பாவண்ணனின் சிறுகதை “கல்தொட்டி”


images

பாவண்ணனின் சிறுகதை “கல்தொட்டி”

“அம்மி கொத்துறது உரல் கொத்துறது” என்று ஒரு உளி மற்றும் கருவிகள் உள்ள சாக்குப் பையுடன் திரியும் கைவினைஞரை நாம் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் காண முடியும். பெரு நகரங்களில் அப்படி ஒரு தொழில் இருப்பது அபூர்வம். அனேகமாக “கிரைண்டர்” என்னும் சாதனம் வீட்டில் இருக்கும். அதன் கல் மழுங்கிப் போனாலும் அதை சேவை மையத்துக்குத்தான் எடுத்துப் போவார்கள்.

பாவண்ணனின் சிறுகதையில் நாம் கல் தொட்டியை பண்ணை வீடுகளில் செய்து தரும் ஒரு திறமையான கைவினைஞரைக் காண்கிறோம். ஒரு பண்ணையாரின் 10 வயது மகனின் மூலம் இந்தக் கதை சொல்லப் படுவதால் நாம் ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு ஒரு கல் தொட்டியின் பின்னணியில் உள்ள கிராமப் புரப் பண்பாட்டையே புரிந்து கொள்கிறோம். இரண்டு இடங்கள் நம் மனதை வருடுகின்றன. வீட்டின் மூத்த பெண்மணி “கல் தொட்டி சொற சொறவென்று வந்து விடக்கூடாது” என்னும் போது “யாருடையை கையையும் பதம் பார்க்காத படி செய்து தருகிறேன்” என்கிறார் தொழிலாளி. அதற்கு அந்த அம்மாள் “வாயில்லாத ஜீவனோட நாக்கு புண்ணாகி விடக் கூடாது” என்று மாய்கிறார். மற்றொரு இடத்தில் தொழிலாளி அந்தச் சிறுவனிடம் சிற்பி தான் உயர்ந்தவர் கல்தொட்டி செய்யும் கொத்து வேலை ஒன்றுமே கிடையாது என்று விளக்குகிறார். அந்தத் தொழிலாளிக்குக் குடும்பமில்லை. தனிக்கட்டை. தன் பணியை அவ்வளவு நேசிக்கிறார். மூன்று நாள் தங்கி மாடுகளுக்கு என இரண்டு தொட்டி செய்து தருபவர் “துரைமார்கள்” போல சிறுவன் குளிக்கட்டும் என்று அவனுக்கு குளியல் தொட்டி ஒன்றும் செய்து தருகிறார். வேலையை மிகவும் வளர்த்தி விட்டானே என்று முணுமுணுப்போடு பண்ணையார் இறுதியில் கூலி தரும் போது மிகவும் வற்புறுத்திய பின்பே பணத்தை எடுத்துக் கொள்கிறார். எடுத்துக் கொண்டு மறைகிறார் தொழிலாளி.

நான் கல்லூரியில் படிக்கும் போது கால் முறிவால் வீட்டில் அடைபட்டிருந்தேன். அப்போது ஏழடி உயரம் மிக்க ஒரு தொழிலாளி எங்கள் வீட்டில் இருந்த மரப்பலகைகளை வைத்து ஒரு மேஜை செய்தார். கால ஓட்டத்தில் எத்தனையோ என் கை நழுவி விட்டன. இன்னும் அந்த மேஜையை மட்டும் தக்க வைத்துள்ளேன்.

இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளி அவர். அந்தக் காலத்தில் எங்கள் துறையூருக்கு இலங்கையிலிருந்து வந்தவர்கள் எல்லாம் பண்ணையார்கள். நல்ல வசதியுடன் வாழத் துவங்கியவர்கள். இவரோ மிகவும் வறியவராக இருந்தார். தனி ஆளாக மரத்தை இழை இழை என்று இழைப்பார். அளவுகளை சரியாக எடுத்து ஒரு மேஜை மற்றும் இழுப்பறையை அற்புதமாகச் செய்து முடித்தார். மதிய உணவு மட்டும் தான் அவருக்கு ஓய்வு நேரம். “தொரைமாருங்களுக்கு நெறைய சரிக்கட்டிக் கொடுத்திருக்கன். அது போல உங்களுக்கும் சரிக்கட்டுவன்” என்பது போன்ற பாஷை எனக்கு வியப்பாக இருந்தது. இலங்கை வாழ் தமிழர்களில் மலையகத் தமிழர் நிலை பற்றி எனக்குப் பிடிபட நெடுங்காலம் ஆனது.

பாவண்ணன் கதையில் நாம் தொழிலை நேசிக்கும் இயற்கையுடன் ஒட்டிய வாழ்வு வாழும் ஒரு கிராமியப் பண்பாட்டை உள்வாங்குகிறோம். கல் தொட்டி ஒரு படிமமாக வருகிறது. கல் தொட்டி செய்ய ஆகும் உழைப்பு மிக அதிகம். ஆனால் அது பயன் படும் காலமோ மிகமிக அதிகம். கால ஓட்டத்தில் அந்த உழைப்பாளியின் முகம் நமக்குக் கண்டிப்பாக மறந்து விடும். சிமெண்ட் பயன்பாட்டுக்கு வந்த பின் இந்தக் கைவினையே காலாவதியானது. பல விழுமியங்கள் நம் சமூகத்தில் காலாவதியானது போல. பாவண்ணன் புனைகதை எழுத்து, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனப் பன்முகமாக தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்து வருபவர். ஜூன் 2014 இதழில் வெளியிட்ட ‘உயிர்மை”க்கு நன்றி.

(image courtesy: google)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to பாவண்ணனின் சிறுகதை “கல்தொட்டி”

  1. MUTHUVEL says:

    //வேலையை மிகவும் வளர்த்தி விட்டானே என்று முணுமுணுப்போடு பண்ணையார் இறுதியில் கூலி தரும் போது பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு வேட்டி வெற்றிலைப்பாக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மறைகிறார் தொழிலாளி.//

    அப்படி எழுதப்பட்டிருக்கவில்லையே. பண்ணைக்காரர் வற்புறுத்தி பணம் தருகிறார். தொழிலாளியும் பணம் பெற்றுக்கொள்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s