120 கோடி மக்களின் நாடாளுமன்றத்தைப் பத்து பேர் முடக்கி விடுகிறார்கள்


header_new
120 கோடி மக்களின் நாடாளுமன்றத்தைப் பத்து பேர் முடக்கி விடுகிறார்கள்

ஒரு காலத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் வெளியே ஒளிபரப்பாகாது. இப்போது அதுவும் வந்து விட்டது. நாம் காண்பதெல்லாம் ஏதோ பத்து பேர் நாடாளுமன்றத்தையே முடக்கி விடுவது. ஒரு மணி நேரம் அல்ல. ஒரு நாள் அல்ல. பல நாட்கள். பல முறை ஒரு தொடரே அதிகம் வேலை செய்யாமல் முடிந்தே போய் விடும்.

இதன் பின்னணி:-

இதற்கு இரண்டுவிதமான பின்னணி உண்டு:

1.ஆளும் கூட்டணி இந்தத் தொடர் முழுவதுமே ஒரு பெரிய விஷயத்தை மறைத்துத் தொடரை முடித்து விடும் என்னும் அச்சம்.
2.ஊடகங்கள் மற்றும் மக்கள் கவனிக்கும் வரை ஒரு விஷயத்தை மையப் படுத்துவது.

இது ஒரு சிரமமில்லாத அரசியல். அந்தக் காலத்துத் தலைவர்கள் போலப் பாத யாத்திரை போக வேண்டியதில்லை. பல ஊர்களில் பல இடங்களில் தன் தரப்பை விளக்கிக் கூட்டம் போட வேண்டியதில்லை. பத்திரிக்கையாளர்களைத் தொலைக்காட்சி நிருபர்களை அழைத்து விளக்கி, நூறு கேள்விக்கு பதில் சொல்லி, மழுப்பி, குழப்பி நேரம் செலவிட வேண்டியதில்லை.

தனது தரப்பின் ஒரே விஷயத்துக்காக நாடாளுமன்றத்தின் எல்லா அலுவல்களையும் முடக்கினால் போதும். கட்சித் தலைமையிடம் முக்கியமாக நற்பெயர். மக்களின் கவனம் கிடைக்கிறது. கட்சிக்குள் தன் செல்வாக்கு ஓங்குகிறது. அந்தப் பிரச்சனையை முன்னிறுத்தியது நான் மட்டுமே என்று எங்கும் மார்தட்டிக் கொள்ளலாம்.

இதன் தீய விளைவுகள்:

1.கேள்வி நேரம் இல்லாமலேயே போய் விடுகிறது. பல துறை அதிகாரிகள் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் தயார் செய்யும் போதாவது சில முயற்சிகளை எடுத்து சில தீர்வுகளுக்கு வழி வகுக்கிறார்கள். கேள்வி நேரம் வராவிட்டால் அந்த விஷயங்களின் முக்கியத்துவம் மெதுவாக மங்கி விடும். நாடாளுமன்றத்தில் தரப்படும் பதில் மிகவும் கண்டிப்பாக நிறைவேற்றப் படும் வாக்குறுதி. அதற்கே வழியில்லாமல் போய் விடுகிறது. அலட்சியம் காட்டிய அதிகாரிகள் தப்பி விடுகின்றனர்.

2. பல முக்கிய மசோதாக்களில் பல தரப்பு உறுப்பினரின் கருத்துக்கு வழியில்லாமல் போய், அவசர அவசரமாகக் கூச்சலின் நடுவே நிறைவேறும் தீர்மானத்தால் என்ன பயன்? உறுப்பினர் பேசவே வாய்ப்பில்லாத ஜனநாயகம் என்ன ஜனநாயகம்?

3.வேலை செய்யாத நாட்களுக்கும் உறுப்பினர்கள் சம்பளம் பயணப் படி எல்லாம் பெறுகின்றனர். விமானக் கட்டணமும் வீண்.

4.அடிக்கடி இப்படி நடப்பதால் உருப்படியாக பிரச்சனைகளை முன் வைத்துத் தன் தரப்பைக் கூறி விவாதிக்கிற உறுப்பினர் வெட்டியாகப் போய் வருபவர் இருவருக்கும் வித்தியாசமே தெரியாமல் போய் விடுகிறது.

5. கவன ஈர்ப்புத் தீர்மானம் என்பது முக்கியமான அவசரமான பிரச்சனையை 120 மக்களின் மன்றத்தின் முன் வைப்பது. அதை ஏற்காவிட்டாலும் அதுவும் கண்டிப்பாக ஒரு ஆளும் கட்சியின் போக்கைத் தீர்மானிக்க மக்களுக்கு உதவும். அதுவும் நடக்காமற் போகிறது.

6. சிறந்த நாடாளுமன்ற மரபுகள் தேய்ந்து மட்டமான உதாரணம் மேலே வந்து விடுகிறது.

மக்கள் நலனுக்கு எதிரான இந்தப் போக்கை விட்டு, தீவிரமான விவாதத்தில் தன் தரப்பை விவரிப்பதே நல்ல ஆரோக்கியமான கண்ணியமான அணுகு முறை. கண்ணியமான நடவடிக்கைகளை (தவறும்) அரசியல்வாதிகளுக்கு யார் கற்றுக் கொடுப்பது?

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s