பலூன் ஊதிய விளையாட்டான இரண்டு பேரியக்கங்கள்
முதல் பலூன் – கூடங்குள எதிர்ப்பு
கூடங்குளம் பற்றிய எனது முந்தைய பதிவின் ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்:
——————————————-
தமிழ் கூறும் நல்லுலகில் உண்மையிலேயே நடுநிலை, சமூக நலன் பற்றி மட்டும் பேசுதல் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்பதற்கு கூடங்குளம் ஒரு நல்ல உதாரணம். ஊடகங்களின் பச்சோந்தித் தன்மைக்கும், சந்தர்ப்பவாதத்திற்கும் ஆகச் சிறந்த உதாரணமும் கூடங்குளப் போராட்டத்தில் ஊடகங்கள் எடுத்த நிலைப் பாடுகள்.
கல்பாக்கம் தவிர ட்ராம்பே (மும்பைக்கு அருகில்), ஜைய்தாபுர் (மஹாராஷ்டிரா), (கூடங்குளம் போல முடியும் நிலையில் உள்ளது), கைகா (கர்நாடகா),கக்ராபர் (ஸூரத், குஜராத்),நரோரா (புலந்த் ஷஹர், உத்திரப் பிரதேசம்), ராப்ஸ் (கோடா, ராஜஸ்தான்), தாராபுர் (மஹாராஷ்டிரா) ஆகிய இடங்களில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதிகளில் உள்ளவர் இந்தியர்களா? அவர்களைப் பாதுக்காக்க யார் போவது? அந்த மின்சாரத்துக்கு மாற்று என்ன?
இந்தக் கேள்விகள் எந்த விதமான பரபரப்புக்கோ அல்லது ருசிகரமான வம்புக்கோ தீனியிடா. அதனாலேயே ஊடகங்கள் இந்தக் கேள்விகளை எழுப்பா. ஆனால் உண்மையிலேயே தம்மைப் பாதிக்கும் எல்லா விவகாரங்களையும் பற்றிய பாரபட்சமற்ற முன்முயற்சியான தகவல்களைத் தருவது ஊடகங்களின் கடமை.
———————————————-
கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு இயக்கம் சமீபத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பலூன் ஊதும் சாதனை. தமிழில் அறிவு ஜீவி, சமுதாய ஆர்வலர், எழுத்தாளர் என்று அறியப்பட்ட
அனைவருமே அதில் தாவிக் குதித்து நானும் இதில் பங்குபெற்றானாக்கும் என்று ஒரு முத்திரை பதித்துத் தான் ஓய்ந்தார்கள்.
இன்று தொலக்காட்சி செய்தியில் கூடங்குளத்தில் அடுத்த கட்டமாக மற்றொரு அணு உலை அக்டோபர் முதல் இயங்கத் துவங்கும் என்று செய்தி பார்த்த போது இந்த இயக்கத்தை வைத்து அறிவுஜீவிகளும் ஊடகங்களும் ஊதிய பெரிய பலூனே நினைவுக்கு வந்தது.
நான் மேலே குறிப்பிட்ட எல்லா ஊர்களுக்கும் ஒரு முறை கூடப் போய் அங்கே ஒரு பிரசாரம் கூட நடத்தவில்லை கூடங்குள தியாகிகள்.
அணு உலை ஆபத்தானதென்றால் ஏன் ஒரு குறைந்தபட்ச பிரசாரத்தை அணு உலை இந்தியாவில் உள்ள எல்லா இடங்களிலும் மற்றும் வரப்போகும் எல்லா இடங்களிலும் நடத்தவில்லை? அடுத்தபடியாக ஏன் சூரிய சக்தியே மாற்று என்று ஒரு தீர்வையும் சேர்த்து பிரசாரம் செய்யவில்லை. மின் பற்றாக்குறை சமூக ஆர்வலருக்கு ஒரு பொருட்டில்லையா?
தமிழ் நாட்டில் கூட இப்போது கூடங்குளத் தியாகிகள் மௌனமே சாதிக்கிறார்கள். பொது மக்கள் இவர்கள் பலூன் ஊதும் போது வேடிக்கை பார்த்து ஓயும் போது தம் வேலையைப் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக ஆனால் அதற்கு மூத்த பலூன் ஆர் எஸ் எஸ் அமைப்பு 90களில் நடத்திய சுதேசி இயக்கம். காதி பவன் சோப்பு, நிர்மா பவுடர், வஜ்ரதந்தி பற்பசை இவையே (இன்னும் பெரிய பட்டியல் உண்டு) இந்தியத் தயாரிப்புகள். கோல்கேட், சர்ப் இவை பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகள். இந்தியா அடிமையாகி விடும். இந்தியத் தயாரிப்புகளையே வாங்குங்கள் என்று ஒரு பெரிய பலூனை இரண்டு வருடம் ஊதி ஓய்ந்தார்கள்.
2000க்குப் பின் (2002 என நினைவு) வந்த வாஜ்பாய் அரசு பெரிய அரசு நிறுவனங்களையே ஏலம் போட்டு விற்றது.
மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் சரியான தீர்வைச் சொல்லி தொடர்ந்து அகிம்சை வழியில் போராட வேண்டும். மின் பற்றாக்குறை கூடத் தீரலாம். கொள்கைப்பிடிப்பில் உள்ள பற்றாக்குறை தீர்வது அரிதே.
(image courtesy:canstockphoto.com)
இந்தியாவின் மின் தேவையை அணுமின் நிலையங்கள் ஒரு போதும் பூர்த்தி செய்யாது. தற்போதுள்ள மொத்த மின் உற்ப்பத்தியில் 3 % மட்டுமே அணுமின் நிலையங்களின் மின் பங்களிப்பாக உள்ளது. இந்தியாவில் அணு மின் நிலையங்கள் துவக்குதெல்லாம் வெளினாடுகளில் இருந்து யுரேனியம் சீசியம் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி சேமிக்கவே இத்தனை பெரும் பொருட் செலவில் ஆபத்தாந இந்த அணுமின் நிலையங்களை அமைப்பது என்பது தான் உண்மை. power contribution of India 1. coal 59%, hydro 17%, renewable 12% Natural gas 9% Nuclear 3%. why we need nuclear ? supposed to contribute 25% of nuclear power to India, assume how much nuclear plant required. who don’t have awarnace they are silent.
59% நிலக்கரியால் மாசு உண்டாகும். எத்தனை நாள் நிலக்கரி கிடைக்கும்? மழையில்லா நாளில் நீராதாரம் தரும் மின்சாரம் கிடைக்குமா? அணு உலை ஆபத்தானது தான். மாற்று என்ன? சூரிய மின்சக்தி மாற்றா? என்ன செய்யப் போகிறோம்? மாற்றைப் பற்றிச் சொல்லும் பொறுப்பு எதிர்ப்பாளர்களுக்கு உண்டா இல்லையா?