பெண்கள் இரவில் நடமாடாமல் இருந்தால் பாலியல் வன்முறை நின்று விடுமா?


stock-photo-traumatized-young-woman-sit-on-the-floor-in-the-corner-of-here-home-concept-photo-of-of-sexual-145410157

பெண்கள் இரவில் நடமாடாமல் இருந்தால் பாலியல் வன்முறை நின்று விடுமா?

மகாராஷ்டிராவின் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான டாக்டர் ஆஷா மிர்கே ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ” பெண்கள் தாம் உடுத்தும் உடையில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தாம் வெளியே செல்லும் நேரம் பற்றியும் தான். அவர்களது உடல் மொழி ஒரு அக்கம்பக்கம் சுற்றும் பாலியல் வன்முறையாளனின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து விடக் கூடாது”

மிகவும் கடுமையான விமர்சனங்களை அவரது பேச்சு சந்திக்கவே அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார். அதே சமயம் அவர் எதோ நல்லதாகச் சொல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார் என்பது வெளிப்படை. அவரை ஒரு உதாரணமாகக் கொண்டு சில விஷயங்களை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ளலாம்.

1.படித்த பெண்களில் பெரும்பாலானவருக்குக் கூடப் பெண்ணுரிமைகளில் ஆழ்ந்த நம்பிக்கை இல்லை.

2. சமூக ஆர்வலராகவும் இவர் பணியாற்றிவர். மகப்பேறு மருத்துவர். இவருக்கே பாலியல் வன்முறையின் தன்மை இது தான் என்று பிடிபடவில்லை. ஜாதி, மதம், படிப்பு, பின்னணி, பதவி, வருமானம், வயது இவை எல்லாவற்றையும் தாண்டி எல்லாவிதமான ஆண்களும் பாலியல் வன்முறை புரிந்திருக்கிறார்கள். பாதிக்கப் பெண்களில் பச்சிளம் குழந்தை முதல் வெவ்வேறு வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். பாதித்த ஆண்களில் உச்சநீதிமன்ற நீதிபதி, ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர் என நாம் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் எல்லோரும் உண்டு. உறவினருக்குள்ளேயே நடக்கும் வன்முறையின் அளவு அதாவது சதவிகிதம் அதிகமே.

3.இவர் கருதுவது போல ஒரு பெண்ணின் உடையோ அல்லது இரவு நேரம் என்பதோ ஒரு காரணமே அல்ல. தமது பேச்சில் அவர் நிர்பயா டெல்லியில் இரவில் வெளியே போனதும் மும்பையில் ஒரு பெண் நிருபர் மாலையில் தனி இடத்தில் ஒரு செய்திக்காகச் சென்றதும் மட்டுமே அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகக் காரணம். இதில் மிகவும் வருத்தப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர் சொல்வதை அப்படியே நிறைவேற்றினால் இரவில் பணி புரியும் லட்சக்கணக்கான பெண்கள் தம் பணியை இழக்க நேரிடும். உண்மையில் மனோவக்கிரம் உள்ளவர் எந்தப் பெண்ணையும் விட்டு வைப்பதில்லை. அவர்களுக்கு நேரம் காலமும் இல்லை. இரவில் ரயிலில் நடந்துள்ள வன்முறைகள் எத்தனையோ. அப்படியென்றால் பெண்கள் இரவுப் பயணத்தையும் விட்டுவிட வேண்டுமா? ஒரு பாலியல் வன்முறையாளனின் மனம் பெண்ணை இழிவானவளாகவும், அந்த வன்முறை அவளை இழிவு படுத்தத் தனக்கு உள்ள உரிமையின் வெளிப்பாடு என்றுமே கருதுகிறது. இப்படியெல்லாம் ஒரு பெண்ணின் நடமாட்டம் குறையுமென்றால் அவனுக்கு அது மகிழ்ச்சியே. அதாவது பெண்ணை இழிவு செய்பவனின் விருப்பம் எளிதே நிறைவேறும். ஏன் இப்படி?

4.பெண்களின் உடை கவனத்தைக் கவரலாம். ஆனால் மனோவக்கிரம் உள்ளவன் அதனால் தூண்டப் படுபவன் அல்லன். அவன் எந்தப் பெண் எப்போது தன் வன்முறைக்குத் தனியாகக் கிடைப்பாள் என்று அலைபவன். அவன் காத்திருப்பது வாய்ப்புக்காக. பெண்ணின் உடையால் அல்ல அவன் குற்றம் புரிவது. கன்னியாஸ்திரிகளை பலாத்காரம் செய்த மகாபாவிகள் கூட இருந்திருக்கிறார்கள்.

சரி அப்போது எது தான் பாலியல் வன்முறைக்குக் காரணம்?

இந்த அம்மையார் போலவே 99% பெண்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வில்லை என்பதே காரணம்.

ஒவ்வொரு தாயும், சகோதரியும், தோழியும், சகபணியாளரும், மாணவியும் மற்றும் எந்த வயதுள்ள எந்தப் பெண்ணும் தன் உறவானவரோ அல்லது அருகில் உள்ளவரோ அவரிடம் பாலியல் வன்முறை எதிர்ப்புப் பேச்சை உடனடியாகத் துவக்க வேண்டும். பெண்கள் அனைவரும் ஒரே குரலில் ஒருமித்துத் தம் மாண்பை உரத்துச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு குடும்பமும் தன் குடும்ப உறுப்பினரான எல்லா ஆண்களும் பாலியல் வன்முறைக்கு எதிரானவர் என்று நம்பிக்கையாகக் கூறும் சூழல் வேண்டும்.

அரசியல் கட்சி, ஜாதிச் சங்கம், சினிமா ரசிகர் மன்றம், தொழிற்சங்கம், மதக் கூட்டங்கள், மதக் கொண்டாட்டங்கள், மத வழிபாட்டுக் கூட்டங்கள் எங்கும் பலாத்கார எதிர்ப்புப் பேச்சு கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுவே நிரந்தரத் தீர்வு.

மிகவும் தாமதிப்பது பெண்கள் மீது நமக்கு உண்மையான அக்கறையில்லை என்பதையே காட்டும்.

(image courtesy: shutterstock.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s