சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 4-நிறைவுப் பகுதி


7
நிறைவுப் பகுதியைத் தொடங்கும் போது வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டும். ஒரு புதிய கோணத்தில் ஒரு ஆளுமை அல்லது பிரச்சனை அலசப் படும்போது அது எரிச்சலூட்டலாம். அதன் மீது உள் நோக்கம் கற்பிக்கலாம். அதிகம் கோபம் வந்தால் கொச்சைப் படுத்தலாம். (இருவருமே பண்பட்ட பரிவர்த்தனைக்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் அப்படி செய்யப் போகிறார்கள் என்று கூறவில்லை).

அப்படி எந்த எதிர்வினை வந்தாலும் பரவாயில்லை. ஒரு புதிய பரிமாணத்தை நாம் அந்த ஆளுமையைப் பற்றிப் புரிந்து கொள்கிறோம். அது மேம்பட்ட புரிதலுக்கே வழிவகுக்கிறது.

” திருவண்ணாமலையில் பல சித்தர்கள் / ஞானிகள் இருந்தார்கள் இருக்கிறார்கள். நமக்குத் தெரிந்தவர்கள் ரமணர் – விசிறி சாமி” என்னும் கருத்தைப் பலரும் கூற நான் கேட்டிருக்கிறேன். அரசியல் தளத்தில் வந்தால் எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர் வீராங்கனைகள் பெயர் தெரியாமலேயே உயிரையே நீத்திருக்கிறார்கள். சிற்பங்களை ஆக்கியவர் பெயர் எந்தக் கோயிலிலுமே இல்லை. இவர்கள் கலைஞர்கள் தானே? அந்தத் தியாகிகள் சான்றோர் தானே? ஒருவர் கவனம் பெறுவதும் பெறாமற் போவதும் நடப்புகளில் ஒன்றே. ஆனால் பங்களிப்பு செய்த பலருமே ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தியவர்கள்.

ஒருவர் தன்னை ஒரு நிறுவனமாக, பிரம்மாண்டமாக நிறுவிக் கொள்ளும் போது அது வணிக ரீதியான காரணங்களுக்காக இருக்கலாம். உதாரணம் நடிகர்கள். ஒரு இதழியலாளர் மற்றும் ஒரு எழுத்தாளர் இதைச் செய்யும் போது (அதுவும் வணிக ரீதியான காரணம் இல்லாமல் செய்யும் போது) அது சமூகத்தின் மீது “தன் பிராண்டில்” பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமே என்றே நாம் புரிந்து கொள்ள முடியும். தனது காலம் ஒரு சகாப்தமாகத் தன் பெயரில் கொண்டாடப் பட வேண்டும் என்னும் ஒரு ஆசையையே காட்டுகிறது. இந்த ஆசை தவறானதில்லை. ஆனால் இதற்கு செய்யும் உழைப்பை ஆக்கபூர்வமான வழியில் செலுத்தி இருக்கலாம்.

இதை ஒரு உதாரணத்துடன் கூறி இந்தத் தொடரை நிறைவு செய்யலாம்.

காரைக்குடியில் கம்பன் கழகம் இருக்கிறது. இந்த அமைப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வருடாந்திரம் பட்டிமன்றங்கள் மூலம் கம்பராமாயணத்தை நாம் மேலும் புரிந்து ரசிக்க வைக்கிறது.
வானொலியில் “கம்பன் வாழ்க. கம்பன் புகழ் வாழ்க. கன்னித் தமிழ் வாழ்க” என்று இசை நயத்துடன் வாழ்த்தி அவர்கள் நடத்தும் காவியச் சுவை மிக்க பட்டிமன்றங்களை பலரும் கேட்டிருப்போம். நான் பள்ளிப் பருவத்தில் சோ.சத்தியசீலன் என்பவரின் பேச்சை மிகவும் ரசித்துக் கேட்பேன். ஒரு நபர் பெரும் கவனம் நீண்ட கால நன்மை எதையும் பயக்காது. ஒரு அமைப்பு மட்டுமே சமூகத்தில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நிறுவனத்தின் பணி பலரையும் ஈர்த்து அந்த நோக்கத்துக்கு மிகுந்த ஆதரவைப் பெற்றுத் தரும். காலச்சுவடு பல இலக்கியப் பத்திரிக்கைகள் தோன்றக் காரணமாய் அமைந்தது. தீரா நதி என்னும் இதழை குமுதம் துவக்க அதுவே காரணம். காலச்சுவடு நடுநிலையான இதழ் என்றோ அல்லது எல்லா இலக்கியவாதிகளையும் ஒன்று படுத்தும் புள்ளி என்றோ நான் கூற மாட்டேன். நிறையவே விமர்சிக்க வேண்டிய போக்கு அதனிடம் உண்டு. ஆனால் ஒரு நிறுவனம் என்பதால் அது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இதையே சுந்தர ராமசாமி என்னும் தனி நபர் தன்னை மையப்படுத்தும் போக்கைக் கைக் கொண்டிருந்தால் அது இன்று பெறும் கவனமும் மரியாதையும் சாத்தியமே ஆகி இருக்காது.

நவீன இலக்கியத்தில் ஆளுமைகள் சார்ந்த தனித்தனி அமர்வுகள் உதிரியாக நடக்கின்றன. நவீன இலக்கியம், சிறு பத்திரிக்கைகள் இவற்றை வாசித்து விவாதிக்கும் அமைப்பு ஒன்று உருவாகவே இல்லை. இதை ஜெயமோகன் போன்ற ஆளுமை முன்னெடுத்தால் இதற்கு வடிவம் தர பல எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர் ஒன்று சேர்வார்கள். இதில் வலதுசாரி, இடதுசாரி , தலித் எனப் பிரிந்திருக்கும் எழுத்தாளர்கள் கூடி, பல விவாதங்களைச் செய்யலாம். வருடா வருடம் புத்தகக் கண்காட்சியை ஒட்டி இதை நடத்தலாம். இதை ஆக்கபூர்வமான ஒரு உதாரணத்துக்காகக் குறிப்பிடுகிறேன். சோ தூய்மையான அரசியலுக்கான ஒரு பெரிய அமைப்பை ஏற்படுத்தி சமீபத்தில் அன்னா ஹஸாரே தலைமை ஏற்ற அமைப்புடன் இணைந்திருக்கலாம். (சோவுக்கே பரிந்துரை செய்யுமளவு துணிவு எனக்கு!)

கிரிக்கெட் விளையாட்டில் பல முறை நடப்பது இது. தொலைக்காட்சியில் ஒரு நட்சத்திர வீரர் விளையாடும் போது அவர் ஒரு பொருளை விளம்பரம் செய்வது போன்ற விளம்பர ஒளிபரப்பு வரும். அவர் உலகத்தில் ஏற்கனவே எல்லா சாதனைகளையும் முறியடித்தவர். இனி அவர் கிரிக்கெட் உடைகளை எத்தனை முறை அணிந்தாலும் அதுவும் சாதனையே. அவ்வளவு சாதனையாளர்.பல சமயம் அவர் சரியாக விளையாடாமல் ‘அவுட்’ ஆகித் திரும்பிப் போன பிறகு அவர் பந்தாவாகத் தரும் விளம்பரம் அவரது பரம ரசிகர்களுக்கே அங்கதமாகத் தெரியும்.

(நிறைவுற்றது).

(image courtesy:http://kambantamilcentre.blogspot.in/2013_03_01_archive.html)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged . Bookmark the permalink.

2 Responses to சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 4-நிறைவுப் பகுதி

  1. sunaapaanaa says:

    //நல்ல முதிர்ச்சியும் கூர்மையான சிந்தனையும் உடைய ஒரு ஆளுமை தனக்குத் தரப் படும் எல்லா அடையாளங்களையும் பீடங்களையும் நிராகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இருவரும் வசதியாக அந்தப் பீடங்களில் மீது ஏறித் தானும் ஒரு கோபுர உயரமாகி நிறைவு பெற்று ஒளி வீசுகிறார்கள்.//

    ஏங்க ..வாசகர் வட்டம் வச்சு ஜெயமோகன் என்ன வைரமுத்து மாதிரி மணிவிழாவா கொண்டாடிக்கிராரு ? அது ஒத்த இலக்கிய சிந்தனை உள்ளவங்க பேசிக்கொள்வதற்கான இடம்..அது நிறுவனமோ பதவியோ அல்ல..

    ஜெயமோகன் இன்று இருக்கும் இடம் அவர் எழுத்தின் மேன்மையால் வாசகர்கள் அளித்தது …

    ஜெயமோகன் ஆராய்ச்சி இருக்கட்டும் ஐயா,

    நீங்க உங்கள் ப்லாகில் இப்படி போட்டுக்கொள்கிறீர்கள் :
    //
    a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
    //

    நீங்கள் யார் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சொல்லித்தான் வாசகர்களுக்கு தெரிகிறது.
    இலக்கிய உலகில் குறிப்பிட்டு சொல்லும் படியாக எதுவும் படைக்காத நீங்கள் உங்களுக்கு நீங்களே பெரீய கிரீடம் சூட்டிக்கொண்டு ஒரு மாபெரும் எழுத்தாளனை பீடத்திலிருந்து இறங்கச் சொல்லுகிறீர்கள்..நல்ல நகைச்சுவை…

    • தங்கள் எதிர்வினைக்கான பதில் கட்டுரையில் இருக்கிறது:
      “தனது காலம் ஒரு சகாப்தமாகத் தன் பெயரில் கொண்டாடப் பட வேண்டும் என்னும் ஒரு ஆசையையே காட்டுகிறது. இந்த ஆசை தவறானதில்லை. ஆனால் இதற்கு செய்யும் உழைப்பை ஆக்கபூர்வமான வழியில் செலுத்தி இருக்கலாம்.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s