கிருஷ்ணரின் மகன் பெற்ற குஷ்டரோகம்- விமோசனம்


download
கிருஷ்ணரின் மகன் பெற்ற குஷ்டரோகம்- விமோசனம்

கிருஷ்ணரின் வாழ்க்கையில் மகாபாரதத்தை ஒட்டியுள்ள பகுதி மட்டுமே அனேகமாக எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் மகாபாரத யுத்தத்துக்கு முன்பே அவர் கம்சனை வதை செய்தது மற்றும் 8 மனைவியரை மணம் முடித்தது ஆகியவை நிகழ்ந்து விட்டன. பாகவத புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம் இவைதான் அவரது வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் விளக்குபவை.

ருக்மணி, சத்யபாமா, ஜம்பாவதி, நக்னஜிதி, காளிந்தி, மித்ரவிந்தா, பத்ரா, லட்சுமணா இவர்களே அந்த எட்டு பேர். நரகாசுரனிடமிருந்து விடுவிக்கப் பட்ட 16100 பெண்களும் தம்மைத் தம் குடும்பம் ஏற்றுக் கொள்ளாது என்று கிருஷ்ணருடனேயே இருந்து விடுகிறார்கள். மணவாழ்க்கையில்லாமல் பக்தைகளாக மட்டுமே இவர்கள் இருந்தார்கள் என்பது ஒரு நம்பிக்கை. கிருஷ்ணரின் 8 மனைவியரில் ஒவ்வொருவருக்கும் பத்து மகன்கள் இருந்தார்கள். நரகாசுரனிடமிருந்து மீட்கப் பட்ட பெண்களில் ரோகிணிக்கும் கிருஷ்ணருக்கும் குழந்தைகள் இருந்தன என்பதும் நம்பிக்கை.

உண்மையில் இந்த நம்பிக்கைகள் நிச்சயமாக ஊர்ஜிதம் செய்ய முடியாதவையே. டெல்லியில் நான் இருந்த போது குருஷேத்திரம் அருகில் தான் என்றார்கள். போய்ப் பார்க்கலாமா என்ற போது அங்கே எதுவுமே இல்லை. ஒரு குளம் மட்டுமே உள்ளது என்று பதில் வந்தது.

ஒரு முக்கியமான மற்றொரு அம்சம் அப்போது அசுரரும் மனிதரும் சந்தித்த தருணங்கள். பகாசூரன் என்பவனை பீமன் வதம் செய்கிறான். நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்கிறார். அதாவது அசுரரும் மனிதர்களும் மோதுகிறார்கள். அசுரர் பாதாளத்திலும், மனிதர் பூமியிலும் தேவர் வானிலும் இருந்தார்கள். இதுவும் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதே.

கிருஷ்ணரின் எல்லா மகன் களும் பெயர் பெறவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மகாபாரதத்துக்குப் பின் இருந்த தலைமுறை பற்றிய புராணக்கதைகள் குறைவே.

ஜம்பாவதியின் பத்து மகன்களில் மூத்தவனான சாம்பனும் ஏனைய ஒன்பது மகன் களுமே க்ருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள். துரியோதனனின் மகளான லட்சுமணாவை அவளது சுயம்வரத்துக்கு முன்பே சாம்பன் சிறை எடுத்து கௌரவ சேனையால் அவன் தோற்கடிக்கப் பட அவர்களால் சிறையிலும் அடைக்கப் படுகிறான். பலராமர் சாம்பனை மீட்க முயல துரியோதனன் அவர் கோரிக்கையை நிராகரிக்கிறான். தம் கையில் உள்ள கலப்பையால் அவர் சிறையை உடைத்து அரண்மனையையே அழிக்க முற்படும் போது துரியோதனன் இறங்கி வந்து அவளை சாம்பனுக்கே மணம் முடிக்கிறான். ஷத்திரியர் ஒரு பெண்ணக் கடத்தக் கூடாது என்னும் பண்பாட்டுக்கு சாம்பனும் அர்சுனன் (சுபத்திரையை சிறை எடுத்ததால்) விதிவிலக்காகிறார்கள்.

இந்த சாம்பன் பற்றிய ஒரு சிறு கதையை இமயம் உயிர்மை ஜனவரி 2014 இதழில் எழுதியிருக்கிறார். அவன் குஷ்டத்து ஆட்பட்டதும் விமோசனம் அடைந்ததும் ஆன புராணக்கதையை உள்ளடக்கிய இந்தக் கதை பற்றிய விமர்சனம் அடுத்த பகுதியில்.

(image courtesy:life-quote.in)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s