நம்பினார் கெடுவதுண்டு


download
நம்பினார் கெடுவதுண்டு

முதலில் செய்தி:

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றப் புகார் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஆதரவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது.

தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித் தும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

இதுபற்றி இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திலிப் சின்ஹா கூறியதாவது:

சர்வதேச புலனாய்வு விசாரணை ஏற்பாட்டால் அழைக்காமலே நுழையும் நிலைமையை இந்த தீர்மானம் மூலமாக ஐ.நா. கவுன்சில் திணித்துள்ளது. எதிர் பார்ப்புக்கு மாறான பலனே இதில் கிடைக்கும். மேலும் இது நடை முறைகளுக்கும் ஒத்துவராததாகும்.

2009, 2012, 2013ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் போல் அல்லாமல், இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை ஆராயவும் மதிப்பிடவும் கண்காணிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு இந்த தீர்மானம் அழைப்பு விடுத்திருக்கிறது. இது இலங்கையின் இறையாண்மையை பலவீனப்படுத்தும்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது, தமிழர்கள் உள்பட அங்குள்ள எல்லா சமூகத்தவருக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த வாய்ப்பை கொடுத்துள்ளது என்பதே இந்தியாவின் கருத்தாகும்.

மனித உரிமைகளை பாதுகாத் திடவும் மேம்படுத்திடவும் இலங்கை மேற்கொள்ளும் சொந்த முயற்சி களுக்கு பங்களிப்பு தருவதாகவே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் முயற்சிகள் இருக்கவேண்டும். இந்த கவுன்சிலுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. கடந்த ஆண்டில் இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திலிப் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

————————————————————————————————————————————-

இலங்கையில் தமிழருக்கு சம உரிமை வேண்டி நடைபெற்ற போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த போது கிட்டத்தட்ட ஏக மனதாகத் தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்கள். நிறைய பண உதவி தமிழக அரசின் சார்பில் மற்றும் தனிப்பட்டவர்கள் சார்பில் ஆயுதப் போராட்டத்துக்குக் கிடைத்தது. ஒரு ஒப்பந்தம் பின் அதை நிராகரித்தலென ஒரு போராட்டக் குழு மேலே சென்ற போதும் இதே கட்சிகள் ஆதரித்தன.

2009ல் நிகழ்ந்த பெரிய உயிரழப்பைத் தவிர்ப்பதிலோ அல்லது அதன் பிறகு இலங்கை வாழ் மக்களுக்கு மறுவாழ்வுக்காக ஏதேனும் செய்வதிலோ தமிழகக் கட்சிகள் எந்தத் திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் சிகரமாக மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விசாரணையைக் கூட இந்தியா ஆதரிக்கவில்லை.

நம்பினார் கெடுவதில்லை என்னும் வார்த்தையை இந்திய அரசியல் கட்சிகள் பொய்யாக்கி விட்டன. இலங்கையின் சாதாரண மக்கள் ஆயுதங்களாலும் அரசியல்வாதிகளாலுமே இத்தனை இழப்புக்கு ஆளானார்கள். அவர்கள் மறுவாழ்வு அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தாது என்பதால் அது முக்கியமான பிரச்சனையாக இன்னும் எடுக்கப் படவே இல்லை. உலக நாடுகள் கண்டிப்பாக நல்ல திருப்பங்களை ஏற்படுத்தக் கூடும்.

(செய்திக்கு நன்றி: தி ஹிந்து) Image courtesy: google.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s