திண்ணையின் இலக்கியத் தடம்- 24


திண்ணையின் இலக்கியத் தடம்- 24
சத்யானந்தன்
ஜூலை 3, 2013 இதழ்:

பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 9- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- பிரிட்டனின் தேவைகளுக்காக அயர்லாந்து மற்றும் வடகிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20307038&edition_id=20030703&format=html )

ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்- பாரதி ராமன்

எனது சுதந்திரம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப் படுமெனில்
அது என் சுதந்திரமில்லை
அவர்களின் சுதந்திரம் தான்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307031&edition_id=20030703&format=html )

உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் – (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘எனக்குப் பிடித்த கதைகள்- 67
ஜெமீந்தார் நிலையில்லா மனமுள்ளவர். காங்கிரஸ்காரர்களோடு கதரணிந்து கை கோர்ப்பார். ஆங்கிலேயரோடு வெளிநாட்டில் தயாரித்த துணியால் ஆன உடுப்புகள் அணிந்து பழகுவார். ஒரு ஆங்கிலேயப் போலீஸ் அதிகாரியை (அவர் விருப்பப் படி) உபசரிப்பதற்காக , தன் வீட்டு நாய் – மற்றும் அனைவராலும் நேசிக்கப் பட்ட மானைக் கொன்று கறி சமைக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307035&edition_id=20030703&format=html )

ஜூலை 10 2003 இதழ்:
மௌனியின் படைப்புகளின் இலக்கிய இடம்- ஜெயமோகன்- மௌனியின் மாபெரும் வறுமை அவருக்கு இயற்கையைக் காணும் கண் இல்லை என்னும் துரதிர்ஷ்டத்திலேயே உருவாயிற்று.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307106&edition_id=20030710&format=html )

தயக்கங்களும் தந்திரங்களும்- சி.ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள்’ – எனக்குப் பிடித்த கதைகள்- 68- பாவண்ணன்- ஒரு பாம்பைத் தாக்கப் புறப்பட்ட நான்கைந்து இளைஞர்கள் எல்லோரும் திரும்பி விடுகின்றனர். பாம்பு சமூகத்தை மையப்படுத்தும் படிமமாகத் தென்படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307104&edition_id=20030710&format=html )

ஜூலை 17,2003 இதழ்:

வரதட்சணை மீது வழக்குப் போர் தொடுத்த புதுமைப் பெண் நிஷா ஷர்மா- சி.ஜெயபாரதன் கனடா- மண நாளில் திடீரென 12 லட்சம் வரதட்சணை கேட்டுத் தகராறு செய்த மணமகன் மற்றும் அவனது தாயைக் கூண்டிலேற்றினார் நிஷா ஷர்மா என்னும் இளம் பெண்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20307172&edition_id=20030717&format=html )

பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 10- கே.ரவி ஸ்ரீநிவாஸ்-மூன்று கருத்துக்கள் 1.காடு அரசுக்கே சொந்தமானது. 2. சில காடுகள் அரசுக்கு சில காடுகள் பழங்குடியினருக்கு. 3. பழங்குடியினருக்கே காடு சொந்தமானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20307175&edition_id=20030717&format=html )

காமராஜர் 100- ஞாநி- பொதுமக்களுக்குத் நன்மை செய்யப் படிப்பறிவை விட அனுபவ அறிவே முக்கியம் என்று நிரூபித்தவர் காமராஜர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20307177&edition_id=20030717&format=html )

உலக அரங்கில் தமிழ் இலக்கியம் -சுந்தர ராமசாமி- நாம் கற்பனை செய்வது போல் உலக அரங்கில் தமிழ் இலக்கியம் பரவி விடவில்லை. தேசிய அரங்கில் பரவி விடவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20307178&edition_id=20030717&format=html )

மானுட உறவின் புதிர்கள்- (திரிகோணமலை க.அருள் சுப்ரமணியனின் “அம்மாச்சி” சிறுகதைத் தொகுதி நூல் அறிமுகம்)- பாவண்ணன்-சாதாரண புழங்குதளத்தின் சித்திரங்களைக் காட்டும் சிறுகதைகள் மிகவும் ஈர்ப்பாக இருக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307173&edition_id=20030717&format=html )

விலை கொடுத்துக் கற்கும் பாடம்- தூமகேதுவின் “போஸ்ட் ஆபீஸ்”- எனக்குப் பிடித்த கதைகள்-69 பாவண்ணன்- குஜராத்தி எழுத்தாளர் தூமகேதுவின் கதை. கடிதமே ஒரே தொடர்பு வழியாக இருந்த காலத்தில் எழுதப்பட்ட கதை. தன் மகளைத் திருமணம் செய்து அனுப்பிய அலி என்னும் ஆள் தினமும் அவள் கடிதத்துக்காகக் காத்திருந்து போஸ்ட் மாஸ்டரால் ஒரு தொல்லையாகவே கருதப்படுகிறார். மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் அலி தன் மகள் கடிதம் தன் மரணத்துக்குப் பின் வரும் பட்சத்தில் அதைத் தன் கல்லறையில் வைக்கும் படி வேண்டுகிறார். போஸ்ட் மாஸ்டரின் மகள் உடல் நிலை பற்றி அவர் பதட்டப் படும் போது அவருக்கு அலியின் நிலை புரிகிறது. அவர் அலியின் விருப்பப் படி வரும் கடிதத்தை அவரது கல்லறையில் வைக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307174&edition_id=20030717&format=html )

ஜூலை 24,2003 இதழ்:

யதார்த்தவாதியான கர்மவீரர் – சுந்தர ராமசாமி- ராஜாஜி கோஷ்டியினரின் குறுக்கீடினால் காமராஜர் பதவியில் அமர்வதுவே வெகுகாலம் பிந்தி விட்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203072411&edition_id=20030724&format=html )

தேவை- ஆசியாவுக்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம்- செஞ்சிலுவைச் சங்கமல்ல- சின்னக் கருப்பன்- அசோகச் சக்கரம் இந்தியாவின் சக்கரமாக மட்டுமல்லாமல் புத்தர் வழியைப் பின்பற்றும் அனைத்து ஆசிய நாடுகளின் சின்னமாகவும் ஆகலாம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20307249&edition_id=20030724&format=html )

தன்னிலையான பெண்ணின் உடல் – மாலதி மைத்ரி சங்கராபரணி கவிதைகள் குறித்து – எச். பீர்முகம்மது-

முன்பு ஒரு நாள் தன் அம்மா சொன்ன கதைக்குள் இருந்த யானை ஒன்றை
என் அம்மா எனக்குப் பரிசாகக் கொடுத்தாள்
வெகுகாலம் கழித்து வெயில் தாளாமல்
யானையுடன் கடலுக்குள் சென்றேன்
கடலுள் கரைந்த ஒன்றை ஓராயிரம் தும்பிக்கை என
என் மகள் ஊருக்கெல்லாம் ஒரு கதை சொல்லிச் செல்கிறாள்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307243&edition_id=20030724&format=html )

இனக்குழு அழகியலின் முன்னோடி- கி.ராஜநாராயணன் படைப்புகள்- ஜெயமோகன்
மனங்கள் உரசிக் கொள்ளும் நுட்பமான தருணங்களைக் கூட ராஜநாராயணன் உடல் மொழியால் சொல்லி விடுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307245&edition_id=20030724&format=html )

உயிரின் போராட்டம் – தெளிவத்தை ஜோஸப்பின் “மீன்கள்- எனக்குப் பிடித்த கதைகள்-70
ஒரு கூலித் தொழிலாளிக்கு மிகவும் சிறிய குடியிருப்பு – அவன் குடும்பத்துக்குப் போதாது. அதனால் அவனும் அவன் குடும்பமும் படும் கஷ்டம் சொல்லி மாளாது. எதாவது பெரிய குடியிருப்பு காலியாகும் போது அவன் ஒரு பெரிய போத்தல் சாராயத்தைக் கங்காணிக்கு வாங்கித் தந்து அதில் குடியேறுகிறான். புதிதாகக் கூலி வேலைக்கு வந்த ஒருவன் இரண்டு போத்தல் சாராயத்துடன் கங்காணியை வளைத்து விடுகிறான். இவன் இனி எங்கே குடியிருப்பான்?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307244&edition_id=20030724&format=html )

ஆகஸ்ட் 2, 2003 இதழ்:
பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 11- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- 19747க்குப் பின்பும் கூட காடுகள் குறித்த கொள்கை அரசு மைய வாதமாகவே உள்ளது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20308029&edition_id=20030802&format=html )

கலையும் படைப்பு மனமும் – சுந்தர ராமசாமி- படைப்பு எந்த அளவுக்கு வாழ்க்கையின் சாராம்சத்தைத் தேக்குகிறதோ அந்த அளவுக்கு உயிர்ப்புப் பெறுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308026&edition_id=20030802&format=html )

தாவியலையும் மனம்- எனக்குப் பிடித்த கதைகள் -71 (இந்திரா பார்த்தசாரதியின் “நாசகாரக் கும்பல்”- பாவண்ணன்- இரண்டு கால்களையும் இழக்கும் அளவு ஒரு சிறுவன் பேருந்தில் அடிபட்டு மருத்துவரின் உடனடி சிகிச்சையால் உயிர் பிழைக்கிறான். பேருந்தின் உரிமையாளர் எல்லோரையும் சரி கட்டி விடுகிறார். பஸ்ஸின் டிரைவர் முதலில் சிறுவனுக்கு உறுதுணையாய் நின்றாலும் பின்னர் முதலாளியின் அழுத்தத்தால் மனம் மாறுகிறான். ஆனால் மருத்துவர் காட்டும் கடமைப் பற்றும் மனிதநேயமும் அவன் மனதை மாற்றி விடுகின்றன. அவன் சிறுவனுக்கு வேண்டியவை செய்யும் முடிவெடுக்கிறான்.

ஆகஸ்ட் 9 2003 இதழ்:
பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துத் தான் திருமணம் செய்ய வேண்டும்- சின்னக் கருப்பன்- ஆண்களுக்கு தகப்பனின் தொழில் மற்றும் சொத்துக் கிடைத்த காலத்தில் வந்தது தான் வரதட்சணை. இன்று பெண்களுக்கு சொத்தில் பங்கிருந்தாலும் வரதட்சணை அவர்கள் மணவாழ்வுக்கு நல்லதே. நிஷா ஷர்மா கூட வரதட்சணையே கொடுக்க மாட்டேன் என்று சட்ட உதவியை நாடவில்லை. பேசியதற்கு மேல் கொடுக்க முடியாது என்றே காவல் துறையிடம் போனார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20308093&edition_id=20030809&format=html )

கோவாவில் பொது சிவில் சட்டம்- தேவிதாஸ் குப்தா (அவுட் லுக்)- எல்லா மதத்தினரின் ஒப்புதலுடன் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இன்றும் கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20308099&edition_id=20030809&format=html )

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல்- 1- ஜெயமோகன் – ஜெயகாந்தனை மதிப்பிடுகையில் முக்கியமாக கவனத்துக்கு வர வேண்டிய விஷயம் அவரது உண்மையான சத்திய வேட்கையே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308094&edition_id=20030809&format=html )

ஆகஸ்ட் 15, 2003 இதழ்:
பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 12- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- உலகமயமாதல் சூழல் பாதுகாப்பு இயக்கங்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203081513&edition_id=20030815&format=html )

நாவலும் யதார்த்தமும்- சுந்தர ராமசாமி – படைப்பு படைப்புக்குரிய வலுக்களைக் கொண்டால் தான் அது சமுதாயத்தை பாதிக்கும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308153&edition_id=20030815&format=html )

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல்-2- ஜெயகாந்தனின் நாவல்கள் வெற்றி பெறாமற் போனமைக்கான அகக்காரணம் அவருக்குக் கரணிய முறைப்படி அவருக்கு வரலாற்றையும் மனித மனத்தையும் தொகுத்து ஆராயும் நோக்கு இல்லை என்பதே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308151&edition_id=20030815&format=html )

அழித்தலும் அஞ்சுதலும் – உமாவரதராஜனின் “எலியம்”- எனக்குப் பிடித்த கதைகள்-72- பாவண்ணன்- எவ்வளவோ போராடி அழித்தாலும் மறுபடி எலி ஒரு நடுத்தரக் குடும்பத்துக்குத் தொல்லையாகிறது. சகிக்க முடியாத அதே சமயம் தவிர்க்க இயலாத ஒன்றுடன் வாழ்வதன் படிமமாக எலி இந்தக் கதையில் பயன்படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308152&edition_id=20030815&format=html )

ஆகஸ்ட் 22, 2003 இதழ்:
கூத்துப் பட்டறையின் படுகளம்- வெளி ரெங்கராஜன்- நடிகர்கள் ஒரு நாடகத்தை நிகழ்த்துபவர்களாக மட்டுமல்லாமல் மகாபராத காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே ஒரு ஊடாட்டத்தை நிகழ்த்துபவர்களாகத் தோற்றம் கொண்டனர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203082210&edition_id=20030822&format=html )
22 ஆகஸ்ட் 2003 இதழ்:
பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும் போது ஏன் அதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை?- காலித் ஹஸன்-
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20308226&edition_id=20030822&format=html )

உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டிரேவதியின் கவிதைகள் குறித்து- எச்.பீர்முகம்மது-
படித்தாலும் எனக்கு அறிவே இல்லையென்றும்- தனியாகப் பேசிக் கொண்டே
இருந்தால் கிறுக்கு என்றும் சொல்கின்றனர்
மல நாற்றம் மாமிச நாற்றம் ரத்த நாற்றங்களுக்குப் பழகிப் போன
கிறுக்கிகள் எப்போது பேசுவதை நிறுத்தும்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308224&edition_id=20030822&format=html )

தேடியதும் கிடைத்ததும் – கரிச்சான் குஞ்சுவின் “நூறுகள்” – (எனக்குப் பிடித்த கதைகள்-73)- பாவண்ணன்- பெண்ணைப் பெற்றவர் அவள் திருமணத்துக்காகப் பணம் புரட்ட வழி தெரியாமல் இருக்கும் போது, சீட்டாட்டம் கை கொடுக்கிறது. நிறைய ஜெயித்துக் கையில் பணம் புரள்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308225&edition_id=20030822&format=html )

புதுமைப்பித்தனின் சமூகப் பார்வை- சுந்தரராமசாமி- நீண்ட கவித்துவ மரபிலிருந்து தொற்றிக் கொண்ட அதீதக் கற்பனைப் பார்வை; புராணங்களிலிருந்து பெற்ற பார்வை- இப்பார்வைகளையெல்லாம் நிர்தாட்சண்யமாகத் தாக்கினார் புதுமைப்பித்தன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20308289&edition_id=20030828&format=html )

கு.ப.ராஜகோபாலன் – நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி-ஜெயமோகன்- கு.ப.ரா.வின் வெற்றி அக உணர்வுகளை அதிராமல் சொல்ல அவர் உருவாக்கிய கச்சிதமான வடிவத்தில் இருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308282&edition_id=20030828&format=html )

ஆவேசமும் குழந்தைமையும்- வில்லியம் பாக்னரின் “இரு சிப்பாய்கள்”- எனக்குப் பிடித்த கதைகள்-74- பாவண்ணன்- இரண்டாம் உலகப் போரின் போது ஒரு பிரென்ச் குடும்பம் அமெரிக்காவில் வசிப்பவர்களின் மூத்த மகன் ராணுவத்தில் சேர்கிறான். அவன் ஜப்பான் மீது காட்டும் வெறுப்பும் அவன் தம்பி மிகவும் சிறுவன் அவன் மனதிலும் அதே வெறுப்பும் அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்க சிந்தனையைச் சுமப்பதைச் சுட்டும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308285&edition_id=20030828&format=html)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in திண்ணை and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s