மேதின நல் வாழ்த்துகள்


2014-04-30 13.56.06

இந்தப் புகைப்படத்தில் நாம் காண்பது மழலை மாறாத மூன்று வயது கூட நிரம்பாத ஒரு சின்னஞ்சிறு குழந்தை. மதிய உணவு நேரம். நான் பார்க்கும் போது அவள் ஒரு காரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். புகைப்படம் எடுக்கும் போது காரைச் சுற்றிய பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். லட்சக் கணக்கில் குழந்தைத் தொழிலாளிகள் நம் நாட்டில் 15 மணி நேரம் இன்னும் அதிகம் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேதினத்தின் முக்கியத்துவம் 8 மணி நேர வேலை என்னும் கோரிக்கை 19ம் நூற்றாண்டில் நிலை நாட்டப்பட்டதே.
அமெரிக்காவில் William H. Sylvis, the leader of the reconstructed Molders’ Union என்பவரால் 1866ல் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்னும் போராட்டம் முன்னெடுக்கப் பட்டு பல ஆண்டுகள் அவரால் உலக நாட்டு அமைப்புகளிடம் வலியுறுத்தப் பட்டது. அதன் பின்னரே படிப்படியாக உலகெங்கும் இது சட்டமாக்கப் பட்டது. அமெரிக்காவில் 1.5.1886ல் இது சட்டமாக்கப் பட்டது. அந்த நாளே மே தினமாகக் கொண்டாடப் படுகிறது.

அமைப்பு சார்ந்த தொழிலாளிகள் அமைப்பு சாராத தொழிலாளிகள் என்று ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். தானே ஒரு தொழில் முனைவராக ஒருவர் இரவு பகலாகப் பாடுபடுவது வேறு. ஒரு தொழிலாளியை சம்பளம் தரும் முதலாளி தன் விருப்பத்துக்கு ஆட்டி வைப்பது என்பது முற்றிலும் வேறு.

மார்க்ஸ் முன் வைத்த கேள்வி ஒன்றே ஒன்று தான். பொருட்களும் செல்வங்களும் நில வளத்தை மட்டும் வைத்து உருவாக்கப் படுவதில்லை. மனித உழைப்பையும் வைத்தே உருவாக்கப் படுகிறது. ஆனால் செல்வத்தின் அடிப்படையான இந்த உழைப்பு என்னும் மூலதனத்துக்கு உரிய இடம் ஏன் தரப்படக்கூடாது என்பதே அவர் கேள்வி. தனியாரே வேண்டாம் என்று அவர் வாதிட்டது காலப் போக்கில் மாற்றப் பட வேண்டிய ஒன்று ஆனது. அதனால் மட்டுமே அவர் கூறியது அனைத்துமே தவறு என்று ஆகி விடாது.

இன்று தகவல் தொழில் நுட்பத் துறையில் மூளை வேலை செய்யும் இளம் பொறியியல் பட்டதாரிகள் ஆகட்டும் அல்லது உணவகங்களில் வேலை செய்வோராகட்டும் அவர்களின் பணி நேரத்துக்கோ அல்லது தரப்படும் சம்பளத்துக்கோ அல்லது நடத்தப்படும் முறைக்கோ எந்த வரையறையும் இல்லை.

கம்யூனிஸ்ட்கள் என்பவர்கள் சமூக விரோதிகள் போலவும் கம்யூனிஸம் என்பது வளர்ச்சிக்கு எதிரானது என்பது போலவும் ஒரு சித்திரம் உருவாக்கப் பட்டு விட்டது.

சீனாவும் ரஷியாவும் இருண்ட உலகங்களாக மனித உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்கி கம்யூனிஸத்துக்கு குழி தோண்டி விட்டார்கள். அதுவே இன்றைய பின்னடைவுக்குக் காரணம்.

இருந்தாலும் வர்க்கம் என்னும் அடிப்படை இருக்கத் தானே செய்கிறது? நான் அபூர்வமாக நான்கு சக்கர வாகனத்தை அமர்த்திப் பயணிக்கும் போதெல்லாம் என் குடும்பத்துக்கும் வண்டி ஓட்டுனருக்கும் ஒரே மேசையை சிரமப்பட்டுக் கண்டுபிடிப்பேன். அவரைத் தேடினால் அவர் எங்கேயோ அமர்ந்திருப்பார். அவரை அழைத்து வருவதற்குள் இந்த இடம் பறி போனது உண்டு.

தொழிலாளிகளுக்கான அமைப்புகள் சமுதாயத்தில் ஊழலை ஒழிக்கும், பெண்ணுரிமை நிலை நாட்டும், ஜாதி பேதத்தை ஒழிக்கும் அமைப்புகளாகத் தம்மை உயர்த்திப் பணி புரியாததால் இன்று அவர்கள் அந்தந்த நிறுவனத்துக்குள் மட்டுமே சிறிய பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாக நின்று விடுகிறார்கள்.

அரசு தொழிலாளிகளின் நலனை அதாவது எல்லாத் தொழிலாளிகளின் நலனைப் பேணுவதில் உறுதியாக இருக்க வேண்டும். வளர்ச்சி என்பது தொழிலாளிகளின் குடும்பமும் சேர்ந்து வளரும் ஒன்றாக இருக்க வேண்டும். செங்கோடி ஏந்தியவர்கள் இன்று திசை தெரியாமலும் காலாவதியாகியும் போயிருக்கலாம். ஆனால் தொழிலாளிகளைக் காப்பது சமூகத்தின் அஸ்திவாரத்தை உறுதிப்படுத்துவதாகும். மேதின நல் வாழ்த்துகள்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s