ஞாநியின் பேட்டி கிளறும் சிந்தனைகள்


220px-Gnani

ஞாநியின் பேட்டி கிளறும் சிந்தனைகள்

தமிழ் இந்துவுக்குத் தாம் அளித்துள்ள பேட்டியில் ஞாநி ‘ஆம் ஆத்மி’ கட்சியில் தமக்கு உள்ள நம்பிக்கையை அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது பேட்டி பல சிந்தனைகளைத் தூண்டின.

அன்னா ஹஸாரே ‘ஊழல் எதிர்ப்பு’ எந்த அளவு முக்கியம் என்பதை நம் அனைவருக்குமே நினைவு படுத்தினார். அவர் ஒரு நிறுவனம் அல்ல. இன்று வரைத் தாமும் தம் குழுவும் நிறுவனம் ஆவதை அவர் விரும்பவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம்- ஊழலுக்காக யாரையும் கூண்டிலேற்றும் சட்டத் திருத்தம் தேவை என்று போராடினார். குறிப்பிடும் படியான வெற்றியும் பெற்றார்.

காகிதப் புலி போல இந்த சட்டத் திருத்தம் நின்றால் அதற்கான காரணம் நாமே. ஊழல் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிக் கிடப்பதை சகிப்பதால் அதற்குத் துணை போவதும் நாமே. ஏறத்தாழ எல்லாக் கட்சிகளின் அடிப்படை ஊழியர் தொடங்கி நடு அல்லது இரண்டாம் வட்டத் தலைமை வரை விரைவான பணம் மீது காதல் இருப்பது வெளிப்படை. பல கட்சிகளின் தலைவர்களுக்கே இந்தக் காதல் உண்டு.

இதே மனப்பாங்கு அரசு ஊழியர்களிடமும் தென்படுகிறது இல்லையா?

அரசியலுக்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் அரசுப் பணிக்கு வெளியே உள்ளவர்கள் யாராவது மட்டுமே இதைத் தட்டிக் கேட்க முடியும். பொது வாழ்வில் பல்லாண்டுகள் தூய பணியாற்றிய அன்னா ஹஸாரே சரியான ஆளுமை. அவர் இந்தப் பணியை ஏற்றதும் நமக்கு நல்ல காலமே.

இதன் அடுத்த கட்டம் என்ன என்னும் விவாதங்கள், புதிய கருத்துகள் திட்டங்கள் உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் மிகவும் துரதிஷ்டவசமாக ‘மக்களிடம் இது சென்று சேருகிறது’ என்னும் பிடிமானம் கிடைத்த உடன் களத்தில் இறங்கி மக்களின் ஊழல் ஒழிப்பு ஆர்வத்தை ஓட்டுகளாக அறுவடை செய்ய முனைந்தார் கேஜ்ரிவால். அதைக் கூட இன்னும் சற்று பொறுமையாக, சாணக்கியத் தனத்துடன் செய்திருந்தால் அவர் ஏறிய அரியணையில் நீண்ட நாள் இருந்திருக்கலாம். அவர் ஒரு தலைவரே அல்லர். எனவே இத்துடன் இந்த விஷயத்தை விட்டு விடுவோம்.

ஞாநி உட்பட பல படித்த நடுத்தர மக்கள் கவனிக்காமல் விட்ட விஷயம் ஒன்றுதான். ஊழல் ஒழிப்பு வேறு – படித்தவர்கள் அரசியலுக்கு வருவது வேறு.

படித்தவர்கள் அரசியல் செய்தால் மேடைப் பேச்சு சற்று நாகரிகமாக மாறலாம் என்பதைத் தவிர பெரிய மாற்றம் எதுவும் வந்து விடாது. அவர்கள் பதவியில் அமர்ந்தாலும் அதேதான். நிர்வாகத்தில் சிறிய மாற்றங்கள் வரலாம். ஊழல் ஒழிப்பை ஆட்சியில் இருப்பவர் ஒரு அளவுக்கு அமல் படுத்தலாம்.

“முதல்வன்” சினிமா பாணியில் எதையும் நிகழ்த்த முடியாது.

அடிப்படையில் மக்களிடம் ஊழல் ஒழிப்பு மட்டுமே வளர்ச்சிக்கு வழி – முன்னேற்றத்துக்கு வழி என்னும் தெளிவான புரிதலும் விழிப்புணர்வும் வேண்டும். இதை அரசு – அரசியல்வாதி- ஆளும் கட்சி இவர்கள் முன்னெடுக்க முடியவே முடியாது. (ஆளும் கட்சி- அரசு யந்திரம் இவர்கள் மின்னணு முறையில் ஓரளவு ஊழலைக் கட்டுப் படுத்தலாம். அவ்வளவே). ஏனெனில் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அதிகாரத்துக்கும் பணத்துக்காகவும் மட்டுமே அரசியலில் சுற்றித் திரிபவர்கள். எதிர்க்கட்சி பெரிய ஊழல்களை சுட்டிக்காட்டி ஓரளவு மக்கள் பணம் கொள்ளை போகாமல் காக்கலாம்.

ஆனால் பலவேறு மட்டத்தில் அரசு யந்திரத்தில் இருக்கும் ஊழலை ஊடகங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் மட்டுமே விடாப்பிடியாக எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி காலப் போக்கில் ஊழல் முதலில் மட்டுப்பட்டு, பின் கட்டுப்பட்டு பிறகு அறவே நீங்கும்.

சமூகத் தலைவர்கள் இரு வகையாகத் தென்படுவார்கள். மதம் சம்பந்தமான புரோகிதர், கோயில் நிர்வாகி, மவுலவி, பாதிரியார் இத்யாதி. ஜாதித் தலைவர்கள் முக்கியமான சமூகத் தலைவர்கள். இவர்கள் பெரியவர்களுக்கு. இளைஞர்களுக்கு சினிமா நடிகர், கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பான சமவயது இளைஞர்கள் இவர்களே தலைவர்கள்.

நான் குறிப்பிட்ட எல்லோரும் ஒரே முகமாக ஊழல் பணம் கேவலமானது. ஊழல் எண்ணம் மட்டமானது என்னும் விஷயத்தை எல்லோர் மனதிலும் பதியச் செய்ய வேண்டும்.

இணையாக பெண்களை கௌரவமாக நடத்துவது பற்றி அழுத்தம் தர வேண்டும்.

மூத்த பத்திரிக்கையாளர் ஞாநி கண்டிப்பாக ஒப்புக் கொள்வார் – இவை அரசியல்வாதியின் வீச்சுக்கு அப்பாற்பட்டவை.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s