பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் நேர்மையான முகமூடியில்லாத கிறித்துவப் பற்று


220px-David_Cameron_official

பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் நேர்மையான முகமூடியில்லாத கிறித்துவப் பற்று

“As politicians, I hope we can draw on these values to infuse politics with a greater sense of evangelism about some of the things we are trying to change. “. கிறித்துவ மதம் அரசியல்வாதிகளின் மைய மந்திரமாக இருக்க வேண்டும். அரசியல் கிறித்துவ வழியில் செல்ல வேண்டும் என்று இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரான் ஈஸ்டரை ஒட்டி ஒரு சர்ச்சின் பத்திரிக்கையில் எழுதி இருக்கிறார்.

முதலில் அவரது நேர்மைக்காக நாம் அவரைப் பாராட்ட வேண்டும். இரண்டாவது இங்கிலாந்து மன்னருக்கு இன்றும் முக்கியத்துவம் தருகிறது. மன்னர் சர்ச்சுக்குக் கட்டுப்பட்டவரே.

கேமரான் நமக்கு நம் அரசியல்வாதிகள் அணியும் முகமூடிகளை நினைவு படுத்துகிறார். மதச்சார்பின்மைக்கு எதிராக கிட்டத்தட்ட 75% முதல் 80% அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.

இந்தியாவின் பெரிய பலம் மதச்சார்பின்மை நேர்மறையான வழியில் காணப்படுகிறது. அதாவது அரசு எந்த மதத்தையும் சாராதது மட்டுமல்ல எல்லா மதவழிபாடுகளுக்கும் சம வாய்ப்பளிக்கிறது. சிறுபான்மையினர் நலம் பேணப்படுகிறது. பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் உள்ள இந்து சீக்கிய சிறுபான்மையினருக்கு உயிருக்கே உத்தரவாதம் கிடையாது. ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு சில விசேஷ சலுகைகள் உண்டு. இது கண்டிப்பாக நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

சரி எப்படி இங்கே மதவெறி தழைக்கிறது?

மதம் சார்ந்த அமைப்புகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்து, இஸ்லாமிய, கிறித்துவ அமைப்புகள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். இதன் கணக்குகள் அரசால் தணிக்கை செய்யப் பட வேண்டும். அதிக வருமானமுள்ள அமைப்புகள் அரசுக்குக் கடுமையான வரி தர வேண்டும். அந்தப் பணம் எல்லா மதத்து மக்களின் நலவாழ்வுக்குப் பயன்படுத்தப் படும்.

மதச்சார்பில்லாத அமைப்புகளின் நடவடிக்கைகளும் கணக்கு வழக்குகளும் அரசின் தணிக்கைக்கு வர வேண்டும். அந்த மதம் இந்த மதம் என்று பாரபட்சமில்லாமல் கடுமையாக இந்தத் தணிக்கையும் கட்டுப்பாடும் நடந்தால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

அவர்கள் அரசின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அரசு அந்த அமைப்பின் எந்த விஷயத்தைப் பற்றியும் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். மத வெறியர்களால் மட்டுமே மதம் சார்ந்த அமைப்புகள் நடத்தப் படுகின்றன. அவர்கள் இதை மறுக்கவே முடியாது. மூன்று பெரிய மதத்தில் உள்ள வெறியர்கள் அனைவரையும் கேள்வி கேட்கும் உரிமையை அரசு எடுத்துக் கொள்ளும் வரை மதவெறி ஓயாது. மூன்று மதத்தின் வெறியர்களும் நம் பார்வையில் ஒன்றுதான் என்னும் கொள்கையை அரசு முன் வைக்கும் போது மத அடிப்படையில் ஓட்டுக் கேட்பது தானே நின்று விடும்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s