அரசியலில் எதுவும் சகித்துக் கொள்ளப்படுமா?
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி பாரளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சியினருக்கு மிக மோசமான ஒரு வன்முறை எச்சரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சியினர் குடும்பப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் படுவார்கள் என்னும் எச்சரிக்கை அது. ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அவர் சார்ந்த கட்சி அவரை நீக்க முன்வரவில்லை.
இது மிகவும் அதிர்ச்சி அளிப்பது. ஒரு பெண் தலைவராக இருக்கும் கட்சியில் நான் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்த்தேன். ஆனால் அவரே இதை எளிதாகத் தள்ளுபடி செய்வது நம் அரசியல்வாதிகள் எந்த அளவு அநாகரீகத்தை, வன்முறையை, கீழ்த்தரமான ஆட்களை சகிக்கப் பழகி விட்டார்கள் என்பதையே காட்டுகிறது.
இப்படிப்பட்ட ஆட்களால் படித்தவர்கள், பண்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்க இன்னும் அதிக வாய்ப்பு ஆகும். கட்சித் தொண்டர்களில் நல்ல பண்புடையவர்கள் இருக்கும் வாய்ப்பு இன்னும் குறையும். அரசியலின் தரத்தையே உயர்த்த ஈடுபாடில்லாத தலைவர்கள் நாட்டுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்கள்?
(image courtesy:123rf.com)