கூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால்


kk2

கூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால்

கூடங்குளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எழுப்பப் பட்ட அச்சங்களை விசாரித்து இனி மேலும் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் இல்லை என்று குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் கூடங்குளம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது.

முந்தைய பதிவுகளில் நான் சில விஷயங்களைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டிருந்தேன்.

1.முதலாவது வளர்ந்த நாடுகளை ஒப்பிட அணு உலை விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை ஒன்றுமே இல்லை.(இந்தியாவில் அணு உலை அமைக்கும் வெளிநாட்டுடன் செய்த ஒப்பந்தத்தில் உள்ள புரிந்துணர்வுப்படி) 1500 ரூபாய் என்னும் அளவு எளிதானது. இந்த பெரிய கேள்விக்கு எனக்குத் தெரிந்து இன்னும் விடை காணப் படவே இல்லை.

2. அடுத்தது மக்களின் மின்சாரத் தேவை அசுர வேகத்தில் வளர்ந்த படியே உள்ளது. நிலக்கரியை வைத்து உருவாக்கும் அனல் மின்சாரம் காற்றை மாசு படுத்தும். அணு சக்தியில் கண்டிப்பாக ஆபத்துக்கான சாத்தியக்கூறு உண்டு. இப்போதைக்கு வேறு வழி இல்லை. நீராதாரம் கொண்டு வரும் மின்சாரம் காற்றாலை மின்சாரம் இவை மழை, காற்றைப் பொருத்தே கிடைக்கும். சூரிய மின்சக்தி செலவு அதிகம் பிடிப்பது.

3. அணு சக்தி எதிர்ப்பாளர்கள் ஏற்கனவே இயங்கும் உலைகள் பற்றி எந்த ஒரு திட்டவட்டமான கோரிக்கையையும் வைக்கவில்லை. அதாவது அவைகளையும் மூட வேண்டுமா? மூடினால் மின்சக்திக்கு எந்த ஆதாரம் என்று ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

சூரிய மின்சாரமே நிரந்தர மாற்றாகத் தோன்றுகிறது. ஆனால் அது செலவு பிடிக்கும் என்று எத்தனை காலம் சொல்லிக் கொண்டே இருப்பது. பெரிய அளவில் அதைக் கொண்டு வந்தால் கண்டிப்பாகச் செலவு குறையும் தானே?

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னும் உதயகுமார் அவருடன் தோளோடு தோள் கொடுத்த அறிவு ஜீவிகள் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் குறித்துக் கவலை கொள்ள வேண்டும். எதிர்மறையான ஒன்றுக்கு மட்டும் தான் கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதில்லை. விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்கம் இருவருமே சிறந்த ஆபத்தில்லாத மின்சார உற்பத்தி முறையைக் கொண்டு வர வேண்டும். இந்த திசையில் உதயகுமார் போன்றவர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s