சிந்தனை வறட்சியைக் காட்டுகிறது இந்தி எதிர்ப்பு


download

சிந்தனை வறட்சியைக் காட்டுகிறது இந்தி எதிர்ப்பு

60களில் மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த காங்கிரஸ் அரசுகள் ஹிந்தி எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் கட்டாயம் என்று அறிவித்தன. பல பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க ஆசிரியரே இல்லை என்னும் நிலை. அப்போது ஹிந்திக்கான தேவையும் இல்லை. வட இந்தியாவுக்கு தென்னிந்தியாவிலிருந்து போக நிறைய பேர் முன் வராத காலம். எத்தனை பேர் வட இந்தியாவுக்குப் பயணம் செய்தார்கள் என்பதே பெரும் கேள்வி. எனவே அப்போது இந்தியைக் கட்டாயமாக்கியது திணிப்பு. அதை எதிர்த்த பின்னும் அடக்குமுறையை பிரோயிகித்தது தமிழ் நாட்டின் மனதை டெல்லி புரிந்து கொள்ளாததற்கு அடையாளம்.

ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ராஜீவ் காலத்தில் ‘நவோதயா’ என்னும் பள்ளிகள் சிபிஎஸ்ஸி பாட முறையில் மத்திய அரசு செலவில் மாவட்டம் தோறும் திறக்கப்பட்டன. ராஜீவ் காலத்துக்குப் பின்னும் அது தொடர்ந்தது. ஆனால் தமிழ் நாட்டில் ஹிந்தியைக் காரணம் காட்டி அந்தப் பள்ளிகள் வேண்டாம் என்னும் நிலைப்பாடு எடுக்கப் பட்டதால் நட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கே. கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு ஒப்புதலுடன் சிறு நகரங்களில் மற்றும் கிராமப் புறங்களில் சிபிஎஸ்ஸி பள்ளிகள் பெருகி வருகின்றன. அங்கே ஹிந்தி கற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு.

தமிழ்ப் பெண்கள் எப்படி சூடிதாரை ஏற்று அதையே முக்கிய உடை ஆக்கி விட்டார்களோ அதே போல் தமிழ் ஆண்கள் இந்தியை எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இன்று எந்த ஒரு ஜாதிக்கார அப்பாவின் கனவு ஒன்றே ஒன்று தான். தன் மகன் பொறியியல் பட்டப் படிப்பு முடிக்கும் மூன்றாம் வருடமே அவனுக்கு தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை கிடைக்க வேண்டும். அவன் வட நாட்டில் வேலை பார்க்க வாய்ப்பு உண்டு. வட இந்தியருடன் வேலை பார்க்க வேண்டியும் இருக்கும். அதனால் அவன் இந்தி கற்பதே நல்லது என்றே அவர் நினைக்கிறார்.

வட நாட்டு மற்றும் வங்காள் ஏழைத் தொழிலாளிகள் ஏகப் பட்ட பேர் தமிழ் நாட்டில் இப்போது வேலை செய்கிறார்கள். ஹிந்தி தினசரிகள் இப்போது பெட்டிக் கடைகளில் கிடைக்கின்றன.

60 களை ஒப்பிட இன்று இந்தி கற்பதற்கான தேவையும் அதிகம். அதைக் கட்டாயமாக்க வாய்ப்பே இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.

தமிழ் மக்களின் மனப்பாங்கையே புரிந்து கொள்ளாத இந்தக் கட்சிகளின் சிந்தனை வறட்சி வெளிப்படையானது.

மறுபக்கம் இதே அரசியல் கட்சிகள் இரண்டு தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசுவது குறித்துக் கவலை கொள்ளுவதே இல்லை. இரண்டு தமிழர்கள் எப்போதாவது ஆங்கிலத்தில் பேசுவது வேறு. ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்று நினைத்து அப்படி ஒரு வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவது வேறு.

மொழியின் அடிப்படையில் அடையாளம் காட்டுபவர்கள், மத வெறியர்கள் மற்றும் ஆணாதிக்க சிந்தனை கொண்டோர்கள் இவர்களின் மனப்பாங்கு ஒன்றேதான். தன் தாய்மொழி வளப்பட வேண்டும் என்பவன் முதலில் செய்ய வேண்டியது பல அறிவியல் தொழில் நுட்ப மற்றும் இலக்கிய நூல்களைத் தமிழில் பதிப்பிப்பதே. அடுத்தது நல்ல தமிழ் எழுதத் தெரிந்தவர் எண்ணிக்கை அபாயகரமாகக் குறைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ் நூல்களை இந்தியில் கொண்டு வந்து அதை இந்தி பேசும் மக்கள் படித்து தமிழர் பண்பாட்டைப் புரிந்து கொண்டு மதிக்க வழி ஏற்படுத்த வேண்டும்.

ஹிந்தித் திணிப்பை என்றுமே யாருமே தமிழ் நாட்டில் செய்ய முடியாது. இது எளிய உண்மை. ஆனால் ஆங்கில வழிபாட்டை யார் தடுத்து நிறுத்துவது? நல்ல ஆங்கிலம், நல்ல தமிழ் இந்தி இவை எல்லாவற்றையும் எல்லோருமே தேவையான அளவு கற்க வழி இருக்க வேண்டும். திணிப்பு கூடவே கூடாது. தேவையில்லாதோர் நல்ல தமிழ் மட்டுமாவது கற்றுத் தன் தாய் மொழிப் பற்றை வெளிப்படுத்த வேண்டும்.

(image courtesy wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged . Bookmark the permalink.

2 Responses to சிந்தனை வறட்சியைக் காட்டுகிறது இந்தி எதிர்ப்பு

  1. வேகநரி says:

    சிறந்த கருத்து.

  2. பட்டறிவாளன் says:

    //அவன் வட நாட்டில் வேலை பார்க்க வாய்ப்பு உண்டு. வட இந்தியருடன் வேலை பார்க்க வேண்டியும் இருக்கும். அதனால் அவன் இந்தி கற்பதே நல்லது என்றே அவர் நினைக்கிறார்.// அப்படி எல்லாம் இல்லை. மாணவர்கள் ஆங்கில வழி நுட்பியல் கல்வி பயின்றாலும், கலந்துரையாடும் அளவு மொழிக்கல்வி பயிற்சி இல்லாதது பெரும் குறையாகும். அதிலும் வட நாட்டவர்களின் (ஐஐடி போன்ற மரியாதைக்குறிய கல்லூரி மாணவர்கள் உட்பட) குறுகிய மனப்பான்மை பன்நாட்டு அலுவல் சூழ்நிலைக்கு இலாயக்கு அற்றதாகும்.

    பெற்றோர்கள் தெளிவுடனேயே உள்ளார்கள். வெற்றிகரமான நிறுவனங்கள் வெறும் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியம் தறாமல், சமூக அக்கறையும் கொண்ட மாணவர்களையே விரும்புகிறார்கள் என்று தெரிந்து வைத்துள்ளார்கள். வேறு தாய் மொழியைக் கொண்டவர்கள், தம்மொழிகளிலுள்ள நன்னெறி நூல்களையும் மேலைநாட்டு சமத்துவத்தையும் தெரிந்துகொள்வதைவிட்டு, மற்றும் ஒரு பாடமாக இந்தி கற்றுகொள்வதால் அவர்கள் சிந்தனை மேலும் மழுங்கிதான் போகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s