பாதிக்கப் பட்ட பெண்ணால் பலாத்காரத்துக்கு பதிலடி கொடுக்க முடியுமா?


1528459_690017627705044_574818587_n

பாதிக்கப் பட்ட பெண்ணால் பலாத்காரத்துக்கு பதிலடி கொடுக்க முடியுமா?

பிப்ரவரி 5, வந்தனா (இது அவர் உண்மைப் பெயர் அல்ல) என்னும் 39 வயதுப் பெண் நள்ளிரவில் ஒரு உணவு விடுதியில் இருந்து வெளியே வந்தார். ஏற்கனவே பரிச்சயமான ஒருவர் காரிலிருந்து கையை அசைக்க அவரை நம்பி அந்தக் காருக்குள் ஏறினார். மேலும் நான்கு ஆண்கள் உள்ளே காத்திருந்தனர். அவர்கள் அவரை அடித்தும் உதைத்தும் மாறி மாறி வன்புணர்ச்சி செய்தும் இறுதியில் தெருவில் வீசி விட்டுச் சென்றார்கள். இரண்டு வருடம் அவர் போராடிய பிறகு மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால் முக்கியக் குற்றவாளியான காதேர் கான் என்பவரை இன்னும் தேடி வருகிறார்கள்.

தமது இருப்பிடத்தை மாற்றி தமது இறைநம்பிக்கையையும் பிரார்த்தனைகளையும் துணையாகக் கொண்டு தனது வாழ்வைத் தொடரும் வந்தனாவுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். தமக்கு நீதி தேடும் போது அவர் அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் நடத்தை கெட்டவராகச் சித்தரிக்கவும் பட்டார்.

சரி அவர் என்ன பதிலடி கொடுத்தார்? Survivors for vicitims of Social Injsutice” என்னும் முக நூல் பக்கத்தை சந்தாஸ்ரீ சவுத்திரி என்னும் அம்மையாருடன் சேர்ந்து துவங்கினார். அது பாதிக்கப் படும் பல பெண்களுக்காகக் குரல் கொடுக்கிறது. ஒரு பலாத்காரத்தை எதிர்த்து கொல்கத்தாவில் ஒரு ஊர்வலம் நடந்த போது அவர் முகத்தை மறைக்காமல் இந்தியாவின் பாதிக்கப் பட்ட் பெண்கள் அனைவரின் முகமாக நின்று குரல் கொடுத்தார்.

ஒரு பலாத்காரம் விட்டுச் செல்லும் அவமானம், வலி, காயம் வாழ்நாள் முழுவதும் தொடருவது. தன் வலியைத் தாங்கி மற்றவருக்காகக் குரல் கொடுக்கும் வந்தனாவின் மனப்பாங்கைப் பாராட்டுகிறோம். இதை வெளியிட்ட “தி வீக்” இதழும் பாராட்டுக்குரியது.

(image courtesy: face book)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to பாதிக்கப் பட்ட பெண்ணால் பலாத்காரத்துக்கு பதிலடி கொடுக்க முடியுமா?

  1. karikalankaruthu says:

    அவர் செய்தார் என்பது பாராட்டுக்கு உரியது தான். அதற்காக எல்லா பெண்களும் அப்படி செய்ய முடியுமா? அதுவும் இன்றைய சமூக சூழலில். உதாரணத்திற்கு காரைக்காலில் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்ட சகோதரிக்கு இன்னும் நியாயம் கிடைக்க வில்லை. இதற்கு நீதி கேட்டு போராடியவர்களும் இன்று மவுனம் சாதிக்கின்றனர் காரணம் அவர்கள் போராடியது நீதிக்காக இல்லை . தன் அரசியல் எதிரியை வீழ்த்த ஒரு விஷயம் கிடைத்ததே என்பதற்காகவே. அது பெருமளவில் தங்களுக்கு ஆதரவு பெருக்கவில்லை என்று அறிந்ததும் மவுனமாகி விட்டனர். இது தான் இன்றைய நம் நாட்டின் நிலைமை :((

    • வேகநரி says:

      //இது தான் இன்றைய நம் நாட்டின் நிலைமை :(( //
      கொடுமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s