டெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள்


india_gate
டெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள்

டெல்லியில் ஒரு முதலமைச்சர் தமக்கு நியாயம் கிடைக்க- இன்னும் சரியாகச் சொல்வதானால் தான் நியாயம் என்று நினைப்பது நடக்க பொது இடத்தில் மறியல் செய்கிறார். போக்குவரத்து பாதிப்பு மற்றும் சில அலுவலங்களை மூட வேண்டிய நிலை.

ஒரு முதலமைச்சர் அரசியல் நிர்ணயச் சட்ட அடிப்படையில் ஆன ஒரு முக்கியமான பதவி வகிப்பவர். அவருக்கு மத்திய அரசின் கீழ் உள்ள காவல்துறை மீது புகார் என்றால் அதை முறையாகப் பேசித் தீர்க்க மத்திய அரசின் அமைச்சர் மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் உள்ளனர். ஒரு வேளை அவர்கள் அனைவரும் கூட்டாக உதவவில்லை என்று அவர் கருதினால் நீதிமன்றம் இருக்கவே இருக்கிறது.

இப்படு ஒவ்வொரு கதவாகத் தட்டும் போதே மக்களின் கவனத்தை அவர் ஈர்த்திருக்க முடியும். ஒரு முதலமைச்சர் என்பவருக்கு அந்த அளவு பொறுமை காட்டும் கண்ணியமும் கடமையும் உண்டு. ஆனால் கேஜரிவால் மலிவான ஒரு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார், ஒட்டுமொத்தமாக காவல்துறையில் அனைவரையும் அவர் மட்டமாகச் சித்தரிப்பதும் ஆரோக்கியமானதோ நல்ல விளைவுகளை ஏற்படுத்தப் போவதோ அல்ல.

இது கேஜரிவாலின் அத்து மீறல்

அடுத்த அத்துமீறல் நான் அதிகம் விளக்கத் தேவையே இல்லாதது. மத்திய அமைச்சர் சசி தரூர் தனது சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய துக்கத்தில் இருக்கிறார். அவரது மனைவி இறந்த பின்னணி நமக்கு முக்கியமானது அல்ல. அது சட்டபூர்வமாக அணுகப்பட்டு வருகிறது. அவரது சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்க ஊடகங்களுக்கு இது பெரிய வாய்ப்பாகி விட்டது. யாருடைய சொந்த வாழ்க்கையை மையப் படுத்தி மலிவான மட்டமான ரசனையுடன் ஊடகங்கள் லாபம் தேடுவது மகா கேவலம். நடிகைகளுக்கும் புகழ் பெற்ற யாருக்குமே இது அடிக்கடி நடக்கிறது. அவர் துக்கத்தில் இருப்பதையும் பொருட்படுத்தாத அவசரம் விரசமானது.

இது ஊடகங்களின் அத்து மீறல். இதையெல்லாம் பார்க்கும் போது சமூக வாழ்க்கையின் தராதரம் தாழ்ந்து விட்டது கண்கூடு. நல்ல தரம் வரும் என்று நாமும் மக்களுக்கு பல தரக்குறைவான அத்துமீறல்களை நினைவு படுத்திக் கொண்டே இருப்போம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to டெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள்

  1. நண்பரே, அரவிந்த் கேஷ்ரிவால் தொடக்கத் திலிருந்தே ஒரு சினிமா ஹீரோ பாணியில் தான் அரசியல் செய்கிறார். நம் மக்களுக்கும் சினிமா ஹீரோ ரொம்ப பிடிக்கும் என்பதாலும், எந்த கட்சியும் சரியானதில்லை இதில் இரண்டில் ஒன்றைதான் தேர்ந்தெடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கத்திலும் ஆம் ஆத்மிக்கு 26 சீட் அள்ளி கொடுத்து விட்டார்கள். அதன் விளைவு தான் இது. எனக்கென்னமோ இது நீண்ட நாள் ஓடாது என்றே நினைக்கிறேன் :))

Leave a Reply to karikalankaruthu Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s