ஆற்றலை அந்தப் பறவை போல இயல்பாக இயக்கி ஏன் நம்மால் மேற்செல்ல இயலுவதில்லை.

புறவயமான – அதாவது மற்றவர் நம்மை மதிக்க அல்லது ஏற்க என்றான- காரணங்களைக் காட்டி அகவயமான கனவுகள் யாவற்றையும் நாம் அடைத்துப் போட்டு விடுகிறோம்.

2014ல் நாம் நம் கனவுகளின் மகத்துவம் உணர்ந்து நம்முள் இருக்கும் அளப்பரிய உந்து சக்தியால் அக்கனவுகளை நோக்கி முன்னகர்வோம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு. Bookmark the permalink.

1 Response to மற்றுமொரு புத்தாண்டு 2014

  1. வேகநரி says:

    உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s