மக்களின் வரிப்பணம் காகிதப் புலிகளுக்குக் கை மாறுகிறதா?


download
மக்களின் வரிப்பணம் காகிதப் புலிகளுக்குக் கை மாறுகிறதா?

அனாதைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற மகளிர் இவர்களுக்கும் “எய்ட்ஸ்” பற்றிய விழிப்புணர்வு, ரத்ததானம் போன்ற விழிப்புணர்வு இயக்கங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்பு மகத்தானது. பல் தன்னார்வ நிறுவனங்கள் தமது சொந்த நிதி மற்றும் மக்களின் நன்கொடையில் இயங்குபவை.

ஆனால் இத்தகைய நிறுவனங்கள் மிகவும் குறைவோ என்னும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி CBI மத்திய மாநில அரசுகளிடம் தகவல் திரட்டியதில் மொத்தம் 20 லட்சம் தன்னார்வ நிறுவனங்கள் உள்ளன. அதாவது 600 பேருக்கு ஒரு நிறுவனம். அவர்கள் இந்தியாவின் அரசுத் துறையில் இருந்து மட்டும் வருடா வருடம் சராசரி 900 கோடி மானியம் பெறுகின்றனர். வெளிநாட்டுத் தொடர்பு உள்ள பல நிறுவனங்களுக்கும் மட்டும் 2000 கோடி ரூபாய் சராசரி வருடா வருடம் வெளி நாட்டு நன்கொடை வருகிறது.

20 லட்சம் அமைப்புகளில் பெரும்பான்மையானவர் முறையான கணக்கு வழக்குகளை வைத்துக் கொள்ளவில்லை. அரசு இந்த வேலையை எடுத்துக் கொண்டால் அதாவது இவர்கள் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்யும் வேலையை, கண்டிப்பாக மேலும் மக்கள் வரிப்பணம் செலவாகும்.

அரசு முதலில் வெறும் பெயர், இணைய தளம் இவற்றை வைத்துக் கொண்டு உண்மையான சேவையில் ஈடுபடாதோரை இனம் காண வேண்டும். இதுவும் அவ்வளவு எளிதானதல்ல. கூடுமான வரை நிரந்தரமான நிதி தரவே கூடாது. அப்படிக் கொடுத்தால் அது குழந்தைகள் அல்லது முதியவர் அல்லது மாற்றுத்திறனாளியின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தப் பகுதிப் பொது மக்களிடம் நிதி தரும் அதிகாரி விசாரணை செய்த பின் தான் கொடுக்க வேண்டும்.

நான் விருப்ப ஓய்வு எடுப்பதாக இருந்து, பிறகு மனதை மாற்றிக் கொண்டேன். விருப்ப ஓய்வு எடுத்து கல்வித் துறையில் எதாவது செய்ய எண்ணி இருந்தேன். அப்போது தொடர்பு கொண்டவர்களில் ஒருவர் வணிக ரீதியான கணிப் பொறிக் கல்வி மையம் நடத்தலாம். இலவசமாக, சில மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்றார். எனவே அரசுத் துறையில் நிதி மிக எளிதாகவே கை மாறிவிடுவதாகத் தோன்றுகிறது.

பல அமைப்புகள் காகிதப் புலிகளே. ஒரு இணையதளம் மற்றும் ஒரு கடிதப் படிவம் இவற்றை வைத்துக் கொண்டு, வரும் வருவாயை அதாவது நன்கொடைகளை பெரும் பகுதி நிர்வாகச் செலவு என்ற பெயரில் ஒரு வசதியான வாழ்க்கையை இலவசமாக வாழப் பயன்படுத்துவது வெளிப்படை. பல மத அமைப்புகள் இவற்றில் அடங்கும்.

“உதவும் கரங்கள்” .வித்யாகர் போன்ற வித்தியாசமானவர்களும் இருக்கிறார்கள். ரத்ததானம் ஒன்றுக்காக அவர் முயற்சி எடுத்த போது அவருடன் தொடர்பிருந்தது. அப்போது நான் அவரிடம் “நீங்கள் ஏன் அரசு மானியம் வாங்குவதில்லை?” என்று கேட்டேன். “பல தலையீடுகள் இருக்கும். எனவே முயல்வதில்லை” என்றார்.

தன்னார்வ நிறுவனங்கள் கவனிக்கப் படாமல் தன்னிச்சையாக செயற்பட நாமும் அரசும் அனுமதிக்கிறோம். சுளுவான ஒரு வருமான வழியாக அது இப்போது பலருக்கும் பயன்படுகிறது.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s