யேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர்


993052_10151549973557998_269977177_n

யேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர்

நேற்று ஒரு தொலைக்காட்சியில் யேசுதாஸின் அரை மணிக்கும் மேலான நேர்காணலைப் பார்க்கக் கிடைத்தது. எப்படி இத்தனை வருடம் அவர் பற்றிய நினைவு அதிகமில்லாமல் இருந்தேன் என்று ஆச்சரியமாக இருந்தது. என் மகளுக்கு சிறந்த பாடல்களின் ஒரு பட்டியலை அனுப்பும் போது “குழலும் யாழும் குரலினில் ஒலிக்க” என்னும் பாடலை சேர்த்திருந்தேன். அதன் பிறகு அவர் பற்றிய நினைவு வரவில்லை.

தமிழில் பாடியவர்களில் பாடும் பாடலின் பொருளுக்கும் உள்ளார்ந்த உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பாடியவர்களில் யேசுதாஸும் பாலமுரளிகிருஷ்ணாவும் முக்கியமானவர்கள்.

செம்பை வைத்தியநாத பாகவதர் தம் மாணக்கருக்காக ஒரு கோவிலுக்கு உள்ளே அனுமதியில்லை என்று வெளியே வந்து அவருடன் கச்சேரி செய்தார். அந்த மாணவர் யேசுதாஸ். ஐயப்ப பக்தர் என்றாலே அவர்தான் நினைவுக்கு வருவார். அப்படியும் குருவாயூரில் கோயிலில் இன்று வரை அவர் அனுமதிக்கப் படவில்லை.

தாம் மதத்தைக் கடந்து வாழும் வாழ்க்கை பற்றி அவர் எப்போதுமே அடக்கமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். அவர் தனது கலையையும் தனது சொந்த வாழ்க்கையையும் இயல்பாக ஒரு சாதாரண மனிதனாகவே கொண்டிருந்தார். மதவாதிகளுக்கு அவர் ஒரு மௌனமான சவால். ஆனால் ஒரு அரசியல்வாதியாக (அதாவது இந்த அடிப்படையில் தனது ஆளுமையை பிரம்மாண்டமாக்கும் ஒருவராக) அவர் மாறவே இல்லை.

கர்நாடக சங்கீதத்தில் அதிக விவரமுள்ளவர்கள் அவர் திரும்பத் திரும்ப சில கீர்த்தனைகளையே பாடுகிறார் என்று விமர்சிப்பதையும் நான் கேட்டிருக்கிறேன். சங்கீதம் என்பது ஒரு கணிதபாடம் என்பது போலவே கர்நாடக சங்கீத ஞானிகள் விவாதிப்பார்கள். என்போன்ற ஞான சூன்னியங்களுக்கு இசை என்பது இதயத்தைத் தொட்டு அதை ஊடுருவி ஆன்மீக அனுபவமாவது. அதை நமக்கு யேசுதாஸ், பர்வீன் சுல்தானா, அமரராகிவிட்ட டாக்டர் எம் எஸ் சுப்புலட்சுமி ஆகியோர் உணர்த்தினார்கள்.

சித்சோர் என்று ஒரு ஹிந்திப் படம் ரவீந்திர ஜெயினின் இசையில் 80களில் வந்தது. மொழி தெரியவே வேண்டாம். யேசுதாஸின் இசையின் இனிமைக்கு அந்தப் படம் நல்ல உதாரணம். ஸ்வாமி என்று ஒரு படம் வந்தது. ஹிந்திதான். அதில் ” கா கரூன் சஜ்னி ஆயே நா பாலம்” என்னும் பாடல் உத்திரப் பிரதேச நாட்டுப்புற இசையை ஒட்டியது. பாடுவதற்கு எளிதானதே அல்ல. அதை அற்புதமாகப் பாடியவர் யேசுதாஸ்.

திருவான்மியூரில்தான் அவருக்கு வீடு. அங்கே கோயில் குளத்தை சுத்தம் செய்யும் பணி வந்த போது அவர் பங்கெடுத்து சிறப்பித்தார். கலைஞன் மதம் தாண்டிய நல்ல மனிதன் என்னும் அடையாளங்களுடன் வணங்கத்தக்க வாழ்க்கை வாழ்பவர் யேசுதாஸ்.

(image courtesy: face book)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

One Response to யேசுதாஸ் – மதபேதம் தாண்டிய அபூர்வக் கலைஞர்

  1. johan paris says:

    இவருடன் நாதஸ்வர மேதை ஷேக் சின்ன மௌலானா சாகிப், வட இந்திய செனாய் மேதை உஸ்ரத் பிஸ்மிலா கான் இவர்களையும் சேருங்கள்.
    முன்னவர் பிறப்பால் வளர்ப்பால் இஸ்லாமியராக இருந்த போதும், நம் இறைப் பாக்களை உணர்ந்து பாவத்துடன் வாசித்தவர்.
    பின்னவரும் இஸ்லாமியரே 7 தலைமுறையாக காசி விஸ்வநாதருக்கு சேவகம் செய்த குடும்பத்தில் வந்தவர்.உலகப் புகழ் மிக்கவர். காசியில் கூட்டுக்குடும்பமாக அவசௌகரியங்களுடன் வாழ்ந்தவரை அவர் வெளிநாட்டு ரசிகர்கள் அமெரிக்காவில் , தாம் சகல வசதியையும் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் செய்யச் சித்தமாக இருந்தபோது; “நான் உங்களுடன் வந்து இருக்க நீங்கள் செய்ய உள்ளதுடன் இன்னுமொன்றையும் செய்தால் உடனே வருவேன். அது இந்தக் காசி விசுவநாதர் கோவிலும் தனக்கு வேண்டுமென்றாராம்”

    மதத்துக்கப்பால் மதங்களை நேசித்த பண்பாளர்கள் இவர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s