வாக்குறுதியுடன் பட்ஜெட்டையும் வெளியிட அரசியல் கட்சிகள் முன் வருவாரா?


download

வாக்குறுதியுடன் பட்ஜெட்டையும் வெளியிட அரசியல் கட்சிகள் முன் வருவாரா?

ஏழைகளுக்காக ஒவ்வொரு ஏழைக்காகவும் ஆயிரம் ரூபாய் மாதம் செலவு செய்யும் வாக்குறுதி ஒரு கட்சி தரும் என்றால் அந்த ஆயிரம் ரூபாய் அரசின் வருமானத்தில் எத்தனை சதவிகிதம் 2000 ரூபாய் அரசு வரி விதிப்பில் பாதி 1000மா 4000 வரி விதிப்பில் கால்வாசி 1000மா 100000 லட்சம் வரி விதிப்பில் நூற்றில் ஒரு பங்கா?

வரியை யார் தலையில் சுமத்தப் போகிறார்கள். மறைமுக வரிகள் மூலம் அந்த ஏழை தலையிலேயே எவ்வளவு வரி ஏற்றப் படப் போகிறது ?
நேர்முக வரிகள் என்றால் மாத சம்பளக்காரர்கள் மீது எவ்வளவு? வணிக நிறுவனங்கள் மீது எவ்வளவு?
நேர்முக வரி தவிர எந்தெந்தத் துறைகள் மீது எந்த மாதிரி வரி? உதாரணத்துக்கு தொலை தொடர்பு நிறுவனம் என்றால் வருவாயில் ஒரு பகுதி லைஸன்ஸ் பணமாக ஆண்டு அடிப்படையில் தர வேண்டும் என்று சட்டம். அதே போல் சுரங்கத் துறை, வீடு மற்றும் பெரிய கட்டுமானத் துறை, மதுபானம், பெட் ரோல், டீஸல், காஸ் இவற்றில் இருந்து எந்த அளவு வருமானம் எதிர்பார்க்கப் படுகிறது?

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வரியின் அளவு மட்டுமே ரகசியமாக வைக்கப் பட வேண்டும். உத்தேசமாக இவ்வளவு வரவு செலவு என்று சொல்ல முடிய வேண்டும். உதாரணத்துக்கு மூன்று துறைகள் மூலம் மொத்தம் இவ்வளவு எதிர்பார்ப்பு என்று சொன்னால் எந்தத் துறை கவனிப்புப் பெரும் எது வரிச்சுமை பெறும் என்பது மர்மமாக இருந்து விடலாம்.

வாய்க்கு வந்த படி வாக்குறுதி தருவது மிகவும் பொறுப்பற்ற செயல். கருப்புப் பணம் வைத்திருப்பவர் வரி கட்டப் போவதில்லை. இந்தியாவில் கருப்புப் பணம் வெளிவந்த சதவிகிதம் 1% என்று கொள்ளலாம்.

வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறவர் நமக்குத் தேவையில்லை. எல்லாத்தரப்பினரும், எல்லாத் துறையினரும் நிலைத்த வருமானமும், நியாயமான லாபமும் பெற வழி இருக்க வேண்டும்.

சாதாரண மக்களுக்குத் தேவை இலவசங்கள் அல்ல. வேலை வாய்ப்பு. வேலை வாய்ப்புக்குத் தேவையான படிப்பு, பயிற்சிக்கான கல்விசார் நிறுவனங்கள்.

தன் காலில் நிற்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். இலவசங்களுக்காக வரிசையில் நிற்க அல்ல.

வரி ஏய்ப்பவனை விரட்டிப் பிடிக்க வேண்டும். ஒழுங்காகக் கட்டுபவனையே கசக்கிப் பிழியக் கூடாது.

மருத்துவர்கள், மருத்துவமனைகள், அதிக வசூல் செய்யும் கல்வி நிறுவங்களிடம் கணக்கு வழக்குக் கேட்டு வசூல் செய்ய வேண்டும். அரசுக்கு வழக்கமாக வேலை செய்து தரும் ஒப்பந்ததாரர் இவர்களிடம் தொடங்கி நிலப் பதிவு செய்யும் அலுவலர்கள், கட்டுமான முதலாளிகள், திருமண முழு ஏற்பாட்டுக்கும் ஒப்பந்தம் போடும் தனியார்கள் இவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். நகை வியாபாரிகள் மிகவும் நல்லவர்கள். எனவே அவர்களது நல்லதனத்தை நாடறியச் செய்து விடலாம்.

மறுபக்கம் அதிக பேருக்கு வேலை வாய்ப்புத் தரும் நிறுவங்களுக்கு வரிச்சலுகை தரலாம். 10000 பேரை வேலைக்கு வைத்தால் 10% வரிச் சலுகை. 100000 பேரை வேலைக்கு வைத்தால் வரியே கட்டத் தேவையில்லை என்று சொல்லி விடலாம்.

நிறைய வேலைவாய்ப்பு மட்டுமே நிறையவே மேம்பட்ட வாழ்க்கை வசதி உள்ளவர்களை உருவாக்கும். அப்போது எல்லாத்துறையிலும் லாபமும் வளர்ச்சியும் சர்வ சாதாரணமாகும்.

இன்றைய தேவை கவர்ச்சியான வாக்குறுதிகள் அல்ல. கண்டிப்பாக வளர்ச்சிக்கு வழி வகுக்கும் ஒரு உருப்படியான திட்டம். அதை நிறைவேற்றும் தீர்மானமாமுள்ள ஒரு கட்சி.

(image courtesy:wallsavaer.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s