பத்து வயதுப் பெண் குழந்தைக்குத் திருமணப் பேச்சு வார்த்தை


images
பத்து வயதுப் பெண் குழந்தைக்குத் திருமணப் பேச்சு வார்த்தை

பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்றும் 16 வயதுப் பையன் ஒருவனும் ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். சென்னையில் அடையாறில் உள்ள பள்ளி அது. இரு குழந்தைகளின் அம்மாக்களும் “கேலியாக, கிண்டலாக” அந்தக் குழந்தைகள் இருவரையும் வைத்துக் கொண்டு மேலும் பல தோழிகள் நடுவே இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யும் சாதக பாதகங்களைப் பற்றி ஒரு விபரீத உரையாடல் நடத்தினர். பையனின் தாய் எங்கள் நெருங்கிய உறவினர். அவருடைய சகோதரி நேரில் இதைக் கேட்டு என்னிடம் மிகவும் வருத்தப் பட்டார். தான் குழந்தைகள் நடுவே இப்படிப் பேச வேண்டாம் என்று வேண்டியும் அந்தப் பெண்கள் கேட்கவே இல்லை என்று மிகவும் வேதனைப் பட்டார்.

இதில் மிகவும் வருத்தப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தப் பெண்கள் அனைவரும் பட்டதாரிகள். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுவதே நாகரீகம் என்று நினைப்பவர்கள். இரண்டாவது வருத்தம் அந்த உறவுக்காரப் பெண் தன் பெண் குழந்தை பற்றி என்னிடம் கவலைப் பட்ட போது பதின்களில் உள்ள குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும் என்று ஒரு சொற்பொழிவு வேறு செய்தேன். நீங்கள் புத்தகமே எழுதலாம் என்று எனக்குப் பாராட்டு வேறு.

பெற்றோர் எதைக் கண்டு அஞ்சுகிறார்களோ அதை குழந்தை கட்டாயம் எச்சரிக்கையுடன் அணுகும். பெற்றோர் யாரை மதிக்கிறார்களோ குழந்தை அவர்களை முன்னுதாரணமாகக் கருதும். பெற்றோர் அடிக்கடி எதைப்பற்றிப் பேசுகிறார்களோ அதற்குக் குழந்தை முக்கியத்துவம் கொடுக்கும்.

சம்பந்தப் பட்ட பையன் 12ம் வகுப்பில் பல கனவுகளுடன் ஒழுங்காகப் படித்து வருகிறான். தாய்க்கு இந்தச் சூழ்நிலையிலாவது எதைப் பேசலாம் பேசக் கூடாது என்று தெரியவில்லை. சம்பந்தப் பட்ட இரண்டு குழந்தைகளும் உள ரீதியாக பாதிக்கப் படவும் வயதுக்கு மீறிய காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்பு மிக அதிகம்.

இந்த அற்ப நிகழ்ச்சியைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதக் காரணம் இருக்கிறது. பெண்களின் மிகப் பெரிய பிரச்சனை ஆணாதிக்க சமூகம் அவர்களை அடக்குவதுதான் என்று ஒரு கருத்து இருக்கிறது. அது ஒரு அளவுக்கு சரி. ஆனால் அவர்களுக்கு உள்ள மிகபெரிய பலவீனம் அவர்கள் எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தெளிவில்லை. இது அவர்களைப் பின்னுக்கு இழுக்கிறது. சமூக மாற்றம் வரும் வர வேண்டும் என்னும் கனவு அவர்களிடம் இல்லை. உடுத்துவது உண்பது பயணிப்பது வசிப்பது தொடர்பான நூறு வகை விஷயங்களும் அவற்றைத் தேடுவதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும் வாழ்க்கையில்லை. சிந்திக்கும், கூர்ந்து கவனிக்கும், சுதந்திரத்துக்காகப் போராடும் பக்கம் ஒன்று வாழ்க்கையில் உண்டு. இதற்கு அவர்கள் முன்னுரிமை தருவதே இல்லை.

தனது தலைமுறை வரை வீணாகப் போய்விட்டதாக அவர்கள் முடிவு செய்திருப்பதாவே வைத்துக் கொள்வோம். தனது மகன் பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும் என்று எத்தனை தாய் முயற்சிக்கிறார்கள்? தனது மகள் தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து தன் காலில் நிற்க எத்தனை தாய் ஊக்குவிக்கிறார்?

சமூக மாற்றம் பெண்களின் பெரிய பங்களிக்கில்லாமல் நடக்கவே முடியாது. மேலே குறிப்பிட்ட பெண்கள் விதிவிலக்குகளான வக்கிர மனம் கொண்டவர்கள். மற்ற எல்லாப் பெண்களும் பெண்களும் வருங்கால சமுதாயமும் உருப்படும் ஆர்வமுள்ளவர்கள் என்று நம்புவோம்.
(image courtesy:mief.in)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s