நாம் தவிர்க்கும் கேள்வி மையமான இத்தாலியச் சிறுகதை


stock-photo-hands-of-the-old-woman-isolated-on-white-background-142295350
நாம் தவிர்க்கும் கேள்வி மையமான இத்தாலியச் சிறுகதை

ஆண் பெண், ஏழை பணக்காரன், அரசியல்வாதி அன்றாடம் காய்ச்சி, படிக்காதவன் எழுத்தாளன், சமூக சேவகன் சமூக விரோதி என யாருமே தவிர்க்கும் ஒரு கேள்வி “முதுமையை எப்படி எதிர் கொள்வது?”

இந்தக் கேள்விக்கான விடை யாருக்குமே தெரியாது என்பது மட்டுமல்ல விடை மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும் என்னும் காரணமே விடையில்லாமற் செய்து விடுகிறது.

முதுமையில் அப்படி என்னென்ன அச்சுறுத்தல்கள்? சம்பாதிக்க முடியாது என்பது மட்டுமல்ல, நோய், பலவீனம், மரணம் என அடுக்கலாம். ஆனால் இவை மூன்றையும் விட அச்சுறுத்துவது ஒன்று உண்டு. என்ன அது?

அது தான் தனிமை. தனிமைப்படுத்தப்படுதல். நிராகரிக்கப்படுதல். துணையற்றுப் போதல்.

இதை மையமாகக் கொண்ட கதைதான். லூயி பிரான் டெல்லோவின் “மெல்லிய புல்தரையில்” என்னும் கதை. தீராநதி மார்ச் 2014 இதழில் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது.

வசதி உள்ள ஒருவர். முதுமையில் அவரது மனைவி அவரை முந்திக் கொள்ள மகன்கள் அவருக்கு (ஒரு காலத்தில் வேலைக்காரர்கள் தங்கிய) அவுட் ஹவுஸ் என்னும் பகுதியை ஒதுக்கி அவரை அங்கேயே தங்க வைக்கிறார்கள். அவருக்குப் பணப்பற்றாக்குறை ஏதுமில்லை. அதே சமயம் அவர் பழக எதையும் பகிர்ந்து கொள்ள யாருமே இல்லை. முதியவர்கள் தமது ஆறிய புண்களைக் கிளறக் கூடும் என்று அவர் தவிர்க்கிறார். இளையவர் யாரும் அவருடன் பேசத் தயாராக இல்லை. குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பதில் அவருக்கு மிகுந்த மன ஆறுதல் கிடைக்கிறது. வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பூங்காவில் விளையாடும் குழந்தைகளை ரசிக்கிறார். அவர்களுடன் பேசக்கூட முயல்வதில்லை. தள்ளி இருந்து ரசிக்கிறார். ஒரு நாள் ஒரு பெண் குழந்தை (பதின் பருவக் குழந்தை) தனது உடுப்பு புற்களில் மாட்டிக் கொள்ள அதைக் கிழியாமல் எடுக்கப் போராடுகிறாள். அவர் கவலையுடன் அதை நோக்க “பொறுக்கி” என்று திட்டி விட்டுப் போகிறாள். இது அவர் மனதை மிகவும் காயப் படுத்தி விடுகிறது. வீட்டுக்கு வேதனையுடன் திரும்பி வருபவருக்கு அவர் அறையில் வேண்டாம் என்று முடிவு செய்து இன்னும் தூக்கிப் போடாத தட்டு முட்டு சாமான்கள் தென்படுகின்றன.

தனிமையை நேசிக்கவும் அதனுடன் வாழவும் நாம் பழகத் தான் வேண்டும். இல்லையேல் முதுமை பல மடங்காக நம்மை வீழ்த்தும்.
தலைமுறை தாண்டி முதியவருடன் யாரும் பழகி அவரது தனிமையைப் போக்க இயலும் என நாம் விரும்பினால் அது ஒரு இளையவரைத் தண்டிப்பது போலத்தான்.

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் முதுமையில் தான் தேவைப்படுவதும் புரிவதும். அதில் ஒருவர் போனாலும் மற்றொருவருக்கு அம்புப்படுக்கையே மீதமுள்ள வாழ்க்கை. இருந்தாலும் இந்த இடத்தில் பெண்கள் ஆண்களை விட முதுமையை சகஜமாக அணுகி வெல்கிறார்கள். அவர்கள் குழந்தைகளால் நேசிக்கப் படுவது ஒரு காரணம். பேரக்குழந்தைகளை வளர்க்கப் பயன்படுவது மற்றொரு காரணம். வாழ்க்கையின் வண்ண ஜாலங்கள் அவர்களை எந்த வயதிலும் ஈர்ப்பதால் அவர்களால் சமூகத்தின் வண்ணமான பகுதியுடன் ஒன்றி விட முடியும். தனிமை தெரிய வாய்ப்பில்லை. ஆணுக்குள் ஒரு மூலையில் ஒளிந்து இருக்கும் பற்றின்மை துறவாக மாறினால் அவன் தனக்கும் சமூகத்துக்கும் பெரிய நன்மை செய்பவன். அது துறவாக மாறாமல் ஒளிந்து விளையாடினால் அதுவே இடையறா வலியும் சுமையும்.

இத்தாலியச் சிறுகதையின் முடிவு நம்மை நாம் தவிர்க்கும் கேள்விக்கு அருகில் இட்டுச் செல்கிறது.

(image courtesy: shutterstock.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s