மூத்த பத்திரிக்கையாளர் ஞாநிக்கு என் அனுதாபங்கள்


220px-Gnani
மூத்த பத்திரிக்கையாளர் ஞாநிக்கு என் அனுதாபங்கள்

ஆம் ஆத்மி கட்சியின் அனுதாபி ஞாநி என்றாலே ஆச்சரியக் குறி தான். அவர் அந்தக் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் மிக அவசரமான முடிவை எடுத்துள்ளதன் மூலம் எனது ஆழ்ந்த அனுதாபங்களுக்கு உரியவராகிறார்.

பெரியார் மீது எனக்கு இருந்த தவறான கருத்துகள் ஞாநியின் எழுத்தைப் படித்ததால் மாறத் துவங்கின. 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய வீதி நாடக இயக்கத்தில் குறுகிய காலம் நான் ஈடுபட்டேன். வெளியூர் பயணங்கள் ஒரு வருடம் தொடர்ந்து இருந்த போது என் பணி நின்றது. அதன் பிறகு மறுபடி தீம்தரிகிட இதழை அவர் நடத்திய போது எங்கள் இருவருக்கும் தொடர்பு வந்தது. என் கவிதைகள் தீம்தரிகிடவில் வெளியாயின. எனக்கு மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர்களை (நான் மதிப்பவரை) சந்தித்துப் பேசுவதில் ஒரு தயக்கம் இன்று வரை தொடர்கிறது. எனவே நான் அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. ஒரு முறை (அவர் எக்ஸ்பிரஸ் தினசரியில் முக்கிய பணி வகித்த போது) என் பள்ளி ஆசிரியர் ஒரு பதிவை வெளியிட விரும்பினார். அந்த அடிப்படையில் அவரை சந்தித்தேன்.

ஞாநியின் மிகப் பெரிய பலம் இன்று வரை அவர் சமாதானங்கள் செய்யாத ஒரு அரிய ஊடக ஆளுமை. அவர் துணைவியார் என் மனைவியின் கல்லூரி ஸீனியர். எனவே அவரது சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ சோதனைகளைக் கடந்ததும் எனக்குத் தெரியும்.

சரி. விஷயத்துக்கு வருவோம்.

ஞாநி அரசியலில் குதித்தது சுயேச்சை வேட்பாளராக அல்ல. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக. இனி அவர் ஊடகத்தில் எதைச் செய்தாலும் கேஜ்ரிவாலின் “அதி மேதாவித்தனமான” “மிகை நாடகமான” காட்சிகளின் ஒரு கதாபாத்திரம் தான். இத்தகைய சறுக்கலை ஒரு பழுத்த பத்திரிக்கையாளர் செய்திருக்கக் கூடாது. ராஜ் மோகன் காந்தியும் ஒரு உதாரணமே. ஆனால் அவர் அரசியல் சார்புடன் செயற்பட்ட காலங்கள் உண்டு.

நடுத்தர மக்களின் மிகப் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக அரசியலில் குதித்த போது கேஜ்ரிவாலின் பிம்பம் இருந்தது. காங்கிரஸிடம் “டெல்லி காவல்துறையை என்னிடம் ஒப்படைத்தால் நாம் முதலமைச்சர் பதவியில் அமர்கிறேன். இல்லையேல் அது வேண்டாம் ” என்று கிடுக்கிப்பிடி போட கேஜ்ரிவாலிடம் கண்டிப்பாக வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரு வாரங்களுக்குள் காவல்துறை பெண்களைப் பாதுகாக்கவில்லை என்றார். தெருவில் இறங்கிப் போராடினார். நாடகம் அவருக்கு எதிராகத் திரும்பும் நிலையில் அதைக் கைவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய நாடகத்துடன் இறங்க அடுத்த திட்டம். என் “பிராண்ட்” லோக்பால் இல்லையே என்று நாடகம் நடத்தினார். லோக்பால் மசோதாவை மத்திய யூனியன் பிரதேசமான டெல்லி நாடாளுமன்றத்தையும் தாண்டி நிறைவேற்ற அரசியல் நிர்ணய சட்டத்திலேயே இடமில்லை.ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பெரிய மனிதர் இவர். ஐஏஎஸ் பரிட்சையில் தேற அடிப்படையான அறிவு கூட அரசியல் நிர்ணய சட்டம் பற்றித் தேவையில்லையா? கேஜ்ரிவால் மிகப் பெரிய அதிகாரக் காதலர். அவரது அதிகாரக் காதல் அவரை ஆட்டி வைக்கிறது.

அன்னா ஹஸாரேயுடன் இருந்த காலத்தில் அவரது ஊழல் எதிர்ப்புக்கு மத்தியதர மக்களிடமும் படித்தவர்களிடமும் இருந்த ஆதரவு இவருக்கு நல்ல வாய்ப்பை எடுத்துக் காட்டியது. உடனே அதை அரசியல் வெற்றியாக அறுவடை செய்யத் திட்டமிட்டார். அன்னா ஹஸாரேவை உதறினார். நாடகக் குழு ஒன்று துவங்கினார். ஆம் ஆத்மி கட்சி என்று பெயர் வைத்தார். வெளி நாட்டில் இருந்த படி இந்திய சேவை செய்யும் எண்ணமுள்ள இந்தியர்களின் பணம் கொட்டிக் குவிந்து நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆட்சி நடத்த வாய்ப்பு கிடைத்த போது அதைப் பயன்படுத்திப் பொறுமை காத்துப் போராடி 10% அல்லது 20% சீர்திருத்தம் கொண்டு வந்திருந்தாலும் நாம் அவரைக் கொண்டாடி இருக்கலாம். இன்று மக்களின் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தை அறுவடை செய்து வருகிறார்.

அவரது அரசியல் பணி பற்றிய விமர்சனம் என்று இதைக் காண வேண்டாம். உண்மையில் ஊழலை அரசியல் ரீதியாகப் போராடி வெல்ல முடியாது என்பதே நிதர்சனம். ஊழலை அதிகார அமைபுக்கு வெளியே அரசியல் சார்பற்றவர்கள், ஊடகங்கள் மற்றும் மக்களே இடையறாது போராடி கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

லோக்பால் அமைப்பில் ஒரு முக்கியமான விஷயம் எந்த ஒரு அரசு ஊழியரும் அதன் அடிப்படையில் சட்டத்தின் பிடிக்குள் வருவார். இதை கம்யூனிஸ்ட்டுகளே எதிர்த்ததாகத் தகவல். பல அரசுத் துறைகளில் நடைமுறையில் உள்ள ஊழல் கீழ் நிலை ஊழியரில் துவங்கி மேல் நிலை வரை போகிறது இல்லையா. பத்திரப் பதிவுத் துறை, போக்குவரத்து ஆணையர் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பல அமைப்புகளில் கீழ் நிலையில் லஞ்சம் பெறப் படுகிறது. பல சமயம் இடைத்தரகர்களே பணத்தை வாங்கி சேர்ப்பிக்கின்றனர்.

எனவே நம்முன் உள்ள கேள்வி ஒழுங்கான பணத்துடன் திருப்தியாகும் மனநிலையை ஏன் நாம் அரசியல்வாதியிடம் மட்டும் எதிர்பார்க்கிறோம்? அரசு ஊழியர்களின் நிலைப்பாடு என்ன? அவர்கள் அங்கத்தினர்களாக இருக்கும் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு என்ன?

இங்கே தான் ஊடகங்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு வரும். ஒரு தொழிற்சங்கம் தன் உறுப்பினனைப் பார்த்து “நீ லஞ்சம் வாங்காதே” என்று சொன்னால் அவர்களுக்கு உறுப்பினர் சந்தாவே வராது. அதே போல ஒரு அரசியல் கட்சி “நான் ஊழலே செய்யாமல் ஊழலை ஒழிக்கப் போகிறேன்” என்று பதவியைப் பிடிக்கலாம். அவ்வளவே. ஊழலை ஒழிக்க அரசியல் செய்து பயனில்லை. ஊழலை ஒழிக்க மக்கள் விழிப்புணர்வு மேம்பட வேண்டும். அதைத்தான் அன்னா ஹஸாரே செய்கிறார்.

மறுநாள் முதல் அவர்களின் தொண்டர்கள் தொடங்கிப் பலரின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வது கடினம். அவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்புகளும் சேரும். மக்களின் மனப்பாங்கு மாற வேண்டும். அரசியல்வாதியை சபிப்பது எளிது. நம் மனம் மாறுவது எப்போது? அடிப்படையில் இந்தியக் குடிமகன் “லஞ்சம் வாங்க மாட்டேன். கொடுக்க மாட்டேன்” என்று உண்மையான உணர்வுடன் மாற்றத்தை நோக்கி நகரும் போதே இந்தியா தூய்மை பெறும். இந்த மாற்றத்தை ஒரு அரசியல்வாதி செய்ய முடியாது. ஒரு சமூக ஆர்வலரே செய்ய முடியும். இதை ஞாநி அவர்கள் எப்படி கவனிக்காமல் விட்டார்?

(தமிழ் ஹிந்து 14.3.2014 அன்று வெளியிட்ட செய்தியை ஆதாரமாக வைத்து எழுதிய கட்டுரை இது.)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மூத்த பத்திரிக்கையாளர் ஞாநிக்கு என் அனுதாபங்கள்

  1. K. Jayadev Das says:

    \\ஞாநியின் மிகப் பெரிய பலம் இன்று வரை அவர் சமாதானங்கள் செய்யாத ஒரு அரிய ஊடக ஆளுமை. \\ஆங்கிலத்தில் “never compromised ” என்ற பதத்திற்கு இணையாக தமிழில் இல்லையா? சமாதானங்கள் செய்யாத – என்று எழுதியிருப்பது விநோதமாக உள்ளது, இவ்வாறு தமிழ் எழுத்தாளர்கள் எழுதியாதாகத் தெரியவில்லை.

Leave a Reply to K. Jayadev Das Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s