Monthly Archives: July 2014

குழந்தைகள் பலியாகும் விபத்துகள் மட்டுமே கவனம் பெறுகின்றன


குழந்தைகள் பலியாகும் விபத்துகள் மட்டுமே கவனம் பெறுகின்றன கும்பகோணம் தீவிபத்து நடந்து 10 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகள் இவர்களே என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஊடகங்களில் மிகுந்த கவனமும் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் குழந்தைகள் உயிரழக்கும் விபத்துகளைக் காண்கிறோம். இரு வாரங்கள் முன்பு தெலுங்கானா பகுதியில் ஆளில்லாத தண்டவாளம் தாண்டும் இடத்தில் ஒரு ஓட்டுனரின் அலட்சியத்தால் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

சாபம் -கவிதை


என்னுடைய முதல் கவிதை இது. இதற்கு என் பள்ளித் தோழர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாராட்டு நிறைய கிடைத்தது. பதின்களில் நான் எழுதிய கவிதை எப்படி இன்னும் அப்படியே என் நினைவில் இருக்கிறது என்பது வியப்புதான். இந்தக் கவிதைக்கு நான் என்ன தலைப்பு வைத்தேன் என்று நினைவில்லை. இந்தத் தலைப்பை என் அண்ணன் வைத்தார். பிறகு … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

தவளை தன் பலம் அறியும்


தவளை தன் பலம் அறியும் Wood frog என்னும் வகையான தவளை ஏழு மாதங்கள் உறைந்து போய் விடுகிறது. கிட்டத்தட்ட சுவாசம் இல்லை. வேறு எந்த உயிர்த்துடிப்பும் இருக்காது. ஆனால் குளிர் முடிந்து வசந்த காலம் வரும் போது துள்ளிக் குதித்து உறைபனியிலிருந்து வெளி வந்து விடும். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இதைக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக – நிறைவுப் பகுதி


ஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக – நிறைவுப் பகுதி என்ன அந்த அதிர்ச்சி? “வாக்குமூலம்” என்ற தலைப்பில் ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் ஒரு பகுதியில் “நான் உரிய வயதில் என் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்னும் சாதிப் பெயரையும் சேர்த்துக் கொள்வேன்” என்று குறிப்பிட்டார். இது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Leave a comment

ஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக -1


ஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக சுமார் 20 ஆண்டுகள் முன்பு கலை பற்றிய அணுகுமுறையில் இரு சிந்தனைப் பள்ளிகள் இருந்தன. “கலை கலைக்காக” என்று ஒரு தரப்பு. “கலை சமுதாயத்துக்காக” என்பது எதிர்த்தரப்பு. (இப்போது இடதுசாரிகள், வலதுசாரிகள், தலித் இலக்கியம் என்று மூன்றாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். ) ஒரு கலைஞன் தன் கலையை ஒரு … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | Leave a comment

தமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்


தமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு எல்லாத் “தமிழ் இனக்காவலர்களும்” வேட்டி கட்டியவரை உள்ளே ஏற்காத ‘கிளப்’புகளைப் போட்டுத் தாக்கி விட்டார்கள். முதலமைச்சர் சட்டப்படி இதை சரி செய்வதாகச் சொல்லி விட்டார். ‘கில்லி’, கபடி, மஞ்சுவிரட்டு இதைத் தவிர வேறு எதையும் ஆடக்கூடாது என்று இனக்காவலர்கள் சொல்லவில்லை. அந்த … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | 1 Comment

கடத்தப் பட்ட மாணவிகளை மீட்க மலாலாவின் முயற்சி


கடத்தப் பட்ட மாணவிகளை மீட்க மலாலாவின் முயற்சி தமது பிறந்த நாளன்று நைஜீரிய அரசின் அதிபரை சந்தித்து கடத்தப்பட்ட 219 நைஜீரிய சிறுமிகளை மீட்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக்குச் சென்றதற்காகத் தாலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்ட மலாலா குணமாகி உலக அளவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடுவோரில் முக்கியப் பங்காற்றுகிறார். நைஜீரியாவில் ஏப்ரலில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா?


பாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா? டெல்லியில் நிர்பயா என்னும் பெண் பாலியல் பலாத்காரத்தாலும் வன்முறையாலும் உயிரிழந்த போது குற்றவாளிகள் ஒருவர் சிறுவன் அதாவது 18 வயது நிரம்பாதவன் என்பது தெரிந்தது. அப்போதே பாலியல் வன்முறையில் சிறுவன் பெரிய ஆள் என்னும் பேதம் பார்க்க வேண்டாம் என்று ஒரு கருத்து எழுந்தது. இன்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 4-நிறைவுப் பகுதி


நிறைவுப் பகுதியைத் தொடங்கும் போது வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டும். ஒரு புதிய கோணத்தில் ஒரு ஆளுமை அல்லது பிரச்சனை அலசப் படும்போது அது எரிச்சலூட்டலாம். அதன் மீது உள் நோக்கம் கற்பிக்கலாம். அதிகம் கோபம் வந்தால் கொச்சைப் படுத்தலாம். (இருவருமே பண்பட்ட பரிவர்த்தனைக்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் அப்படி செய்யப் போகிறார்கள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | 2 Comments

சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 3


சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 3 ஜெயமோகன் என்னும் படைப்பாளி குறித்த விமர்சனங்கள் அவரது பிரதிகளைப் பற்றியதாகவே அமைய வேண்டும். ஆளுமைகளை மையப் படுத்தி வாசிப்பும் விமர்சனமும் செய்யும் போக்கு குறுகியது. அவரது நாவல்களுக்காகவும் அவரது சிறுகதைகளில் ‘அறம்’ என்னும் தொடரில் வந்தவற்றுக்காகவும் அவர் தனி இடம் பெறுபவர். இந்தக் கட்டுரை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , | 1 Comment