தேர்தல் யாருக்குக் கொண்டாட்டம்?


evm_sm
தேர்தல் யாருக்குக் கொண்டாட்டம்?

அரசியல்வாதிகள் ஒரு பக்கம் நூறு ஏக்கர் பரப்பளவில் பந்தல் போட்டு விமானங்களில் பறந்து மிகவும் உற்சாகமாகக் கொண்டாட்டமான மன நிலையில் இருக்கிறார்கள். வணிக நிறுவனங்கள் தந்த நன்கொடைக்கு அவர்கள் கணக்குக் காட்டத் தேவையே இல்லை.

மறு பக்கம் ஊடகங்கள் விரசமான கொண்டாட்டத்தில் இருக்கின்றன. யார் யாருடன் அணி சேருவார்? எந்தக் கூட்டணி எப்போது உருவாகும்? இந்த ஊரில் இந்த ஜாதி ஓட்டு யாருக்கு என்று தங்கள் வருமானம் உயரும் தங்களுக்கு கவனிப்பு அதிகமாகும் என்று உச்சகட்டத் துள்ளலில் இருக்கிறார்கள்.

நல்ல வேட்பாளர்- பண்பான மக்கள் பிரதிநிதியாக வரக்கூடியவர் யார் என்ற பேச்சு எங்குமே காணும்.

இந்திய அளவில் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்- மாநில அளவில் என்ன பிரச்சனைகள்- ஒரு மக்களவைத் தொகுதி என்று எடுத்துக் கொண்டால் அதன் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழி என்ன – இந்தத் தலைப்புகளில் எந்த ஒரு அரசியல்வாதியோ ஊடகமோ பேசவில்லை.

தேர்தலில் கொண்டாட வாக்காளருக்கு எதுவுமே இல்லை. விழிப்புணர்வுடன் தனது பிரச்சனைகளை முன் வைக்க ஒரு ஊடகமோ அல்லது மன்றமோ வாக்காளருக்கு இல்லை.

இலவசங்களால் வாக்காளருக்கு என்ன பயன்? முந்தைய ஆள் சரியில்லை என்பதையே மற்றொரு ஆள் பேசுவதால் என்ன பயன்?

மக்களின் கவலைகளை, வருத்தங்களை, எதிர்பார்ப்புகளை ஊடகங்கள் எல்லாத் தொகுதியிலும் வெளிச்சம் போட்டுக் காட்ட முன் வர வேண்டும். கீழ்த்தரமான தாக்குதல்களையே கேட்டுக் கேட்டு மக்கள் மனம் நொந்து போவது ஆரோக்கியமானதே அல்ல.

கடந்த ஐந்து வருடங்களில் ஊழலை ஒழிக்க தலைமைக் கணக்காயர் (COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA) மற்றும் உச்ச நீதி மன்றம் இன்னும் இரு உயர் அமைப்புகளின் பணியே உதவியது. அன்னா ஹஸாரே மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வுக்கு வழி வகுத்தார். ஆனால் ஊடகங்களின் பங்களிப்பு ஊழலை ஒழிப்பதிலோ அல்லது மக்களின் பிரச்சனைகளை மையப் படுத்துவதிலோ மிகவும் அற்பமாகவே இருந்தது.

ஊடகங்கள் அரசியல்வாதிகளை விட சந்தர்ப்பவாதிகளாய் இருப்பதே நம் மிகப் பெரிய பலவீனம்.

(image courtesy:indiaevm.org)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to தேர்தல் யாருக்குக் கொண்டாட்டம்?

  1. k. gopaalan says:

    ஊடகங்கள் வியாபார நோக்கத்துடனேயே நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு பணம் முதலிலும் நேர்மை பிறகும்தான்.

    மிக்க வேதனைக் குறிய விசயம், தொலைக்காட்சிகளில் இரண்டு கட்சிக் காரர்கள் உரையாடும்போது வருவதுதான் (இதில் மதமும் சேரும்). குழாயடிச் சண்டை போல் இதை வேடிக்கை பார்ப்பதினால் தனக்கு என்ன பயன் என்று நினைக்காததுதான் மக்கள் செய்யும் தவறு.

    முடிவில், சாதிகளை குறிப்பிட்ட பிரிவினர்தான் உருவாகினர் என்று அவர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்கள் தொலைக்காட்சியில் இடம் பெறும் கல்யாண மாலை நிகழ்ச்சியைப் பற்றி ஏன் பேசுவதில்லையோ.

    இந்த விசயத்தில் ஊடகங்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை அல்லவா.

    கோபாலன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s