ஆறு விதமான தனிமையில் எது உன்னதமானது?


stock-photo-loneliness-solitude-sadness-background-lonely-tree-and-seating-bench-in-morning-mist-fog-137626550
ஆறு விதமான தனிமையில் எது உன்னதமானது?

தனிமை இனிமையானதா? இந்த ஒரு கேள்விக்கான விடை நமக்கு இன்னும் சில கேள்விகளிலிருந்தே கிடைக்கும். யாருக்கு? எப்போது? எவ்வளவு நேரம்? என்றெல்லாம் கேள்விகள் விரியும்.

தனிமையில் நாம் மௌனத்தின் மகத்துவத்தை அது அருமருந்தாக ஆவதை, ஓசையின் ஊறிலிருந்து தற்காலிக விடுதலையை அனுபவிக்கிறோம்.

மனிதன் தனியாக இருக்கப் படைக்கப்படவில்லை. உண்மையே. அதே சமயம் தன் தனித்தன்மையை அவன் உணரும் பட்சத்தில் தனிமை அமையும் நேரங்களில்தான் அவன் தன்னைத் தானே மீட்டெடுக்கிறான்.

அது என்ன ஆறுவிதமான தனிமை?

1.தேவையற்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத தனிமை.
2.விரும்பி ஏற்றுக் கொண்ட தனிமை.
3.தானே உருவாகிற தனிமை.
4.ஆறுதலுக்காக உருவாக்கப்படும் தனிமை.
5.கைவிடப்படுவதால் ஏற்படும் தனிமை.
6.தனிமை கொள்வதே ஆனந்தம் என உணரும் தனிமை.

துறவு கொண்டு உலக நன்மைக்காகப் பிரார்த்திக்கும் முடிவு வந்தால் ஆறாவது தனிமையே உன்னதமானது.

தீராநதி மார்ச் 2014 இதழில் இந்த ஆறு தனிமைகள் பௌத்தத்தில் கூறப்பட்டதை எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரையில் அறிகிறோம். அவருக்கு நன்றி.

தனிமை அச்சம் தருகிறது என்றால் நம்மை தனித்து இருக்கும் திறனில்லாதவராய் பிறர் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்றே பொருள். தனிமை என்றால் ஒரு அறையில் அடைந்து கிடப்பதா? ஒரு காட்டில் ஆளே இல்லாத இடத்தில் அமர்ந்து கொள்வதா? தனிமை என்பது சூழலை ஒட்டியதா? நாம் பயணிக்கிறோம். அதே ரயிலில் 500 பேர் நம்முடன் தான் பயணிக்கிறார்கள். ஆனால் அபூர்வமாகக் கிடைத்த தனிமையில் நாம் சிந்தனையில் ஆழ்ந்தால் அது தனிமை தானே? அவ்வாறெனில் தனிமை மனநிலை தானே? சரி தனிமை மனநிலை மட்டுமா? அலுவலகத்திலோ அல்லது நாம் சார்ந்தா ஒரு அமைப்பிலோ ஒரு கூட்டம் நடக்கிறது. ஒரு ஆளைப் பல காரணங்களுக்காக எல்லோரும் துதி பாடிக் கொண்டே போகிறார்கள். நாம் மௌனமாக, கூட்டம் முடியும் வரை பொறுமை காத்து வெளியே வருகிறோம். அங்கே நம் நிலைப்பாடு தனித்தது. தனித்தன்மை உடையது.

குழந்தைகளை நாம் தனியாக இருக்க அனுமதிப்பதில்லை. அவன் / அவள் தனது தனித்தன்மையைக் கண்டுணர்ந்து ஒரு நல்ல வலுவான ஆளுமையாக உயரவும் விடுவதில்லை. தந்தையும் தாயும் மகன் / மகள் தம் நகலாய் வந்தால் போதும். இந்தப் பாரம்பரியம் தான் சுய சிந்தனை இல்லாத ஒரு பெரிய சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.

தனிமை ஒரு வரம். அது அதன் மதிப்பை உணர்ந்தோருக்கே பிடிபடும்.
(image courtesy:shutterstock.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஆறு விதமான தனிமையில் எது உன்னதமானது?

  1. Manithan says:

    அருமை

  2. vicky says:

    இதில் பல கேள்விகள் இருந்த போதிலும் ஒரு கேள்விக்கு கூட விடை கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s