ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26


download
ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26

இந்தியாவில் இல்லாத பிரச்சனைகள் எதுவுமே இல்லை. அவற்றைக் கடந்து செல்லும் ஒற்றுமையும் நம்மிடம் இல்லை. இதையெல்லாம் பற்றிப் பேசும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அரசின் மீது உள்ள அதிருப்தியோ அல்லது சமுதாயத்தில் நாம் ஏற்க முடியாத அளவு உள்ள குறையோ இவற்றை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது.

தேர்தல் மட்டும் குடியரசின் அடையாளம் அல்லது ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் என்று நாம் நினைக்கத் தேவையில்லை. ஏனெனில் கருத்துச் சுதந்திரம் அல்லது பேச்சு சுதந்திரம் என்பது நமது மிக முக்கியமான உரிமை. இது நம்மால் ஜனவரி 26 அன்று கட்டாயமாக நன்றியுடன் நினைவு கூரப் பட வேண்டும்.

இவ்வளவு எளிய விஷயத்தைச் சொல்ல இந்தக் கட்டுரையா என்னும் கேள்வி எழலாம்.

கண்டிப்பாக இல்லை. இந்தக் கருத்துச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது முதல் விஷயம். எந்த அளவு தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது மிகவும் சிக்கலான கேள்வி. ஊடகங்கள் குறிப்பாக இதை வணிக ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துகின்றன. வதந்திகள் மற்றும் அவதூறுகளை சினிமா நடிகர் நடிகைகல் மற்றும் பிரபலங்களைப் பற்றி வெளியிட அவை கொஞ்சமும் தயங்குவதில்லை. முன்பு பத்திரிக்கைகளில் மட்டுமே வதந்திகள் வரும் இப்போது தொலக்காட்சியிலேயே வருகின்றன,.

அடுத்தது கருத்துச் சுதந்திரம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களாலேயே இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்துப் பேசுவதற்காகப் பலமுறை பயன்படுவதைப் பார்க்கலாம். மத அடிப்படையில், மொழி, ஜாதி அடிப்படையில் மக்களைப் பிரிக்கவும் இந்த சுதந்திரம் பயன்படுத்தப் படுகிறது இல்லையா? கம்யூனிஸத்தின் பெயராலும் மற்றும் தமிழ் மொழியின் பெயராலும் இந்த நாட்டின் சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி இந்த நாடு உடைந்து ஒழிந்து போகட்டும் என்னும் கோஷங்களைச் செய்யும் பொறுப்பற்றவர்களை நாம் காண முடியும்.

அதற்குத்தான் பழகி விட்டோமே.

அடிப்படையில் ஜனநாயகத்தை அதாவது ஒற்றை ஆளாக இருந்தாலும் அவரது குரலைச் செவி மடுக்கும் பழக்கத்தை நாம் நம்புகிறோமா? மதிக்கிறோமா?

எந்தக் கட்சிக்குள்ளாவது உண்மையிலேயே ஜனநாயகம் இருக்கிறதா? எந்தத் தொழிற்சங்கமோ அல்லது வணிகர் அல்லது பல்வேறு தொழில் முனைவர் சங்கத்திலாவது ஜனநாயகம் இருக்கிறதா?

எந்தத் தலமையாவது தனக்குப் பிறகு மற்றொரு தலைமை, இளைய தலைமுறை அல்லது புது ரத்தம் அமைப்புக்குள் உருவாக வேண்டும் என்று விரும்புகிறதா?

குடும்பங்களுக்குள் பார்த்தால் எங்காவது ஒரு குடும்பத் தலைவிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ தம் தரப்புப் பிரச்சனைகளைத் தம் விருப்பங்களை அல்லது கனவுகளை வெளிப்படையாகக் குடும்பத்தலைவன் மற்ற ஆண்கள் முன்பு கூறும் உரிமை உண்டா?

உண்மையிலேயே பிறரது உரிமைகளை- குறிப்பாகக் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் பாங்கு நம்மிடம் உண்டா? ஜனநாயகத்தில் நமக்கு அப்பழுக்கற்ற பற்றும் நம்பிக்கையும் உண்டா?

இல்லை.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

1 Response to ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26

  1. வேகநரி says:

    அருமையான கருத்துக்கள்.
    //அடுத்தது கருத்துச் சுதந்திரம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களாலேயே இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்துப் பேசுவதற்காகப் பலமுறை பயன்படுவதைப் பார்க்கலாம்.//
    உண்மை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s