தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்?


download

தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்?

சக ஊழியரான ஒரு அம்மையார் தினசரி சிந்தனைக்குரிய ஒரு கருத்தை ஒரு பலகையின் மீது எழுதி வைப்பார்கள். இன்று அவர் The expansion for FAIL – Further Advancement In Learning.

சுய முன்னேற்ற நூல்கள் உசுப்பேற்றும் விதமான கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கூறும் போது அது வறட்டுத்தனமாகவும் நம்மைத் தொடாததாகவும் முடியும்.

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு பல்பைக் கண்டுபிடிக்க எண்ணற்ற முறைகள் முயன்றவர். அவர் “நான் தோற்கவில்லை. பயனளிக்காத ஆயிரம் வழிமுறைகளைப் பற்றிக் கற்றுக் கொண்டேன்” என்கிறார்.

சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது, நீச்சல் கற்றுக் கொள்ளும் போது சரியான முறையைக் கற்கும் வரை ஒருவர் செய்யும் முயற்சிகள் தோல்விகள் என்று கொள்ளப் பட வேண்டுமா? முழுமையாடத ஒத்திகைகள் என்று கொள்ள வேண்டுமா?

தோல்வியின் மிகப் பெரிய கசப்பான அம்சம் அடுத்தவன் தோல்வியில் மகிழும் கூட்டம் இருக்கிறார்கள் என்பதே. நாம் நண்பன், அடுத்த வீட்டு அன்பான சகபயணி, உறவு என்பவர் எல்லாருமே நம் சிறிய சறுக்கலிலும் மகிழ்பவராகவும் எப்போது சறுக்குவோம் என்று காத்திருப்பவராகவும் இருப்பதைக் காணலாம். வேலைப்பளு, கவலை அல்லது எதோ ஒரு நெருக்கடியில் மறதியும் குழப்பமும் தற்காலிகமாக வந்து போவது யாருக்கும் நிகழுவதே. ஒருவர் தவறி வைத்த கைபேசியைக் கையில் வைத்துக் கொண்டு ‘என்ன பார்ட்டி தருகிறாய்?” என்று பேரம் பேசும் பெரிய மனிதர்களை நிறையவே காண முடியும். பேருந்தில் ரயிலில், கடைவீதியில் எங்கும் நீங்கள் பிசகினால் எரிந்து விழ உங்களை துவம்சம் செய்ய யாராவது காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் முதல் படியாக சமூகத்தின் சறுக்கலான இந்த வேட்டைக் குணத்தைப் பொருட்படுத்தாமல் மேலே செல்லப் பழகிக் கொண்டது தான். பல மாற்றுத் திறனாளிகள் தான் தற்சார்பாக இயங்க முடிந்த போது அடுத்தவர் உதவிக்கு வந்தால் நாசூக்காக மறுத்துத் தன் வழியில் செல்வதை நாம் நோக்க வேண்டும்.

அடுத்தது மற்றவர் பாராட்டுக்காக நீங்கள் வெல்லவில்லை. உங்களுக்கு உள்ளே உள்ள உந்து சக்தியின் உயிரோட்டத்தில் இருக்கவே வெல்கிறீர்கள். வெல்லும் முன் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஒத்திகை போன்றதே. ஒத்திகைகளின் போது ஒருவர் தனது சாதனையை சீர்படுத்திக் கொள்கிறார். இறுதியில் அவரது மேடையேறும் முயற்சியின் முழுமை எதன் அடிப்படையிலானது? குறையுள்ளதாகத் தோன்றிய ஒத்திகைகளின் போது கிடைத்த அனுபவம் தந்த தன்னம்பிக்கையும் அப்போது தென்பட்ட தவறுதல்கள் தவிர்க்கப்ட்டதுமே.

வெற்றி பெற்றவரின் இரண்டாவது தெளிவு இது. மேலும் சில அணுகுமுறைகள் அவர்களுக்கு உண்டு… (அடுத்த பகுதியில்)
(image courtesy: inspirationboost.com)

தொடர்புடைய பதிவு:
பிறந்த குட்டியை ஏன் ஒட்டகச் சிவிங்கி மீண்டும் மீண்டும் உதைக்கிறது?

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s